Sunday, November 29, 2009

அழகு=க‌ட‌வுள், காதல்=பணம்

சில‌ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு தொட‌ர்ப‌திவு எழுத‌என்னை சிலக‌விதைக‌ள் உமா அழைத்திருந்தார்.சில‌மாத‌ங்க‌ளாக‌ இந்த‌ ப‌திவுல‌க‌ம் ப‌க்க‌ம் வ‌ர‌முடியாத‌ கார‌ண‌த்தாலும் சில‌ப‌ல‌ வேலைப‌ளு கார‌ண‌மாக‌வும் எழுத‌முடியாம‌ல் இருந்த‌து.ச‌னிக்கிழ‌மை அன்று திருப்பூர் மாந‌க‌ருக்கு வ‌ருகை புரிந்த‌ ம‌துரை மாந‌க‌ர‌ வ‌லைப‌திவர்கள் ஒருங்கினைப்பாள‌ர் கார்த்திகைபாண்டிய‌ன் அவ‌ர்க‌ள் என்னிட‌ம் பேசிகொண்டுஇருக்கும்போது,உமா க‌விதைக‌ள் ம‌ட்டும்தான் எழுதுவார்,அவ‌ரே அதிச‌ய‌மா தொட‌ர்ப‌திவு எழுதி உங்க‌ளை அழைத்துயிருக்கார் அதை அல‌ட்சிய‌ப‌டுத்த‌மால் சீக்கிர‌மா ப‌திவு போடுப்பா என்று திட்டிய‌பின்தான்என‌க்கு
புரிந்தது. அவ‌ர‌து அழைப்பை ஏற்று எழுத‌மால் இருப்ப‌து அவ‌ரை அல‌ட்சிய‌ப‌டுத்திய‌து போல்
ஆகிவிடும் என்ப‌தால் காலம்தாழ்த்திய‌ இந்த‌தொட‌ர்ப‌திவு.

அழகு

பாவங்கள் எங்கு இல்லையோ,அங்கு அழகும் இளமையும் நிரந்தரமாக இருக்கும்.அழகில்லா மனிதனும் இல்லை,அழகில்லா பொருளும் இல்லை,குழந்தைக்கு மழலைமொழி அழகு, பெண்க்குபுன்னகை அழகு,ஆணுக்கு சொல் அழகு,கவிஞர்க்கு கற்பனைஅழகு கலைஞனுக்கு கலை அழகு இப்படி உலகில் பிறந்த‌ அனைவ‌ருக்கு ஏதோவொன்று அழகுதான்.
பளபளக்கும் உடையோ,மினுமினுக்கும் முகசாயமோ,சிவப்புதோல்தான் அழகு என்பதைவிட மனிதனின் அக‌ அழகைஆராதிப்பதே சிறந்தது.

பணம்

வாழ்க்கைக்கு தேவையான பணம் போதும் என்பது போய், பணமே வாழ்க்கை என்னும் நிலை உருவாகிவிட்டது.நமது தேவைகள்அளவீடு இல்லாமல் போய்கொண்டு இருப்பதால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் நாம்வாழ்க்கையில்நிம்மதியை, பாசத்தை,பந்தத்தை இழந்து,பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதுதான் இன்றைய உண்மை. பணம்பத்தும் செய்யும் என்பார்கள் உண்மைதான்,ஆனால் எந்த பத்து என்பதுதான் கேள்வி?பொய்,பித்தாலாட்டம், சூது,பொறமை, கலப்படம்,ஊழல், திருட்டு, நம்பிக்கைதுரோகம், ஏமாற்றுதல்,ஏளனம்,இந்த பத்தில் ஏதாவது ஒன்று இல்லாமல் பணம் சம்பாதித்தவரை உங்களால் உலகத்தில் அடையாளம் கானமுடிகிறதா?

காதல்

கற்கால காதல் மனிதனுக்கு நாகரீகத்தை கற்று கொடுத்தது,அவனில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாகியது,தலைவனுக்கும் தலைவிக்கு ஏற்பட்ட சங்க கால காதலால் கலைகள் உருவானது,அவர்கள் பிரிவும்,ஏக்கமும் காவியங்கள் பல உருவாககாரணமாகியது,அதன்பின் வந்த காதலில் அன்பும் பன்பும் இருந்தது,ஆனால் தற்போதயை காதலில்??????????
ஒரு கல்யானமாக ஆனும்,பெண்னும் காதல்தூதுவிட்டு,பொது இடத்தில் கட்டியனைத்து,காமம் செய்வதுதான் காதல்என்று புது அனர்த்தம் ஆகிவருகிறது.கணவன் மனைவியிடைய உள்ள அன்பில் பாசத்தில் காதல் இல்லையா?,அம்மா பிள்ளையிடம் இருக்கு பாசத்திலும்,ஏக்கத்திலும் காதல் இருக்கிறது.ஆகவே காதலிக்ககற்று கொள்ளவும் காதலின் உண்மையான அர்த்தத்தை கற்றுகொண்டு.

க‌ட‌வுள்

தூணிலும் இருப்பார் துருப்பிலும் இருப்பார் உண்மைதான்.ப‌சியோடு இருக்கும் ஒருவ‌னுக்கு ரொட்டிதுண்டு கிடைத்தால் அதுதான் அவ‌னுக்குக‌ட‌வுள்,இது காந்தி சொன்னது.விப‌த்தில் அடிப‌ட்டு உயிருக்கு போராடிகொண்டுஇருப்ப‌வ‌ரை ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்க்க உத‌விசெய்ப‌வ‌ர் அடிப‌ட்ட‌வ‌னுக்கு க‌ட‌வுள்.த‌ன‌க்கு கிடைக்காது,த‌ன்னால் முடியாது என்று நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு உன‌க்கு கிடைக்கும் உன‌க்கு முடிய‌ம் என ஒரு ந‌ம்பிக்கையை தோற்றுவிக்கும் ந‌ம்பிக்கைதான் க‌ட‌வுள்.
இந்த‌ ந‌ம்பிக்கைஇந்துவுக்கு கிருஷ்ண‌ன் ஆக‌வும்,கிருஸ்துவ‌ர்க‌ளுக்கு இயேசு ஆக‌வும்,முஸ்ஸிம்க‌ளுக்கு அல்லா ஆக‌வும் இருக்கிறார்க‌ள்.ஆக‌ ந‌ம்பிக்கையே க‌ட‌வுள்.


இந்த‌ தொட‌ர்ப‌திவு முடிந்து ப‌ல‌தொட‌ர்ப‌திவு ப‌திவுல‌க‌த்தில் வ‌ல‌ம்வ‌ந்துவிட்ட‌து,
மேலும் இந்த‌தொட‌ர்ப‌திவை அனைவ‌ரும் எழுதியிருப்பார்க‌ள் என்ப‌தாலும் தொட‌ர் அழைப்பை இத்துட‌ன் முடிந்துகொள்கிறேன்