இதிகாச தாசரே
நிறுவனதலைவரே
கற்பை விற்பவள் வேசி
தொண்டனை விற்பவன் யோசி
அஞ்சுரூபா மருத்துவரை
அய்யாவாக்கி அழகுபார்த்த
அன்றாட காய்ச்சிகளை
அய்யர் சாட்சியாக
ரெண்டலவொன்னு ஆட்ட
பகடையாக தொண்டனை
விற்றது ஏனோ
சங்கொத்து இருந்தவனை
சலசலப்பு உண்டாக்கி
கட்சி தொண்டனாக்கி
ஆக்காறாவும் ஆசிட்டும்
அறிய வைத்தாய்
மரவெட்டி பெயரிட்டு
வெளியுலகு அழைக்கவைத்த
அரசபடை சொந்தத்தை
விற்றது ஏனோ
சட்டையடி சவுக்கடி
சாய்ந்திரமோ உடாலடி
சனமே ஏசையில்
பதவியும் கொடுத்து
பவிசசையும் கொடுத்த
பந்தபடை பாட்டாளியை
விற்றது ஏனோ
கற்பைவிற்பவள் வேசி
தொண்டனை விற்பவன் யோசி
36 comments:
கொஞ்சம் விவரமா சொல்லுங்க சொல்லரசன்....
ஆகா நண்பா.. இது என்ன மருத்துவர் ஐயா ஸ்பெஷலா..? ஆமா அது என்னங்க ஆக்கறா? விளக்கம் ப்ளீஸ்..
சொல்லு!!!இது ஆவறதில்ல!!!இது ஆவறதில்ல!!!
//கற்பை விற்பவள் - வேசி
தொண்டனை விற்பவன் - யோசி//
வேசி கூட கொஞ்சம் வெட்கப்படுவாள்..
என்னங்க எழுத்தே தெரியலை. எல்லாம் படமா இருக்கு.[எல்லாம் காக்கா படம் மாதிரி இருக்கு. அதுவும் சரிதான்னு நினைக்கிறேன்.] word ல் காப்பி பண்ணிதான் படிச்சேன்.
nice
ஆ.ஞானசேகரன் said...
//கொஞ்சம் விவரமா சொல்லுங்க//
இந்தியாவிற்கு வரும் போது நீங்களே விவரமாக தெரிந்துகொள்வீர்கள்
கார்த்திகைப் பாண்டியன்
//ஆமா அது என்னங்க ஆக்கறா? விளக்கம் ப்ளீஸ்..//
தெரியாதமாதிரி கேட்ககூடாது,அது இல்லாம எப்படி மரத்தை சாய்க்கமுடியும்
பொன்.பாரதிராஜா said...
// வேசி கூட கொஞ்சம் வெட்கப்படுவாள்..//
உண்மைதான்,
ராசா இதுக்கு மேல பெயரை சுருக்கிடதீங்கோ
உமா said...
//என்னங்க எழுத்தே தெரியலை. எல்லாம் படமா இருக்கு.//
நன்றிங்க சகோதரி,
காலையிலே நையாண்டி நைனா எச்சரிக்கையை பார்த்து விட்டோம்.
என்னங்க எழுத்தே தெரியலை. எல்லாம் படமா இருக்கு:-)
என்னாச்சுங்க சொல்லரசன்? ஏன் உங்களுக்கு கோபம்? இவங்க எப்பவுமே இப்படித்தான்.....
கவிதை!!????? நீங்க முன்ன ஒருமுறை என்கிட்ட கேட்டது ஞாபகத்தில இருக்கு. அகர வரிசை கவிதையெல்லாம் ஒரு கவிதையான்னு..... சார்... நாலு வரியானாலும் ஒரு கருத்தைச் சொன்னா, அது கவிதைதான்!!!!
இந்த கவிதையில் உங்கள் கோபம் எப்படி கொப்பளித்திருக்கிறது என்பது புரிகிறது!! (ஃபிர்ட்ஜைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் குடிக்கவும்!!!)
இப்படிக்கு
ஆதவா
என்ன நடக்குது இங்கே????.. ஒன்னுமே தெரியலே... சுனா..பானாட்டே விளையாட்டா?...வேணா? இதோட நிறுத்திக்குவோம்...!
ஆதவா said
//இந்த கவிதையில் உங்கள் கோபம் எப்படி கொப்பளித்திருக்கிறது என்பது புரிகிறது!! //
இது என்னுடைய கோபம் இல்லை ஆதவா,எனது நண்பர்களில் சிலர் அங்கே இருக்கிறார்கள் அவர்களின் புலம்பல்தான் இது.
said...
//என்ன நடக்குது இங்கே????.. ஒன்னுமே தெரியலே... சுனா..பானாட்டே விளையாட்டா?...வேணா? இதோட நிறுத்திக்குவோம்...!//
எனக்கும் ஒன்னுமே புரியவில்லை,மற்றவர்களுக்கு நன்றாக எழுத்து தெரிகிறதே.
ஏதாவது கோளறு ஆகிவிட்டதா தெரியவில்லை?
இயற்கை said...
//என்னங்க எழுத்தே தெரியலை. எல்லாம் படமா இருக்கு:-)//
என்னவென்று தெரியவில்லை.சரி பார்க்கிறேன்.
எனக்கும் எழுத்து தெரியாது போனதேன்?
கவிதை அருமை...
நான் என்னமோ எனக்கு மட்டும்தான் காக்கா படம் தெரியுதுன்னு நினைச்சா எல்லார் கதையும் அதுதானா.. நண்பா.. கொஞ்சம் என்னான்னு பாருங்க..
கார்த்திகைப் பாண்டியன் said...
// நான் என்னமோ எனக்கு மட்டும்தான் காக்கா படம் தெரியுதுன்னு நினைச்சா எல்லார் கதையும் அதுதானா.. நண்பா.. கொஞ்சம் என்னான்னு பாருங்க..//
சரி செய்துவிட்டேன் நண்பா.
ராம்.CM said...
//என்ன நடக்குது இங்கே????.. ஒன்னுமே தெரியலே... சுனா..பானாட்டே விளையாட்டா?...வேணா? இதோட நிறுத்திக்குவோம்...!//
சிரமத்திற்கு வருந்துகிறேன்.
அரசியல்ல இது எல்லா சகஜம் தானே..
இந்த கவிதை தொல்காப்பிய நாயகனுக்கும், புரட்சித்தலைவிக்கும் பொருந்தும்..
பட்டம் பூச்சி விருதுக்கு வாழ்த்துக்கள்..
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க,லோகு
வேத்தியன் said...
//பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்...//
நன்றிங்க வேத்தியன் வாழ்த்துக்கும் வருகைக்கும்.
உதயதேவன் said...
//கவிதை அருமை...//
முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றிங்க
என்னை பின்தொடர்வதற்கு நன்றிங்க வேத்தியன்
ஆவேசக் கவியா!
ஆவேசபட்டவர்களின் சார்பாக கவி(ன்).
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றிங்க சகோதரி
சொல்லரசன் சொன்னது..
//கற்பை விற்பவள் - வேசி
தொண்டனை விற்பவன் - யோசி//
பொன்.பாரதிராஜா சொன்னது..
//வேசி கூட கொஞ்சம் வெட்கப்படுவாள்...//
ரெண்டுக்குமே.. ரிப்பிட்டேய்..
நன்றிங்க கடைகுட்டி நம் கடைபக்கம் வந்ததுக்கு
ஆகா, தேர்தல் வர நேரத்துல நல்ல சூடான கவிதை சொல்லரசன் :)
கருத்துக்கும்,வருகைக்கும்,
நன்றிங்க பிரேம்.
போட்டு தாக்கறீங்க..யாரைன்னு எனக்குப் புரியலை..(எதுக்கு வம்பு):)))))
இயற்கைக்கே! புரியவில்லை மருத்துவரின் அரசியல்.
நன்றிங்க வருகைக்கும்,கருத்துக்கும்.
Post a Comment