Wednesday, April 8, 2009

மின்னலே! மின்னலே!



மின்னலே! மின்னலே!

நொடியில் மறையும் மாயவனே.

உன் சிதறலை

சிறை பிடித்த‌

வல்லவன் யாரோ?





மின்னலே! மின்னலே!

மின்சார கண்ணனே-உன்னை

தாமிரதகட்டில் மடக்கிய‌

மானிடசக்தியை அறிவீரோ?

அறிந்தால் சொல் ஆற்காட்டற்க்கு

மின்னலில் மின்சாரம்

எடுப்பது எப்படி?



அறுபதுகளில்

எழுச்சி கண்ட‌

கனவுலக நகரம்

கல்தோன்றா மண்தோன்றா!

காலத்து.............

வெட்டி சொல்வீச்சு வீரர்கள்

கவனிப்பரோ!















20 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏம்ப்பா.. அழகான மின்னல் படத்தை போட்டுட்டு அதிலும் அரசியலா? நடத்துங்க..

*இயற்கை ராஜி* said...

//சொல் ஆற்காட்டற்க்கு

மின்னலில் மின்சாரம்

எடுப்பது எப்படி?//

arasiyal ah kavithalaum vidamaateengala:-))
therthal neram nnu theriyuthu

ஆதவா said...

ஆதவா : என்னாச்சுங்க????

சொல்லரசன் : தேர்தல் நெருங்கிடுச்சில்ல//

ஆதவா : அதுக்காக இப்படியா....

சொல்லரசன்.. : :)??!!!?

இது மின்னல் கவிதையே அல்ல. மறைந்திருந்து அம்பு விடும் ராமனைப் போன்றது கவிதை! ஆற்காட்டார் என்று நேரடியாகவே சொல்லிவிட்டாலும்...

அதென்னங்க அறுபதுகளில்..... கொஞ்சம் விளக்குங்களேன்!

பொன்.பாரதிராஜா said...

//அறிந்தால் சொல் ஆற்காட்டற்க்கு
மின்னலில் மின்சாரம்
எடுப்பது எப்படி

ஆமா...சொல்லிட்டா அப்படியே மின்சாரம் எடுத்து கிழிச்சுடுவாரு.அட போங்க சொல்லு...
ஆனா ஹைதையில் மின்வெட்டுப் பிரச்சினை இல்லப்பா....
ஏன் தெரியுமா?
இங்கதான் வீராசாமி இல்லையே!!!! :)))))

Anbu said...

:))

ராம்.CM said...

அரசியல் மின்னல்...

சொல்லரசன் said...

நன்றிங்க பிரேம்.

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

// ஏம்ப்பா.. அழகான மின்னல் படத்தை போட்டுட்டு அதிலும் அரசியலா? நடத்துங்க..//

யதர்த்தமா எழுதியது,இப்படி பதர்த்தமா நினைச்சா எப்படி?

சொல்லரசன் said...

Blogger இய‌ற்கை said...
//arasiyal ah kavithalaum vidamaateengala:-))
therthal neram nnu theriyuthu//

ஆகா.....நீங்களுமா, அறிவியல் கண்னோட்டத்தில் பாருங்கோ.

சொல்லரசன் said...

ஆதவா said...

// ஆதவா : என்னாச்சுங்க????

சொல்லரசன் : தேர்தல் நெருங்கிடுச்சில்ல//

ஆதவா : அதுக்காக இப்படியா....

சொல்லரசன்.. : :)??!!!? //


இது என்னாது கேள்வியும் நானே பதிலும் நானே கணக்கா.

சொல்லரசன் said...

பொன்.பாரதிராஜா said...
//ஆனா ஹைதையில் மின்வெட்டுப் பிரச்சினை இல்லப்பா....
ஏன் தெரியுமா?
இங்கதான் வீராசாமி இல்லையே!!!! :)))))//

அப்ப சனி,ஞாயிறு சென்னை வரும் போது மின்சாரத்தை பையில் எடுத்துட்டுவந்திருவீங்களா ராசா.

சொல்லரசன் said...

நன்றிங்க அன்பு.

சொல்லரசன் said...

ராம்.CM said...

// அரசியல் மின்னல்...//
இந்த தலைப்புகூட நல்லாதான் இருக்குது,
வருகைக்கு நன்றிங்க ராம்

சொல்லரசன் said...

ஆதவா said..

//இது மின்னல் கவிதையே அல்ல. மறைந்திருந்து அம்பு விடும் ராமனைப் போன்றது கவிதை! //

அதை குறை என்று யாரும் சொல்வது இல்லை,

ஆ.ஞானசேகரன் said...

//மின்னலே! மின்னலே!

நொடியில் மறையும் மாயவனே.

உன் சிதறலை

சிறை பிடித்த‌

வல்லவன் யாரோ//
யாரை சிறைப்பிடிக்க/.... விவரமா சோன்னா புரியுமில்லை

சொல்லரசன் said...

ஆ.ஞானசேகரன் said.
//யாரை சிறைப்பிடிக்க/.... விவரமா சொன்னா புரியுமில்லை//

இது என்னங்க வம்பாபோச்சி,விபரமா சொல்லி என்னை சிறை பிடிக்கவா?

ஆ.ஞானசேகரன் said...

//தாமிரதகட்டில் மடக்கிய‌

மானிடசக்தியை அறிவீரோ?

அறிந்தால் சொல் ஆற்காட்டற்க்கு

மின்னலில் மின்சாரம்

எடுப்பது எப்படி?///

வாக்கு கேட்டு வருபகளிடம் சொல்லி பாருங்கள் சொல்லரசன்

சொல்லரசன் said...

யாரும் என்னிடம் வாக்கு கேட்டு வருவதில்லை நண்பா.
நீங்களாவ்து இந்தியா வரும் போது கேட்டு சொல்லுங்கள்.

சொல்லரசன் said...

நன்றிங்க கவின்

ஆ.ஞானசேகரன் said...

//தாமிரதகட்டில் மடக்கிய‌

மானிடசக்தியை அறிவீரோ?

அறிந்தால் சொல் ஆற்காட்டற்க்கு

மின்னலில் மின்சாரம்

எடுப்பது எப்படி?///

வாக்கு கேட்டு (வருபகளிடம்) சொல்லி பாருங்கள் சொல்லரசன்

பிழைத்திருத்தம் ...வருபவர்களிடம்,