Wednesday, July 29, 2009

பொங்கி வந்தாள் காவேரி


உரிமையென கேட்டும்
கொடுக்கவில்லை

போராடி பார்த்தும்
கிடைக்கவில்லை.

கதறி கேட்டும்
கருனையில்லை

உயிர்பிச்சை வேண்டி
உருகவில்லை

வறன்டது நாக்கு
வற்றியது வயிறு

வேறுவழி தேடி
கரை கடக்கையில்

பொங்கி வந்தாள்- காவேரி
நட்டாற்றில் நாங்கள்


Thursday, July 23, 2009

அசல் டாக்டருக்கும்,போலி டாக்டருக்கும் நன்றி

கடந்த ஞாயிறு அன்று அசல் டாக்டர் தேவன் சார் அலைபேசியில் அழைத்து மக்கா உனக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெட்டியை திறந்து பார் என்றார்.
நான் அலுவலக வேலையாக சென்னையில் இருப்பதால் பார்க்கமுடியவில்லை என்னவென்று சொல்லுங்கள் என்றேன்.சுவாரசியமான பதிவர் விருது கொடுத்துள்ளேன் என்றார். "என்னகொடுமை சார்" எனக்கு போய்
இந்த விருந்து கொடுத்துயிருக்கிங்க என்று கேட்டால்,நீ எழுதவதற்கு யாரவது இந்த விருது கொடுப்பார்களா? நீ போட்ட பின்னுட்டத்தில் வீட்டில் பின்னிபெடல் எடுத்த‌தை பார்த்த எனது குழந்தைகள் சுவாரசியமா இருக்குதுஎன்று மகிழுந்ததால், இந்த விருது வேறஏதாவது பெருச நினைச்சுட்டு நானும் ரவடிதான்னு சொல்லிக்காதே என்றார்.எது எப்படியோ நமக்கும் விருது கொடுக்கவேண்டும் என்று அவருடைய பெருதன்மைக்கு நன்றி.

அப்புறம் நம்ம பின்னுட்டம் என்னுடைய கற்பனைமட்டுமே அந்தமாதிரி எந்த அனுபவமும் அவருக்கு இல்லை என்பதை உறுதியாக சகலமானவருக்கும் சொல்லி கொள்ளகடமை பட்டுள்ளேன்.




அடுத்த நாள் பெட்டி திறந்து பார்த்தால் இன்னொரு இன்ப அதிர்ச்சி தன்னை
டாக்டராக பாவித்துகொண்டு பதிவு எழுதும் போலி டாக்டர் சுசி பட்டாம்பூச்சி விருதுயை கொடுத்துஇருக்கிறார்,ஏற்கெனவே பட்டாம்பூச்சி விருது கொடுத்த‌
கா.பா பதிவுலக‌நண்பர் என்ற முறையில் கொடுத்துஇருந்தார்,ஆனால் சுசிஅவர்கள் இளமைகாலங்கள் பதிவின்முலம்தான் முதன்முதலாக எனக்கு அறிமுகம் இரண்டு பின்னுட்டம் மட்டும்தான் அவருக்கு போட்டுயிருக்கிறேன்.அவர் எனக்கு விருது கொடுத்தது உண்மையிலே மகிழ்ச்சியான விசயம் இவர் கொடுத்தவிருதால் நானும் ரவடிதான்னு, மும்பை,சூரத்வாழ்
எதிர்கவுஜசங்க‌ நண்பர்களுக்கு சொல்லிகொள்கிறேன்.

இனிமேல் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் இல்லை தொடர்ந்து வருவேன்.
பதிவுலக பெரியோர்களே,தாய்மார்களே உயிரின்னும்மேலான.........(இடைதேர்தல்தான் உப்புசப்பு இல்லாமல் ஆகிபோச்சு இங்கயாவது பேசிகவேண்டியதுதான்)ஆகவே விருது கொடுத்த‌
அசல் டாக்டர் தேவன் சாருக்கும் ,போலி டாக்டர் சுசிக்கும் நன்றி

Monday, July 13, 2009

அரசியல்வாதி வாங்கினால் அன்பளிப்பு,அரசு ஊழியன் வாங்கினால்.......

மத்தியஅரசின் 2009 2010 பட்ஜெட்டில் அரசியல்கட்சிக்கு கொடுக்கும் அன்பளிப்புக்கு வருமானவரி விலக்கு அளித்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,அரசியல்வாதிகளுக்கு நன்கொடை கொடுக்கவேண்டும் என்றுசொல்லாமல் சொல்வதுபோல் உள்ளது என்பது மக்களின் கருத்து. அரசியல்வாதி வாங்கினால் அன்பளிப்பு, அரசு ஊழியன் வாங்கினால் லஞ்சமா? இதுநேற்று நான் சந்தித்த‌அரசு ஊழியரின் கேள்வி.

நிலம் வாங்கி கிரயம் செய்வதில் தொடங்கி,நிறுவனம் தொடங்கும்வரை பதிவுதுறை,
உள்ளாட்சிதுறை,வருவாய்துறை,மின்சாரதுறை,தொழில்துறை,என எல்லாதுறைக‌ளிலும் அவ‌ர்க‌ளுக்கு அனும‌தி வ‌ழ‌ங்க‌ சில‌ வேலைகளையும் அவ‌ர்க‌ளுக்கு செய்து கொடுப்ப‌த‌ற்கு நாங்க‌ள் ஏதாவ‌து வாங்கினால் ல‌ஞ்ச‌ம் வாங்குவ‌தாக‌ கூப்பாடுபோடுகிறார்க‌ள்,ஆனால் எந்த வேலையும் செய்யாமல்க‌ரைவேட்டிக‌ள் ர‌சீதுபுக் துக்கிகொண்டு வ‌ந்துவிட்டால் அன்ப‌ளிப்பு என்றுகொடுக்கிறார்க‌ள்,இத‌ற்கு இப்போது அர‌ச‌ங்கஅனுமதியும்கொடுத்துவிட்டார்கள் என நமதுஅரசங்க ஊழியர் நண்பர் புலம்பி அவர் கேட்ட கேள்விதான் பதிவின் தலைப்பு.

"அன்பளிப்பு வேண்டுவோர் சங்க மூலம் அனுகவும்" என்கிற அறிவிப்பு பலகைகளை எங்க‌ ஊரில் நீங்க‌ பார்க்க‌லாம் அந்த‌ அள‌வுக்கு நொந்த‌போன‌ நிறுவ‌ன‌ங்கள் இங்குஅதிக‌ம்,க‌ட்சி பாகுபாடுயின்றிஅனைத்துவிச‌ய‌த்திற்கும்,நிதி திர‌ட்டுவ‌தில் பலே கில்லாடிக‌ள்.இருச‌க்க‌ர‌வாக‌ன‌ நிதி வ‌சூல்புக் அடித்து பத்துச‌க்க‌ர‌ வாக‌ன‌ம் வாங்குஅள‌விற்கு வ‌சூல் செய்யும் சூர‌ர்க‌ள் நிறைந்த‌ ஊரில்,இந்த‌ அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.நிதி கொடுக்க‌ம‌றுத்தால் அதை ம‌ன‌தில் வைத்துகொண்டு லெட்டர்பேடுகட்சிகள்கூட‌ நடத்தும் ப‌ந்த்ச‌ம‌ய‌ங்க‌ளில்தாக்குத‌ற்கு ப‌ய‌ந்து ப‌ந்த‌ என்றாலே விடுமுறை என்று தொழிலாள‌ர்க‌ள் சுற்றுலாகிள‌ப்பும் அள‌விற்கு அன்ப‌ளிப்பு ஆட்டிப‌டைக்கிற‌து இங்கு,இனி வ‌ரி வில‌க்கு இருக்கிற‌து என்று சொல்லி தைரிய‌மாக‌ ரசீதுபுக் துக்கிகொண்டுவ‌ந்துவிடுவார்க‌ள் என்ற க‌வ‌லை இப்போதே ப‌ல‌ருக்கு வ‌ந்துவிட்ட‌து.


கட்அவுட் நிதியில் தொடங்கி கட்சிமாநாடு வரை நிதி கொடுக்கும் பெரும் தொழில்நிறுவனங்களுக்கு அந்த பணத்தை கணக்குகாட்டலாம் என்பது சிறிய‌ஆறுதல்,ஆனால் சிறு,குறு நிறுவனங்களுக்குதிண்டாட்டம்தான். ஆளும்கட்சி முத‌ல் லெட்ட‌ர்பேடு க‌ட்சிவ‌ரை இனி ர‌சீதுபுக்கை தூக்கிகொண்டு
வ‌சூல் வேட்டையில் இற‌ங்கிவிடுவார்கள்.இப்ப‌டி வ‌சூல் செய்து சேர்த்த ப‌ண‌த்தைதான் தேர்த‌ல் நேரங்க‌ளில் செல‌வு செய்கிறார்க‌ள்,ஆனால் ஏதோஇவ‌ர்க‌ள் கையில் இருந்துகொடுப்ப‌துபோல் ஓட்டுக்கு அவ்வ‌ள‌வு கொடுத்தோம்இவ்வள‌வு கொடுத்தோம் என‌ அள‌ப்பார்க‌ள்.இந்த‌ அறிவிப்பை பார்த்தால் அர‌சிய‌ல்க‌ட்சிக்கு தொழில்நிறுவ‌ன‌ங்க‌ள் ந‌ன்கொடை கொடுக்க‌வேண்டும் என்றும‌றைமுக‌ ச‌ட்ட‌ம் போட்ட‌மாதிரிதான் தெரிகிற‌து.

கோவில்திருவிழா நிதிவ‌சூல் செய்தால் திருவிழா முடிந்த‌பின் ஒருரூபாய் கொடுத்துயிருக்கிறேன் க‌ண‌க்குகேட்க‌ என‌க்கு உரிமையுள்ள‌து என்று ர‌வுசுவுடும் ம‌க்க‌ள்,இந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌ம் கண‌க்குகேட்ட‌ சரித்திர‌ம் உண்டா?இத‌னால்தான் ரசீதுபுக் அடித்து பொழ‌ப்புந‌ட‌த்தும் ஊருக்கு நாலுபேர் இனிதெருவுக்கு நாலுபேரகாக‌ மாறுவார்க‌ள்.

ந‌ன்கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ள் ந‌ன்கொடைவாங்குப‌வ‌ரிட‌ம் க‌ண‌க்கு கேட்கும் உரிமை உண்டு என‌ ச‌ட்ட‌த்தில் இட‌முள்ள‌து என்றுகூறுகிறார்க‌ள்,அப்ப‌டியான‌ல் அர‌சிய‌ல்க‌ட்சி வ‌சூலிக்கும் ந‌ன்கொடைக்கு க‌ண‌க்கு கேட்க‌ ச‌ட்ட‌த்தில் இட‌முள்ள‌தா?இது ப‌ற்றி நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தால் அரசிய‌ல் க‌ட்சிக்குவிள‌க்க‌ம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப‌வ‌ர்க‌ளா?இப்ப‌டி வ‌ழ‌க்கு தொட‌ருவார்க‌ள் என்ற‌ ப‌ய‌ம் வ‌ந்தால்தான் அவ‌ர்களும் கொஞ்ச‌மாவ‌து திருந்துவார்க‌ள் இல்லையெனில் இன்று நிறுவன‌ங்க‌ளில் வ‌சூல் வேட்டைநட‌த்துப‌வ‌ர்க‌ள் நாளைவீட்டிற்கு வீடு ந‌ட‌த்து கால‌ம் வெகு தொலைவில் இல்லை

Friday, July 3, 2009

சாதிகள் இருக்குதடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா! என்ற பாரதியின் பாடலை சொல்லிகொடுக்கும் பள்ளிகள்தான்,இன்று சாதி சான்றிதழ் இல்லையென்றால் அட்மிசன் கொடுக்கமுடியாது என்று சொல்கிறார்கள். .சாதிகள் ஒழிய அடிதளமாக விளங்கும் பள்ளிகளில் இந்தநிலை.சாதிகள் ஒழிக்கபட குழந்தைகள் மனத்தில் சாதிகள் பற்றிய சிந்தனைகள் இருக்ககூடாது என நினைத்தபாரதி இன்று இருந்துயிருந்தால் இப்படிதான் பாடியிருப்பரோ!

சாதிகள் இருக்குதடி பாப்பா!
சாதி சான்றிதழ் கொடுத்துவிடு பாப்பா,
இல்லையெனில் அட்மிசன் இல்லையடி பாப்பா,
இது அரசங்க உத்தரவடி பாப்பா.

இந்தியா சுகந்திரம் பெற்றபோது இடஒதுக்கிடு சட்டம் கொண்டுவந்தவர்கள் ஜம்பது ஆண்டுகளில் இடஒதுக்கிடு சதவீதம் குறைந்து சாதிகளஅற்ற சமூதாயம் உருவாகவேண்டும் என்று கன்வு கண்டார்கள்,ஆனால் இன்றோ18 சதவீதம் 69 சதவீதமாக உயர்ந்து சாதிகள் ஒழிக்கமுடியாதநிலை ஏற்பட்டுயுள்ளது.எழுத்திலும் பேச்சிலும் தீன்டாமைஒழிந்துவிட்டது, ஒடுக்கபட்டவர்கள் உயர்ந்துவிட்டார்கள்,சாதிகள் ஒழிந்துவிட்டது என்று கூறலாம்,ஆனால் சாதிகள் வளர்ந்து கொண்டுயுள்ளது என்பது எனது கருத்து, சந்தேகம் இருந்தால் அரசங்கம் வெளியிடும் பட்டியலை பார்த்தால்புரியும்.கலப்பு திருமணம் பெருகிவிட்ட இக்காலத்தில் சாதியை பற்றி பேசுவதாக என்னை குறைசொல்லவேண்டாம்,கலப்பு திருமணம் செய்தவர்கள் எத்தனை பேர் எனக்கு சலுகைவேண்டாம் இடஒதுக்கிடு வேண்டாம் என சாதிகள் இல்லை என்ற சொல்கிறார்கள். அவர்களில் எந்த சாதிக்கு சலுகை அதிகம் என்று பார்த்து அந்த சாதியை குறித்து சான்றிதழ் வாங்கதவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

16 ம் நூற்றாண்டுகளில் உருவான ஜந்துசாதிகள்,இன்று 500 மேற்பட்ட சாதிகளாக வளர்ந்துள்ளது,அதுமட்டும் இல்லாமல் பல உட்பிரிவுகளும் தோன்றி இன்னும் ஒழிக்கபடமால் இருப்பது வருத்தபடவேண்டிய விசயம்.ஆண்டுக்கு ஆண்டுக்கு பெருகிவரும் சாதிசங்களினாலும்,சாதி அடிபடையிலான இடஒதுக்கிடு இருக்கும்வரை ஒழிக்கமுடியாது நிலைதான் உள்ள‌து.பத்தாண்டுக்கு முன்னால் ஒரு வகுப்பினர் மூன்று எழுத்தைஇனைத்து கொண்டு நாங்கள் மலைஜாதியினர் என சலுகை அனுபவித்து பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு அவர்கள்பெற்ற சலுகை ரத்து செய்யபட்டது எல்லாம் இந்த சாதிசான்றிதழ் வாங்கிதான் என்பது நினைவுகொள்ளதக்கது,ஏன் இப்பொழுதுகூட உள்ளாச்சி தேர்தலில் தவறான‌ சாதிசான்றிதழ் கொடுத்து இட‌ஒதுக்கிடுவில் தேர்ந்துஎடுக்கபடுவதை தடுக்க தகுந்த சட்டமுன்வடிவு தாக்கல் செய்யபடும் என‌ சட்டசபை அறிவிப்பு சாதிசான்றிதழ் அவலத்திற்கு ஒரு சான்று.சாதிசான்றிதழ் இருந்தால் இட ஒதுக்கிடு பெறலாம் என்று வருவாய்கொடுத்து சான்றிதழ் வாங்கி சலுகைபெறுவதால்,உண்மையில் ஒடுக்க‌ப‌ட்ட‌வ‌ர்க‌ள் முன்னேற‌ இந்த‌ இட‌ ஒதுக்கிடு உத‌வியாக‌ இருக்கிற‌தா என்ற‌ கேள்வி எழுகிறது.

ஒடுக்கபட்டவர்கள்,கடைகோடி,மக்கள் முன்னேற இன்றைய காலகட்டத்தில் இந்த சாதிய இடஒதுக்கிடுவை தவிர்த்து பொருளாதாரா அடிபடையில் இட ஒதுக்கிடு கொண்டு வரவேண்டும் அதற்கு முதலில் பள்ளிகளில் சாதிசான்றிதழ் வாங்குவதை தடைசெய்யவேண்டும்,நம் தலைமுறைகள் சாதியில்லா தலைமுறையாக உருவாக்க கல்விசலுகை பெறதவர்கள்,வசதி வாய்ப்புள்ளவர்கள், சலுகை தேவையில்லை என சான்றிதழ் கொடுக்காமல் இருக்க வேண்டும்.உதட்டளவில் சாதிஒழிப்பு பற்றி பேசுபவர்கள் முதலில் அவர்கள் குழந்தகளுக்கு சாதியில்லை என‌ பள்ளிகளில் சேர்க்க முன்வரவேண்டும்,இவையெல்லாம் மக்கள் செய்ய முன்வந்தால் அரசங்கம் தனது கொள்கையை தளர்த்தி உண்மையில் ஒடுக்க பட்டவர்களுக்கு முன்னேற வழிஏற்படுத்தபடும் சூழ்நிலை உருவாகும்.

இந்த தலைப்பில் பதிவு எழுதவேண்டும் என்று நினைக்கையில்,நண்பர் கா.பா வின் சாதிகள் இல்லையடி பாப்பாவில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பின்னுட்டம்யிட்டபோது,சகோதரி உமா அவர்கள் இன்றயை காலகட்டத்தில் சாதிகளை பற்றி பேசுவதும்,எழுதுவதும் சரியல்ல என்றதால் இந்த பதிவை தவிர்த்துவிடலாம் என்று இருந்தேன்,ஆனால் எனது பையனை U.K.G சேர்ப்பதற்கு பள்ளிக்கு சென்றபோது,நுழைவுத்தேர்வு,நேர்முகதேர்வு என்று பெரும் போராடத்துக்கு பின்அட்மிசன் வாங்கவேண்டி இருந்தது, அதன்பின் அட்மிசன் அன்று சாதி சான்றிதழ் கொடுத்தால்தான் அட்மிசன் போடுவோம் என்று சொல்லிவிட்டார்கள். மெட்ரிக்குலேசன் பள்ளியில் இடஒதுக்கிடு கிடையாதே நீங்கள் ஏன் சான்றிதழ் கேட்கிறீர்கள் என்று நாம் கேட்டால் இது அரசங்கஉத்தரவு என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். அப்புறம் மெட்ரிக்குலேசன் ஆய்வாளர் வரை சென்று அட்மிசன் வாங்க வேன்டியதாகிவிட்டது. அப்போது கூட நான் சாதி சான்றிதழ் விரைவில் வாங்கிகொடுத்துவிடவேண்டும் என்ற உறுதி அளித்தபின் தான் அட்மிசன் போட்டார்கள். அதனால் ஏற்பட்ட அலைகழிப்பினால்,இதுபோல் நிகழ்வுகளால் சாதிகள் ஒழிய வாய்ப்பில்லை என்பதால் இந்த பதிவு