Sunday, May 31, 2009

கேள்விக்கு என்ன பதில்

கேள்வி பதில் தொடர்பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் லோகுவின்

அன்புகட்டளை ஏற்று தொடர்கிறேன்



1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஏழாவது படிக்கும் போது புதிதாக வந்த தமிழ் ஆசிரியர் யாருடா நல்ல கதை
சொல்வாங்கன்னு கேட்க, பசங்க எல்லாம் என்னை கைகாட்டி நல்ல கதைவுடுவான் அய்யா இவன்ன்னு சொல்ல,உன் பெயர் என்ன? என்றார் நான் பெயரை சொன்னவுடன் இததென்டா வாயில் நுழையாத பெயரா இருக்கு,சரி ராசா வந்து செய்யுளை சொல்ராசா என்றார்.செய்யுள் பாடம் நடத்தும் போது மாணவர்களை செய்யுள் சொல்ல சொல்லி விளக்கம் தருவது அவருடைய பழக்கமாம் நான் செய்யுளை ஏற்ற இறக்கதுடன் சொல்வதை கேட்டு செய்யுள்பாடம் நடத்தும்போது எல்லாம் என்னை "ராசா செய்யுளை சொல்ராசா" என்று கூப்பிடுவதை வைத்து சொல்ராசா என்று பட்ட பெயரிலே பள்ளி நண்பர்கள் அழைக்க ஆரம்பித்து சொல்ராசா,சொல்லரசு ஆகி பள்ளி இறுதியில் சொல்லரசன்ஆகிவிட்டது.பதிவு எழுதமுடிவு எடுத்தபோது இந்த பெயரிலே பிளாக் ஆரம்பித்து விட்டேன்.இந்த பெயர் என்றுதான் கேள்வியிருக்கிறது அதனால் இயற்பெயர் காரணத்தை சொல்லவில்லை.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நையான்டி நைனா பதிவ படிக்கும்போது......
உண்மைதானுங்கோ சிரிச்சா எனக்கு கண்ணீர் வரும்,
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான் சிரித்துகொண்டே அழுவேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பள்ளி நண்பர்கள் உன் கையெழுத்து நல்ல இருக்குடான் சொல்லி அவங்க ரெக்காட எழுதவைச்சுறுவானுங்க.இப்ப என் பெண் அப்பா உங்க கையெழுத்து நல்ல இருக்குன்னு சொல்லி அவ ஹோம்ஒர்க்க எழுதவைச்சிருரா அவங்களுக்கு பிடிப்பதால் எனக்கும் பிடிக்கும்
4.பிடித்த மதிய உணவு என்ன?
மீன்குழம்பு,மீன்வருவலுடன் சாப்பாடு,மட்டன் பிரியாணி சிக்கன் வருவல்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
முதல் சந்திப்பிலேயே ஒருவரை பற்றி அறிந்துகொள்வேன்
நல்லவராக தெரிந்தால் நட்பு தொடரும்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ஆற்றில்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்களை
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு பேசறது.
பிடிக்காத விஷயம்: வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு பேசறது.(சில பேர் மூஞ்சிக்கு நேரா இப்படி பேசுகிறான் என்று வருத்தபடும்போது)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் சுட சுட தோசை ஊற்றி கொடுப்பது
பிடிக்காதது அட்சயதிததி மற்றும் ஆடிதள்ளுபடியின் போது நச்சரிப்பு.
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா அப்பா
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அடர் பச்சை நிற பேன்ட்,இளம் பச்சையில் வெள்ளை கோடு போட்ட சட்டை
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
10X11 ரூமுக்குள் உட்கார்ந்து என்னத்த பார்க்க முடியும் கணனிதிரையை
நான் ராகுல்காந்தி மாதிரி, ஒருசமயத்தில் ஒரு வேளைதான் செய்யமுடியும்
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வெளீர்நீல நிறம்
14.பிடித்த மணம்?
மல்லிகை வாசனை
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
அனைத்து விச‌ய‌த்தையும் நையான்டியாக‌ எழுதும் நையான்டி நைனா. அனைத்தையும் சாமானிய‌ன் அறிந்துகொள்ள‌வேண்டும் என‌ ஆசைப‌டும் ஆ.ஞான‌சேக‌ர‌ன்.
குடந்தை அன்புமணி கதை,கவிதை, சமுதாய சிந்தனை என இவர் கலந்துகட்டியடிப்பது பிடிக்கும்
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அனைத்து விசய பதிவுகளும் ரசிக்கதக்கது
17. பிடித்த விளையாட்டு?
கபடி,கைப்பந்து,ஹாக்கி.
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை...
19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
முழு நீள நகைச்சுவை படங்கள்
20.கடைசியாகப் பார்த்த படம்?
முதல்வன் ,தியேட்டருக்கு போய் படம் பார்த்து பல‌ ஆண்டுகள் ஆச்சு.
21.பிடித்த பருவ காலம் எது?
எல்லாகால‌மும்
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
அர்த்த‌முள்ள‌ இந்து ம‌த‌ம் மூன்றாம் பாக‌ம்
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மூன்றுமாத‌த்திற்கு ஒருமுறை
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்:ம‌ழ‌லையின் சிரிப்பு
பிடிக்காத சத்தம்: அர‌சிய‌ல்வாதியின் சிரிப்பு
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அஹ‌ம‌த்ந‌க‌ர்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தேட‌வேண்டும்
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
முய‌ற்சிக்காம‌ல் முடியாது என்று சொல்வ‌து
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தான் என்னிட‌த்தில் த‌ங்க‌ அனும‌தியில்லை
29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
மூனாறு
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஆசையில்லா ம‌னித‌னாக‌
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் த‌...........(என் ம‌னைவியும் இதை ப‌டிப்ப‌தால் த‌ணிக்கைசெய்துவிட்டேன் புரிந்த‌வ‌ர்க‌ள் புரிந்துகொள்ளுங்கள்)
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
க‌ட‌வுள் ந‌ம‌க்கு அளித்த‌ அற்புத‌ப‌ய‌ன‌ம்,எளிமையாக்குவ‌தும் க‌டினமாக்குவ‌தும் ந‌ம்கையில்.




Thursday, May 28, 2009

கார்த்திகைப் பாண்டியன்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்



முகமறிய பதிவரையும்
முத்தான எழுத்தால்
அகமகிழ செய்து
புறமறிந்து நேசகரம் நீட்டிய
பாசமிகு பாண்டியரே!

முவர் சந்திப்பை
பதிவர் கூட்டம்மென
பதிவிட்டு பதிவுலகம் அறியசெய்த
மதுரைகார தம்பியே..

கணினியே கதியாக
கல்லுரியில் தவமாக
பதிவிட்டு பதிலிட்ட
பண்டிகை பாண்டியா!

நையான்டியே பின்தொடர்ந்து
நைய புடைத்தாலும்
நயமாக பேசி
நட்பு பாராட்டும் நல்லவனே!


பலநூறு பதிவுகண்டு
பல்லாயிரம் பதிவர்கண்டு
பலலட்சம் பார்வை கொண்டு
வாழ்க பல்லாண்டு.



(பி.கு) நம்ம கா.பா விற்கு பெண்தேடிகொண்டு இருக்கிறார்கள் ஏதோ நம்மால் முடிந்த விளம்பரம். நமீதா மசாலா விளம்பரம் செய்பவர் இதை தவறாக‌
எடுத்துகொள்ளவேண்டாம்

Sunday, May 17, 2009

எரியிற கொள்ளியில்...........தேர்தல் முடிவு.

நடந்து முடிந்த தேர்தலின்முடிவு பெரும்பாலன வலைபதிவர்களுக்கு அதிர்ச்சியாக‌இருக்கும்,ஏனெனில் ஈழபிரச்சனையை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தல் போல்ஒரு தோற்றத்தை உருவாக்கி,அதில்பெரிய‌பாதிப்பு இல்லாதால் சற்று அதிர்ச்சிதான்.ஈழபிரச்சனை மக்களிடையே எந்தமாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை என்பது எனதுகருத்து.ஈழ விரோதி கலைஞர்க்கு எதிராக வாக்களிக்க சொன்னவர்கள் எதிர்முகாமில் இருந்தவர்கள் ஈழஆதரவாளர்கள் என மக்கள்ஏற்று கொண்டர்களா என்று அறிந்துகொள்ளவில்லை. அம்மையாரின் திடீர் ஈழத்து ஆதரவு, அரசியல்வேசியின் லாப நட்ட ஈழ ஆதரவுகணக்கு,பொதுவுடமை தோழரின்கொள்கையில்லாகூட்டு,இவையனைத்தும் மக்களை சிந்திக்கவைத்து,ஈழத்து பிரச்சனையில் அரசியல்வாதிகள் ஒன்றுமே செய்யமுடியாது, இது தேர்தல் நேரபாசமே என்பதைபுரிந்துகொண்டார்கள்.

இனி இவர்கள் அடுத்த தேர்தலுக்குதான் ஈழஆதரவு துருப்புசீட்டாக‌ கையில்எடுப்பார்கள், அதற்குள் எல்லாம் முடிந்துவிடும் அங்கே என்பதைமக்கள் அறிந்து கொண்டார்கள்.

தமிழக அரசியல்வாதிகளை புறம்தள்ளிவிட்டு சர்வேதேச அளவில் எடுத்து செல்ல என்னவழி என்று ஒவ்வொரு தமிழனும் வழிமுறை கானவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள நாம் இனியும் இந்த அரசியல்வாதிகளை நம்பாமால் ஈழ ஆதரவு கோரிக்கையை சர்வேதேச சமூகத்திற்கு தெரியபடுத்தவேண்டும்.

கொங்குமண்டலத்தில் ஈழ ஆதரவால் தி.மு.க கூட்டனிக்கு தோல்வி என்பதும்,சீமான், பாரதிராஜவின் பிரச்சாரமே தி.மு.க,காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று கூறினாலும், என்னைபொருத்தளவில்அறிவாலயத்தால் தொடர்ந்து புறக்கனிக்கப்படும் கொங்குமண்டல எழுச்சியே காரணம், கொங்குநாட்டு உடன்பிறப்புகளின் களபணிகளால் கொங்குமுன்னேற்ற‌பேரவையின் வாக்குகளை பார்த்தால்புரியும் உங்களுக்கு.

ஈரோடு
கனேசமுர்த்தி(மதிமுக) 284148
இளங்கோவன்(காங்) 234812
பாலசுப்பிரமணியம்(கொ.மு.பே) 106604

திருப்பூர்
சிவசாமி (அதிமுக) 295731
கார்வேந்தன் (காங்) 210385
பாலசுப்பிரமணியம்(கொ.மு.பே) 95299

கோவை
நடராஜன் (கம்யூ) 293165
பிரபு (காங்) 254501
ஈஸ்வரன் (கொ.மு.பே) 128070

பொள்ளாச்சி
சுகுமார் (அ.தி.மு.க) 305826
சன்முகசுந்தரம்(தி.மு.க) 258047
பெஸ்ட் ராமசாமி(கொ.மு.பே) 102834

நான்கு தொகுதிகளிலும் 4,32,807 வாக்குகள் கட்சிஆரம்பித்து முன்று மாதத்தில்வாங்கியிருப்பதில்,உடன்பிறப்புகளின் பங்கும் இதில் உண்டு.அறிவாலயத்தில் உடன்பிறப்புகளின் மேலுள்ள‌ பாராமுகம்,நிதியமைச்சர்ராக இருந்தபோது சிதம்பரத்தின் கொங்குமண்டல தொழில்சலுகை புறக்கணிப்பு,இதுவேகொ.மு.பே
எழுச்சியாக தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்தது. தி.மு.ககூட்டனி தோல்விக்கு இதுவே காரணம்.இனிமேலும் புறக்கணிப்பு தொடர்ந்தால் சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் அவர்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்.எனவே கொங்குமண்டலத்திலும் ஈழஆதரவு பிரச்சாரம்வெற்றி என்பதையும் ஏற்றுகொள்ள‌இயலவில்லை. மொத்ததில் எரியிற கொள்ளியில் எந்தகொள்ளி நல்லகொள்ளி கதையாகதான் இந்த தேர்தல் முடிவு.


Tuesday, May 12, 2009

இது ஜனநாயக தேர்தலா இல்லை பணநாயக தேர்தலா?


இங்க 1000? அங்க எவ்வளவு?


“ரேசன் அட்டை கொண்டு போன டோக்கன்கொடுத்துவிடுவார்கள்!”


கம்மியா கொடுத்த வாங்கதே!

ஏன் அவசரபடுகிறாய்? விடு தேடி வருவார்கள் கவலைப்படாதே.


இரண்டு நாட்களுக்கு இதுதானுங்க பரவலான பேச்சா இருக்குதுங்க நம்ம ஏரியாவில்.


இதில பணம் வாங்கலாமா? வேண்டாமா?

வாங்கினால் என்ன தப்பு அவங்க சொந்தபணத்தையா கொடுக்கறாங்க?


எல்லாம் நம்மகிட்ட கொள்ளையடிச்ச பணத்தில் கொஞ்ச‌த்தை திரும்பி
நமக்கே கொடுக்கிறானுங்க வாங்கிகவேண்டியதுதானே,இப்படி பட்டிமன்றமே
நடக்குதுங்க‌ அதனால‌நமக்கு சந்தேகம் இது ஜனநாயக‌தேர்தலா? இல்லை
பணநாயக தேர்தலா?

இந்த தேர்தலுக்கு 12800 கோடிரூபாய் செலவுசெய்கிறார்கள் அரசியல்கட்சியினர்
என்கிறது அரசியல் ஆய்வரிக்கை,இந்த பணம் எங்குயிருந்து வந்தது.இவ்வளவு
பணம் செலவு செய்பவர்கள் எவ்வளவு பணத்தை கொள்ளையடித்து இருப்பார்கள்
என்பது சுவிஸ் வங்கிக்கே வெளிச்சம்.


அரசு திட்டபணம் "படிப்படி" யாக குறைந்து கடைசியாக மக்களிடம் வந்து
சேரும்போது நான்கில் ஒரு பங்குதான்கிடைக்கும், அதுபோலதான் நேற்றுஆரம்பித்த
பண பட்டுவாடா தலைமையில் இருந்துமாவட்டம்,வட்டம்,வார்டுக்குவந்து
1000 க்கு 200 ஆக 500 க்கு 100 ஆக மக்களுக்கு வந்துகொண்டுஇருக்கிறது.
மேல் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை சுருட்ட ஆரம்பிக்கும்
இவர்களா ஜனநாயக‌வாதிகள் இதுவா ஜனநாயக‌தேர்தல்.


இந்தபணநாயக தேர்தலில் கொள்கையே எங்கள் இலட்ச்சியம் என்ற கொள்கை
சிற்பிகளில் ஒருவர் தேர்தல்முடிவுக்கு முன்பே கூட்டணியில் இருந்துவிலகி
தாமரைகூட்டனிக்கு சென்றுவிட்டார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதுஅந்த
சந்திரசேகரகாருக்கே வெளிச்சம்.இந்த கூட்டனியில் முக்கியமானவர் தேர்தலுக்கு பின் ஆதரவுகொடுப்பதை ஆலோசிப்போம் என்று சொல்லி தனது காரத்தை குறைத்து கொண்டார் எவ்வளவு "கை" மாறபோகிறதோ தெரியவில்லை,வட மாநிலத்தில்இருக்கும் பஸ்... நாங்க இன்னும் கூட்டனியில்தான் இருக்கிறோம் மரியாதையாக கூப்பிட்டால் ரயில்லிருந்து இறங்கி வந்து கை கொடுப்போம்ன்னு அப்பட்டமாக சொல்கிறார்.
ரயிலும் தடம் புரள‌தயார் நிலையில் உள்ளது . என்னை முதல்வர் ஆக்குபவருக்கே ஆதரவு என்று குதிரை பேரத்திற்கு பெட்டி
தயார்செய்துவிட்டார்முலாயம்.இங்க மருத்துவர் மாங்கணிகளில் உள்ள இலையை பிய்த்துவிட்டு யார் வருகிறார்களோ அவர்களுக்கு கை யில்கொடுக்கலாமா அல்லது தாமரையில் வைக்கலாமா என்று இலாப நட்ட கணக்கு பார்க்க ஆடம்பித்துவிட்டார்.இதையெல்லாம் பார்க்கும்போதுங்க
நமக்கு சந்தேகம்வந்துருச்சிங்கோ,இந்த தேர்தலை பற்றி.
தமிழகத்தை பொருத்தவரை மதுரை முடிவைவைத்து
இது ஜனநாயக‌தேர்தலா இல்லை பணநாயக தேர்தலா?என்று நீங்களே தெரிந்து கொள்ளவும்



இரண்டு வாரமா வேலைபளு காரணமாக இந்த பக்கம் வரமுடியமா இருந்தாலும்,
இரண்டு நாளைக்கு ஒரு முறை போன் போட்ட பாசகார நண்பர்களே,
சிங்கபூரில் இருந்து நம்ம சாமானியன் சரக்குடன் (தமிழ்நாட்டு சரக்கு என்று அர்த்தம் கொள்ளவும்)
திருச்சிக்கு வந்து இருக்கிறார்.அவருடைய விருப்பபடி கடை விடுமுறை அன்று
அதானுங்க மே 13 தவறாம திருச்சிக்கு வந்து சரக்கை பகிர்ந்துகொள்ள
அன்புடன்அழைக்கிறேன்.அங்க வந்து சொல்லுங்க
இது ஜ‌னநாயக தேர்தலா இல்லை பணநாயக தேர்தலா?