இரண்டு மாதத்திற்கு முன்புபுதியதாக வீடுகட்டியிருந்த ஆயத்தஆடை நிறுவன நண்பர் வீட்டுக்கு ஞாயிறுயன்று சென்றுயிருந்தேன்.அந்த வீட்டிற்கு முதல்முறையாக செல்வதால் வீட்டை சுற்றிகாட்டினார்.அப்போது வரவேற்பறையில் சோனி தொலைகாட்சி பெட்டியும், குழந்தைகளுக்கான அறைகளில் இரண்டு கலைஞர் அரசு தொலைகாட்சி பெட்டியும் இருப்பதை பார்த்தேன்.உங்களுக்கும் கலைஞர் தொலைகாட்சி பெட்டி கொடுத்தார்களா என கேட்டதற்கு, கிராமத்தில் அம்மாவுக்குஉள்ள ரேசன்கார்டுக்கும்,இங்க எங்களுக்கு உள்ள ரேசன்கார்டுக்கு டோக்கன்வாங்கியிருந்தேன் அதற்கு இரண்டு மாததிற்கு முன்பு கொடுத்தார்கள்என்றார்.
அப்போது வாசலில் சுமார் 50 வயதுமதிக்கதக்க பிச்சைகாரன் ஒருவன் பிச்சை கேட்டுகுரல் கொடுத்துகொண்டுயிருந்தான். தொந்தரவு தாங்காத நண்பர் அவனிடம் யோவ் நல்லதானே இருக்கே வேலைக்கு போகவேண்டியதுதானே என சத்தம்போட்டபின் அவன்சென்றுவிட்டான்,அதன்பின் தொழில்சம்மந்தமாக கொஞ்சநேரம் பேசிவிட்டு கிளம்பிவிட்டேன்.வருடத்திற் இரண்டு கோடிக்கு ஆர்டர் செய்யும் அவர் இலவசத்தை விட மனம்யில்லாமல் வாங்கி கொண்டு,அந்த பிச்சைகாரனிடம் சத்தம் போட்ட முரன்பாடு எனக்கு நெருடியது.அதன்விளைவாக மனதில் தோன்றி நாலுவரி

அய்யாயாயா.........
சாமீமீ.........
பிச்சைபோடுங்க
வாசலில் பிச்சைகாரன்.
ஊனம் ஏதும் இல்லையே
உழைத்து சாப்பிடு
விரட்டியடித்தேன் வீதிக்கு
இலவச தொலைகாட்சி பெற
முட்டிமோதி சென்று
வரிசையில் நின்றேன்
பஞ்சாயத்து அலுவலக வாசலில்
எங்கிருந்தோ வந்தொருவன்
நெட்டித்தள்ள விழுந்தேன் வீதியில்
கைபிடித்து துக்கிவிட்டான்
விரட்டியடித்த பிச்சைகாரன்
மெல்ல சிரித்து கேட்டான்
ஏஞ்சாமீ உழைத்து வாங்கவேண்டியதுதானே!