Friday, July 3, 2009

சாதிகள் இருக்குதடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா! என்ற பாரதியின் பாடலை சொல்லிகொடுக்கும் பள்ளிகள்தான்,இன்று சாதி சான்றிதழ் இல்லையென்றால் அட்மிசன் கொடுக்கமுடியாது என்று சொல்கிறார்கள். .சாதிகள் ஒழிய அடிதளமாக விளங்கும் பள்ளிகளில் இந்தநிலை.சாதிகள் ஒழிக்கபட குழந்தைகள் மனத்தில் சாதிகள் பற்றிய சிந்தனைகள் இருக்ககூடாது என நினைத்தபாரதி இன்று இருந்துயிருந்தால் இப்படிதான் பாடியிருப்பரோ!

சாதிகள் இருக்குதடி பாப்பா!
சாதி சான்றிதழ் கொடுத்துவிடு பாப்பா,
இல்லையெனில் அட்மிசன் இல்லையடி பாப்பா,
இது அரசங்க உத்தரவடி பாப்பா.

இந்தியா சுகந்திரம் பெற்றபோது இடஒதுக்கிடு சட்டம் கொண்டுவந்தவர்கள் ஜம்பது ஆண்டுகளில் இடஒதுக்கிடு சதவீதம் குறைந்து சாதிகளஅற்ற சமூதாயம் உருவாகவேண்டும் என்று கன்வு கண்டார்கள்,ஆனால் இன்றோ18 சதவீதம் 69 சதவீதமாக உயர்ந்து சாதிகள் ஒழிக்கமுடியாதநிலை ஏற்பட்டுயுள்ளது.எழுத்திலும் பேச்சிலும் தீன்டாமைஒழிந்துவிட்டது, ஒடுக்கபட்டவர்கள் உயர்ந்துவிட்டார்கள்,சாதிகள் ஒழிந்துவிட்டது என்று கூறலாம்,ஆனால் சாதிகள் வளர்ந்து கொண்டுயுள்ளது என்பது எனது கருத்து, சந்தேகம் இருந்தால் அரசங்கம் வெளியிடும் பட்டியலை பார்த்தால்புரியும்.கலப்பு திருமணம் பெருகிவிட்ட இக்காலத்தில் சாதியை பற்றி பேசுவதாக என்னை குறைசொல்லவேண்டாம்,கலப்பு திருமணம் செய்தவர்கள் எத்தனை பேர் எனக்கு சலுகைவேண்டாம் இடஒதுக்கிடு வேண்டாம் என சாதிகள் இல்லை என்ற சொல்கிறார்கள். அவர்களில் எந்த சாதிக்கு சலுகை அதிகம் என்று பார்த்து அந்த சாதியை குறித்து சான்றிதழ் வாங்கதவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

16 ம் நூற்றாண்டுகளில் உருவான ஜந்துசாதிகள்,இன்று 500 மேற்பட்ட சாதிகளாக வளர்ந்துள்ளது,அதுமட்டும் இல்லாமல் பல உட்பிரிவுகளும் தோன்றி இன்னும் ஒழிக்கபடமால் இருப்பது வருத்தபடவேண்டிய விசயம்.ஆண்டுக்கு ஆண்டுக்கு பெருகிவரும் சாதிசங்களினாலும்,சாதி அடிபடையிலான இடஒதுக்கிடு இருக்கும்வரை ஒழிக்கமுடியாது நிலைதான் உள்ள‌து.பத்தாண்டுக்கு முன்னால் ஒரு வகுப்பினர் மூன்று எழுத்தைஇனைத்து கொண்டு நாங்கள் மலைஜாதியினர் என சலுகை அனுபவித்து பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு அவர்கள்பெற்ற சலுகை ரத்து செய்யபட்டது எல்லாம் இந்த சாதிசான்றிதழ் வாங்கிதான் என்பது நினைவுகொள்ளதக்கது,ஏன் இப்பொழுதுகூட உள்ளாச்சி தேர்தலில் தவறான‌ சாதிசான்றிதழ் கொடுத்து இட‌ஒதுக்கிடுவில் தேர்ந்துஎடுக்கபடுவதை தடுக்க தகுந்த சட்டமுன்வடிவு தாக்கல் செய்யபடும் என‌ சட்டசபை அறிவிப்பு சாதிசான்றிதழ் அவலத்திற்கு ஒரு சான்று.சாதிசான்றிதழ் இருந்தால் இட ஒதுக்கிடு பெறலாம் என்று வருவாய்கொடுத்து சான்றிதழ் வாங்கி சலுகைபெறுவதால்,உண்மையில் ஒடுக்க‌ப‌ட்ட‌வ‌ர்க‌ள் முன்னேற‌ இந்த‌ இட‌ ஒதுக்கிடு உத‌வியாக‌ இருக்கிற‌தா என்ற‌ கேள்வி எழுகிறது.

ஒடுக்கபட்டவர்கள்,கடைகோடி,மக்கள் முன்னேற இன்றைய காலகட்டத்தில் இந்த சாதிய இடஒதுக்கிடுவை தவிர்த்து பொருளாதாரா அடிபடையில் இட ஒதுக்கிடு கொண்டு வரவேண்டும் அதற்கு முதலில் பள்ளிகளில் சாதிசான்றிதழ் வாங்குவதை தடைசெய்யவேண்டும்,நம் தலைமுறைகள் சாதியில்லா தலைமுறையாக உருவாக்க கல்விசலுகை பெறதவர்கள்,வசதி வாய்ப்புள்ளவர்கள், சலுகை தேவையில்லை என சான்றிதழ் கொடுக்காமல் இருக்க வேண்டும்.உதட்டளவில் சாதிஒழிப்பு பற்றி பேசுபவர்கள் முதலில் அவர்கள் குழந்தகளுக்கு சாதியில்லை என‌ பள்ளிகளில் சேர்க்க முன்வரவேண்டும்,இவையெல்லாம் மக்கள் செய்ய முன்வந்தால் அரசங்கம் தனது கொள்கையை தளர்த்தி உண்மையில் ஒடுக்க பட்டவர்களுக்கு முன்னேற வழிஏற்படுத்தபடும் சூழ்நிலை உருவாகும்.

இந்த தலைப்பில் பதிவு எழுதவேண்டும் என்று நினைக்கையில்,நண்பர் கா.பா வின் சாதிகள் இல்லையடி பாப்பாவில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பின்னுட்டம்யிட்டபோது,சகோதரி உமா அவர்கள் இன்றயை காலகட்டத்தில் சாதிகளை பற்றி பேசுவதும்,எழுதுவதும் சரியல்ல என்றதால் இந்த பதிவை தவிர்த்துவிடலாம் என்று இருந்தேன்,ஆனால் எனது பையனை U.K.G சேர்ப்பதற்கு பள்ளிக்கு சென்றபோது,நுழைவுத்தேர்வு,நேர்முகதேர்வு என்று பெரும் போராடத்துக்கு பின்அட்மிசன் வாங்கவேண்டி இருந்தது, அதன்பின் அட்மிசன் அன்று சாதி சான்றிதழ் கொடுத்தால்தான் அட்மிசன் போடுவோம் என்று சொல்லிவிட்டார்கள். மெட்ரிக்குலேசன் பள்ளியில் இடஒதுக்கிடு கிடையாதே நீங்கள் ஏன் சான்றிதழ் கேட்கிறீர்கள் என்று நாம் கேட்டால் இது அரசங்கஉத்தரவு என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். அப்புறம் மெட்ரிக்குலேசன் ஆய்வாளர் வரை சென்று அட்மிசன் வாங்க வேன்டியதாகிவிட்டது. அப்போது கூட நான் சாதி சான்றிதழ் விரைவில் வாங்கிகொடுத்துவிடவேண்டும் என்ற உறுதி அளித்தபின் தான் அட்மிசன் போட்டார்கள். அதனால் ஏற்பட்ட அலைகழிப்பினால்,இதுபோல் நிகழ்வுகளால் சாதிகள் ஒழிய வாய்ப்பில்லை என்பதால் இந்த பதிவு

34 comments:

நையாண்டி நைனா said...

mee firste...

நையாண்டி நைனா said...

/*16 ம் நூற்றாண்டுகளில் உருவான ஜந்துசாதிகள்,*/

அண்ணே.. ஜந்து சாதிகள் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னரே தோன்றி விட்டது....

நையாண்டி நைனா said...

/*
சாதிகள் இருக்குதடி பாப்பா! என்ற பாரதியின் பாடலை சொல்லிகொடுக்கும் பள்ளிகள்தான்,இன்று சாதி சான்றிதழ் இல்லையென்றால் அட்மிசன் கொடுக்கமுடியாது என்று சொல்கிறார்கள். .
*/

என்ன சாமியோவ்... ஆரம்பமே... தடுமாற்றமா....????
சாதிகள் இல்லையடி என்றல்லவா ஆரம்பிக்கணும்... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ஆமா பொதுவா நீங்க எலேக்சன் டைம்லே தானே பதிவு போட வருவீங்க..... இப்ப என்ன புதுசா இப்பவே வந்துட்டீங்க....

something is wrong...

ஆ.ஞானசேகரன் said...

சாதிகள் ஒழிய வேண்டும் என்று சொல்லும் உங்களின் வாதம் ஏற்றுக்கொள்கின்றேன். அதே சமயம் சாதிய அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமுகத்தின் சலுகைகளை வேண்டாம் என்று சொல்வது என்னால் ஒப்புகொள்ள முடியவில்லை. சாதியை விட இன்னும் சில கிராமங்களில் தீண்டாமையும் ஒழிந்தபாடில்லை. அது ஏன் நீங்களே ஒரு பார்பனர் வீட்டிற்கு சென்று வாருங்கள் உங்களுக்கே புரிந்துவிடும். அம்பேத்கார் தலைமையில் ஏற்றிய அரசியலமைப்பு சட்டத்தின் அடைப்படையில் கொடுக்கப்படும் தலித்துகளின் சலுகைகள் இன்னும் முறைப்படி வழங்கப்படுவதே முறைகேடுகள் நடக்கின்றது. சாதி, தீண்டாமை இன்னும் ஒழியவில்லை என்பது உண்மை...... அது கிருஸ்துவ மதத்திலும் கூட... முஸ்லிம் மதத்திலிம் சாதி பிரிவுகள் உண்டு. இவர்களும் சாதி விட்டு சாதி மணம் முடிப்பதில்லை...


வணக்கம் சொல்லரசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களின் இடுக்கை பாராட்டப்படுகின்றது

லோகு said...

நீண்ட நாளைக்கு பிறகு எட்டி பார்த்து இருக்கீங்க.. வெல்கம் பேக் அண்ணா..


என்னங்க சாதிகளை ஒழிச்சுட்டா.. எப்படி அரசியல் பண்றது..

நான் MBC 1000 மார்க் எடுத்தாலே நல்ல காலேஜ் கிடைக்கும் , நீ BC 1100 எடுக்கணும் என்பது போன்ற உரையாடல்களை மாணவர்களிடம் நீங்கள் கேட்கலாம்..

Raju said...

\\ஆமா பொதுவா நீங்க எலேக்சன் டைம்லே தானே பதிவு போட வருவீங்க..... இப்ப என்ன புதுசா இப்பவே வந்துட்டீங்க....\\
ரிப்பீட்டேய்...!

நைனா, ஏதாச்சும் ஒரு எம்.எல்.ஏ வ போட்டுத் தள்ளீருவோமா..?
அப்பவாச்சும் "சொல் ராசா" பதிவு போடுவாப்புல..!

ராம்.CM said...

நீண்ட இடைவெளியாக இருந்ததாலும் சமுதாய நலன்கொண்ட பதிவு. அருமை.

Anbu said...

ரொம்ப நாள் கழித்து வந்து உள்ளீர்கள் அண்ணா..பதிவு அருமை..

குடந்தை அன்புமணி said...

உங்களின் ஆதங்கம் புரிகிறது. இதற்கு ஆணிவேர் அரசியலாக இருப்பதால் ஒன்றும் செய்ய இயலாது என்றே தோன்றுகிறது. கலப்பு மணம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. பதவி உயர்வுக்காகவே சாதியை மாற்றிக் கொண்டு பின்பு மாட்டிக் கொண்டவர்களின் லிஸ்ட்டே இங்கே அதிகமிருக்கிறது. என்ன செய்ய... (அடிக்கடி எழுதுங்க. உங்க போன் நம்பருக்கு போன் செய்தால் எடுக்கவில்லை...)

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said..
.... வணக்கம் சொல்லரசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களின் இடுக்கை பாராட்டப்படுகின்றது*/

/*லோகு said...
நீண்ட நாளைக்கு பிறகு எட்டி பார்த்து இருக்கீங்க.. வெல்கம் பேக் அண்ணா..*/

/*டக்ளஸ்....... said...
\\ஆமா பொதுவா நீங்க எலேக்சன் டைம்லே தானே பதிவு போட வருவீங்க..... இப்ப என்ன புதுசா இப்பவே வந்துட்டீங்க....\\
ரிப்பீட்டேய்...!*/

/*ராம்.CM said...
நீண்ட இடைவெளியாக இருந்ததாலும் சமுதாய நலன்கொண்ட பதிவு. அருமை.*/

/*Anbu said...
ரொம்ப நாள் கழித்து வந்து உள்ளீர்கள் அண்ணா..பதிவு அருமை.. */

அய்யா... சாமிகளா.... அவரு தெரியாமே போட்டுட்டாரு.... மன்னிச்சிவுட்டுருங்க... இனி அவரு எலெக்சனுக்கு தான் வருவாரு..... நம்ம எம்மெல்யே மாதிரிதான் வருவாரு பிளீஸ்.

சொல்லரசன் said...

நையாண்டி நைனா said..
ஆமா பொதுவா நீங்க எலேக்சன் டைம்லே தானே பதிவு போட வருவீங்க..... இப்ப என்ன புதுசா இப்பவே வந்துட்டீங்க....

தமிழகத்தில் இடைதேர்தல் வருதுங்கோ அதான்

சொல்லரசன் said...

நையாண்டி நைனா said...
/*16 ம் நூற்றாண்டுகளில் உருவான ஜந்துசாதிகள்,*/

பிற‌ப்பின் அடிப்படையில் சாதிகள் உருவானது 16 ம் நுற்றாண்டில்தானே?

சொல்லரசன் said...

நையாண்டி நைனா said..
அய்யா... சாமிகளா.... அவரு தெரியாமே போட்டுட்டாரு.... மன்னிச்சிவுட்டுருங்க... இனி அவரு எலெக்சனுக்கு தான் வருவாரு..... நம்ம எம்மெல்யே மாதிரிதான் வருவாரு பிளீஸ்.


இன்னைக்கு நானா!!!!!!!

சொல்லரசன் said...

உங்க கருத்துக்கு நன்றிங்க ஞான்ஸ்,தாழ்த்தபட்ட ஏழைமக்களுக்கு இந்த‌இட ஒதுக்கிடு பயன் முழுமையாக சென்றதா என்பதே எனது கேள்வி.

சொல்லரசன் said...

டக்ளஸ்....... said...
நைனா, ஏதாச்சும் ஒரு எம்.எல்.ஏ வ போட்டுத் தள்ளீருவோமா..?
அப்பவாச்சும் "சொல் ராசா" பதிவு போடுவாப்புல..!

சூரத்துக்கு ஆட்டோ அனுப்பமுடியாதுகிற தைரியமா.

சொல்லரசன் said...

லோகு said...
//நான் MBC 1000 மார்க் எடுத்தாலே நல்ல காலேஜ் கிடைக்கும் , நீ BC 1100 எடுக்கணும் என்பது போன்ற உரையாடல்களை மாணவர்களிடம் நீங்கள் கேட்கலாம்..//

நன்றாக படிக்கும் ஏழைமாணவர்கள் இந்த ஏற்றதாழ்வுகளில் பாதிக்காமல் இருக்க முயல வேண்டும்

கார்த்திகைப் பாண்டியன் said...

வேதனைப்பட வேண்டிய, ஆனால் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை..:-(((((

சொல்லரசன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ராம்

சொல்லரசன் said...

வருகைக்கு நன்றிங்க அன்பு

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

என் தலைமுறையில் இந்த சாதி ஒழிந்து நான் பார்ப்பேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் சாத்தியம்.சாதி பார்த்து தொகுதியில் ஆள் நிறுத்துவது , சாதிக்காரனுக்கு மட்டுமே ஓட்டு என்பவைகள் மாற வேண்டும் முதலில்.

"உழவன்" "Uzhavan" said...

அருமையான பதிவு நண்பா.. ஆனால் சாதியை ஒழிப்பதில் மக்களின் பங்கு சிறிதளவே.. அரசுதான் சட்டம் கொண்டுவரவேண்டும். அரசு அப்படிக் கொண்டுவந்தால் சலுகைகள் குறைக்கப்படுகிற அல்லது பறிக்கப்படுகிற சாதி மக்களின் ஓட்டு கிடைக்காது. அந்தப் பயத்தால் அரசும் இந்த விசயத்தில் பின் வாங்குகிறது. பாரதியின் நவீனப் பாடல் அழகு.

சுசி said...

நல்ல பதிவு நண்பரே. என் பசங்களுக்கு ஜாதின்னாலே என்னன்னு தெரியாது. இங்க நிறப் பாகுபாடு நெறயவே இருக்கு, அனுபவிச்சிட்டும் வர்றோம். ஆனா ஜாதி கிடையாதே. இவங்க பெரியவங்க ஆனதும் ஜாதின்னா என்னம்மான்னா என்ன சொல்லப் போறேன்னு தெரீல.
ஒவோருத்தரும் தான் திருந்தினா ஜாதிப் பிரச்னை ஒழியாது, குறையும். ஆனாலும் திருந்தணுமே???

சாலிசம்பர் said...

சொல்லரசன்,இதே அனுபவம் எனக்கும் நேரிட்டது.எல்கேசி வகுப்புக்கு சாதி,மத தகவல்கள் கட்டாயமாக தேவையா என்று பணிவாக , பள்ளி முதல்வரிடம் கேட்டபோது,இந்த தகவல்கள் இல்லாமல் நிச்சயமாக சேர்த்துக்கொள்ள முடியும்,ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது , கல்வித்துறை அலுவலகத்தால் மாணவரின் சாதிச்சான்றிதழ் கட்டாயமாக கேட்கப்படுவதாகவும்,அதனால் அதை ஆரம்பத்திலேயே கேட்டு வாங்கி வைத்துக்கொள்ள பள்ளிநிர்வாகம் அறிவுறுத்தப்படுகிறது என்ற ரீதியில் எனக்கு பதில் அளித்தார்.

பள்ளியில் சாதி,மத தகவல்கள் தேவையில்லை என்று 1970களிலேயே கலைஞரால் உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது,ஆனால் ஏட்டளவிலேயே உள்ளது என்று நினைக்கிறேன்.இடஒதுக்கீடு பிரச்சினைக்காக கல்வித்துறையினரால் இந்த வழக்கம் விடாப்பிடியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இட ஒதுக்கீடு தேவையில்லை என முடிவு செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ,சாதி தகவல்களை பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கலாம்.

உமா said...

வணக்கம் சொல்லரசன். நீண்ட நாளுக்குப் பின் என்றாலும் மிக நல்லப் பதிவு. மிகவும் தாமதமான பின்னூட்டம் என்றாலும் சிறு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால் எழுதுகிறேன்.

முதலில் நான் சாதியைப்பற்றி எழுத வேண்டாம் எனச் சொல்லவில்லை. சாதிக் கொடுமைத்தீரும் வரை அதைப்பற்றி எழுதத்தான் வேண்டும். ஆனால், ஒருவரின் சாதனையை 'முதல் தலீத் ' என்பதற்காக அல்லாமல் அவரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றிக்காக புகழலாம். ஏமாற்றுபவர் உயர் சாதியில் மட்டுமல்லாமல் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். உயர் சாதிக்காரன் ஏமாற்றினான் என் எண்ணாமல் ஏமாற்றுக்காரன் என எண்ணினால் எவ்வளவோ உயர் சாதிக்காரரின் பெருந்தன்மையை உணரலாம்.

இதுவரையில் நான் எந்த சாதி என்று யாரிடமும் பேசியதில்லை. நான் உயர் சாதி என்று நீங்கள் சொல்லுகின்ற பிராமண வகுப்பைச் சேர்ந்தவள். என் எழுத்துக்கள் எதிலும் சாதியைப் பற்றி எழுதுவதில்லை. இந்த கோட்டாமுறையாலும் சாதியாலும் உயர் சாதிக்காரர்கள் படும் வேதனை மிகப்பெரிய பதிவாகிவிடும். அதனால் தான் 7% ஒதுக்கீடு கேட்கும் நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறோம்.

பாரதியை நான் முன்னிருத்தியிருப்பதற்கான காரணமே இதுதான். பாரதி பிராமணன். என்றாலும் ஒரு தலீத்திற்கு பூனுலைப் போட்டு, பூனூல் போட்டவரெல்லாம் உயர் சாதி என்றால் நீயும் உயரலாம் என்று அவனுக்குத்தன்னம்பிக்கை ஊட்டியவர். காக்கை குருவியையும் தன் சாதியாக கண்டவன். நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உள்ளவர்கள் மேலோர் என்றவன்.

என்னுடன் வேலை செய்பவர்கள் பலர் வேறு சாதியை சார்ந்தவர்கள். எங்கள் உயர் அதிகாரிகளும் அதே வகுப்பைச் சேர்ந்தவர்களே. ஒரு பிரச்சனைக்காக உயர் அதிகாரியை பார்க்க நினைத்த இவர்கள் சொன்னது என்னத்தெரியுமா? ' வேறு ஆளா இருந்தால் பயமுருத்தியே வேலையை முடிக்கலாம், நம்மாளா போயிட்டான். ஒன்னும் செய்யமுடயலை' என்பதுதான்.

// அது ஏன் நீங்களே ஒரு பார்பனர் வீட்டிற்கு சென்று வாருங்கள் உங்களுக்கே புரிந்துவிடும்.//

இப்படி திரு ஞானசேகரன் ஒட்டு மொத்தமாக பார்பனரை சாடியிருப்பது வருந்ததக்கது.

கோட்டா முறையை உபயோகிப்பதுக் கூட தவறல்ல அனால் உங்கள் மகனின் மனதில் சாதிதுவேஷத்தை ஊட்டி விடாதீர்கள்.சாதிகள் அவ்வளவு சீக்கிரம் மறையாது. உயர்ந்தது தாழ்ந்தது என்ற மனப்பான்மை அடுத்த சந்ததியினரை பிடித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டால் ஒரு வேளை சில சந்ததிகள் தாண்டி சாதிகள் மறையல்லாம்.

சாதி சான்றிதழை வாங்கிக்கொடுங்கள். அம்மா,அப்பா பெயர் போல் அதையும் எழுதட்டும்,நான் இந்த சாதி,நீ இந்த சாதி என்பதோடு இருக்கட்டும். நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற உண்ர்வை மட்டும் பிள்ளைகளிடமிருந்து தள்ளிவைப்போம்.

நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உள்ளவர்கள் மேலோர் என்றவன்.

அன்புடன் உமா.

தேவன் மாயம் said...

ரொம்ப யோசிக்க வேண்டிய விசயம் !!

Unknown said...

கருத்துக்கு நன்றி அன்புமணி,அரசியலை காரணம்காட்டுவதைவிட‌ நம்மால் செய்யமுடிவதை செய்யவேண்டும்.அதாவது சலுகை தேவையற்றவர்கள் சாதியை குறிப்பிடுவ‌தை த‌விர்க்க‌வேண்டும்.

Unknown said...

நன்றிங்க கா.பா

சொல்லரசன் said...

ஸ்ரீதர் said...
என் தலைமுறையில் இந்த சாதி ஒழிந்து நான் பார்ப்பேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் சாத்தியம்.சாதி பார்த்து தொகுதியில் ஆள் நிறுத்துவது , சாதிக்காரனுக்கு மட்டுமே ஓட்டு என்பவைகள் மாற வேண்டும் முதலில்.

அடுத்த தலைமுறையில் ஒழிய சிறுமுயற்சியாவது நாம் எடுக்கவேண்டும்.

சொல்லரசன் said...

கருத்துக்கு நன்றிங்க உழவன்.

சொல்லரசன் said...

//நல்ல பதிவு நண்பரே. என் பசங்களுக்கு ஜாதின்னாலே என்னன்னு தெரியாது. இங்க நிறப் பாகுபாடு நெறயவே இருக்கு, அனுபவிச்சிட்டும்
வர்றோம்.//


இக்கரைக்கு அக்கரை பச்சை,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சுசி.

சொல்லரசன் said...

சாலிசம்பர் said...
//இட ஒதுக்கீடு தேவையில்லை என முடிவு செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ,சாதி தகவல்களை பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கலாம்.//


இதுதான் என‌து எதிர்பார்ப்பும்,முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றிங்க‌

சொல்லரசன் said...

//இந்த கோட்டாமுறையாலும் சாதியாலும் உயர் சாதிக்காரர்கள் படும் வேதனை மிகப்பெரிய பதிவாகிவிடும்.//

உயர்சாதிகாரர்கள் என்றில்லை ஏழ்மை நிலையில்லுள்ள தாழ்த்தபட்ட,பிற்படுத்தபட்ட மாணவர்களைகூட பாதிக்கும் இந்தமுறையை மாற்றி பொருளாதாரமுறை இடஒதுக்கிடு தேவை என்பது எனது விருப்பம்.
கருத்துக்கு நன்றிங்க உமா.

சொல்லரசன் said...

தேவன் மாயம் said...
ரொம்ப யோசிக்க வேண்டிய விசயம் !

நாளை தலைமுறை ஏற்றதாழ்வுயின்றி வாழ அவசியம் யோசிக்கவேண்டும்
டாக்டர்

சுந்தர் said...

சாதி ...... சதி ................சாதீ ...........?