Wednesday, March 18, 2009

இந்திய பொருளாதாரம் சுவிஸ் வங்கியில்


கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து திரும்ப கொண்டுவருவோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டசெய்திவரவேற்கதக்கது.

சுவிஸ் வங்கியில் இந்தியாவின் கருப்பு பணம் (கொஞ்சம்தானுங்க)1.4 ட்ரிலியன்டாலர் இந்திய மதிப்பில் சுமார் 70 இலட்சம் கோடிடிடிடிடிடிடி இது உலக கருப்புபணத்தில் 56 சதவீதம் என்று,இண்டியன் இண்ஸ்டிட்டியூட் ஆப் பைனாஸ்சில் கடந்த மே மாதம் போராசிரியர் சுமன் அகர்வால் தாக்கல் செய்தபொருளாதார ஆய்வறிக்கையில்தெரிகிறது.

இது இந்தியாவின் கடன் தொகையைவிட பதின்முன்று மடங்கு அதிகம்.நம் நாட்டின் பணம் சுவிஸ் வங்கியில்இருக்கையில்,நாம் உலக வங்கியிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம்.அந்தபணம் இந்தியாவிற்கு கொண்டு வந்து (முடியாது என நீங்கள் சொல்லறது எனக்குகேட்குதுங்க)உலக நாடுகளுக்குகடன் கொடுத்து அதில் வரும் வட்டியில் நம் நாட்டிற்கு வரியில்லா பட்ஜெட்போடலாம்.இல்லையெனில் சுமார் 50 கோடி ஏழைமக்களுக்கு பிரித்துகொடுத்தால் நல்லயிருக்குங்கோ.(இதுக்கும் டோக்கன் கொடுத்துகாசுபார்க்காதீங்க பிறப்புகளா)

எனக்குள் ஒரு கேள்வி கடந்த 2008 பிப்ரவரி மாதத்தில் ஜெர்மனியின்புலனாய்வுதுறை பி.என்.டி அமைப்பு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அருகில்யுள்ளலீச்டென்ஸ்டின் நாட்டில் உள்ள எல்.டி.ஜி வங்கியில் வாடிக்கையாளர் தகவலைசேகரித்து பணத்தை மீட்டு சென்றபோது.அப்போது அந்த வங்கி இதுபோல்இந்தியா கேட்டால் அவர்கள் நாட்டின் வாடிக்கையாளர் விபரமும் பணத்தையும் கொடுக்கதயார் என்று கூறியபோது எங்கே இருந்தார்கள் இவர்கள்?

இதுகுறித்து ட்ரான்ஃபரன்ஸீ இண்டர்நேசன் அமைப்பின் இந்திய தலைவர் அட்மிரல்தஹிலியானி இந்தியாவிற்கு சொந்தம் ஆன பணத்தை வாங்கிகொடுக்க இந்தியஅரசு மறப்பது ஏன்? என்று கேட்டபோது என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்.இந்த கருப்பு பணம் முதலை வாய்க்குள் போனது என்பதுஎங்களுக்கு தெரியும்.இதில் (சுமார் 50 சதவீதத்திற்கு மேலுள்ள ஊழல்பணம்)எல்லா அரசியில்வாதிகளுக்கும்,மற்ற கருப்பு பணம்சினிமாநடிகர்களுக்கும்,பெரும் தொழிலதிபர்களுக்கும்,கிரிகெட் வீரர்களுக்கும்சொந்தம்.அது மட்டும்யின்றி 1934 ஆம் ஆண்டு சுவிட்ச்ர்லாந்து நாட்டு வங்கிதொடர்பான சட்டபடி அந்த நாடே சுவிஸ் வங்கியில் விபரம் கோரமுடியாதுஎன்று கேள்விபட்டுயுள்ளோம்.அதையும் மீறி கருப்பு பணத்தை இந்தியாவிற்குகொண்டுவந்தால்,இந்தியாவின் சரசாரி வருமானம் பெருகி மக்கள் வளமான இந்தியர்களாக இருப்பர்கள்.எனவே நீங்கள் ஆட்சியமைத்தாலும் அமைக்காவிட்டாலும் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள கருப்பு பண விவரம் தொடருமா?
குறைந்தபட்சம் பெயர்பட்டியில்லாவது வெளியிடமுயற்சி செய்வீர்களா?

Saturday, March 14, 2009

கொள்கைசிற்பிகளே வருக! வருக!


யராது முயற்சித்து
ற்றல் பலவணி
ந்தியாவை
லோகத்திற்கு
யர்த்தி
ர்தோறும்
ழுச்சி
ற்றம்பெற
ம்பொறி ஆட்சி செய்ய‌
ற்றுமையுடன்
டி
ஒள வியமில்லா
க்கு கோட்டையாகுக‌

கொண்டவர் எல்லாம் கூடியதுயில்லை, கூடியவர் எல்லாம் கொண்டவரும் இல்லை


என்னங்க குழப்பமாக இருக்க,எனக்கும்தானுங்கோ,
ஆமாம் நீங்க எத சொல்ல வாரீங்க‌


Wednesday, March 11, 2009

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கல்விதகுதி‍ ஏதும் தேவையில்லை

உயரம் மைக் எட்டும் உயரம்

எடை நாற்காலி தூக்கும் அளவிற்கு

நன்னடத்தை சிறை சென்றவர்க்குமுன்னுரிமை

பிறதகுதிகள்

1)பல வழக்குகளை சந்தித்து அனுபவமபெற்றுயிருக்கவேண்டும்

2)சுமார் ஜந்து கோடி செலவு செய்யும்நபர்

(இதை பத்து அல்லது நுறு மடங்காக எடுப்பது உங்கள் திற்மையை பொருத்தது)

சம்பளம்

அடிப்படை சம்பளம் - 12,000/ மாதம்

பஞ்சபடி - 10,000/மாதம்

அலுவலகபடி - 14,000/மாதம்

பயனபடி - 48,000/மாதம்

பிற சலுகைகள்

இந்தியா முழுவதும் இலவச இரயில் பயனம்,

40 விமான பயனங்கள்/ஆண்டுக்கு

50,000 யுனிட்டு இலவச‌மின்சாரம்

1,70,000 இலவச தொலைபேசிஅழைப்புகள்

விண்ணப்பம் பெறும் தேதி ,நேர்முக தேர்வு ஜந்து கட்டமாக நடைபெறும்(அனைத்து செய்திதாள்களையும் பார்க்க‌)

விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்

உடன் பிறப்பு கோச்சிங் சென்டர்

உடன் பிறவா கோச்சிங் சென்டர்

தாமர கோச்சிங் சென்டர்

பேரியக்க‌ கோச்சிங் சென்டர்

பசுமை கோச்சிங் சென்டர்

தோழர்கள் கோச்சிங் சென்டர்

மறுமறந்த‌ கோச்சிங் சென்டர்

மனைவி,மைத்துனர் கோச்சிங் சென்டர்

இவர்கள் பரிந்துரைக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டும்தேர்வு எமுத அனுமதியளிக்கபடுவார்கள்

அனைத்து லெட்டர் பேடு கோச்சிங் சென்டர்

சுயம் கோச்சிங் சென்டர்

இங்கிருந்து வரும் விண்ணப்பங்கள் முடிந்தயளவு நிராகரிக்கபடும்

முக்கியமானத மறந்துட்டனங்க அதானுங்க‌

வே லையின் பெயர் மக்கள் பிரதநிதி

காலியிடங்கள் 536

வந்தவர் எல்லாம் வென்றததும் இல்லை

வென்றவர் எல்லாம் வந்ததும் இல்லை

Saturday, March 7, 2009

மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துகள்


கருவரை தொடங்கி கல்லரை வ்ரை சம்பளம்யில்லா வேலைகாரிகளுக்கும்

கள் உண்டாலும் கணவன் "புல்" னாலும் புருசன் என நொந்தகாரிகளுக்கும்

வகுப்பறையிலிருந்து அலுவலகம் வரை தொடரும் ஆபாசங்களை அலட்சியப்டுத்தும் அசட்டைகாரிகளுக்கும் இடஒதுக்கிட்டில் தலைவியாகி கைஒப்பம் மட்டும் இடும் பரிதாபகாரிகளுக்கும்.

படிததபெண்,புதுமைபெண்,புரட்சிபெண் எனறாலும் கல்யான சந்தையில் விலை கொடுத்து விற்கபடும் மோககாரிகளுக்கும்

உலக மகளிர் தின வாழ்த்துகள்வாழ்த்தபட்டவர்கள் வாழ்ந்துவிடவில்லை

வீழ்த்தபட்டவர்கள் எல்லாம் வீழ்ந்துவிடவில்லை

காலங்கள் மாறும் கனவுகளும் மாறும்

கலங்கரை விளக்கவாய் அன்று

மார்ச் 8 மகளிர் தின வாழ்த்துகள்
Wednesday, March 4, 2009

வழக்கொழிந்த சொற்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் கார்த்திகைப் பாண்டியன் வழக்கொழிந்தசொற்கள் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்.இரண்டு நாளாக இந்த பக்கம்வரததால் நேற்று என்னை தொடர்பு கொண்ட கா.பா. என்ன நண்பா பதிவபார்த்தியா என கேட்டபோதுதான் தெரிந்தது "தல" நம்மள சிக்கவச்சமேட்டரு. சரிபார்க்கலாம்னு சொல்லிட்டு.
உடனே என் நண்பன் தமிழ் புலவனை கூப்பிட்டு எனக்கு பத்து "வழக்கொழிந்தசொல்" சொல்லுடான் கேட்டேன், அவனோ வழகொழிந்த சொல்லா? அல்லதுவழக்குமருவிய சொல்லா?அப்படின் கேட்க. எனக்கு சந்தேகம் வந்து மறுபடியும்பதிவை பார்த்து,வழக்கொழிந்த சொற்கள்தான் சொல்லிட்டு ஆர்வக்கோளாறுகாரணமாக இரண்டுக்கும் என்ன வித்தியாசம்னு கேள்வி கேட்க. அதகாகப்பட்டதுவழக்கத்திலிருந்து முற்றிலும் அழிந்த சொல்,வழக்கத்தில் இருக்கு ஆனால்உச்சரிப்பு மட்டும் மருவி இந்த மாதிரி...........இந்த மாதிரி......... வரும் ஆனா வராதுகணக்கா சொல்ல ஆளைவுடுங்கட சாமினுட்டு துங்க போனேன்.
அப்ப பார்த்து கார்த்திகைப் பாண்டியன் போன்போட்டு கவின் மெயில்அனுப்பிட்டாரு அவர் வெளியூரில் இருப்பதால் எமுதமுடியவில்லை. (தப்பிக்கஇப்படியும் வழியிருக்கா ) எனவே நீங்க கண்டிப்பாக பதிவு எமுதிஆகுனும்ன்மெரட்ட.என்னங்கட வம்பபோச்சி அப்படின்ங்கோ, சரி நம்ம கொள்கைபடி(அதுஎன்ன உங்க கொள்கையின் நீங்க கேட்கறது காதுல கேக்குதுங்க) அதானுங்கசரியா? தப்பா? மனசுல இருக்கறத சொல்லிவிடு தப்பா இருந்ததிருத்திக்கோ,சரியா இருந்த மெச்சிக்கோங்கற கொள்கைபடி எனக்கு தெரிந்ததைஎமுத ஆரம்பிச்சனுங்க இத படிக்கறதும் இடிக்கறதும் உங்க விருப்பங்கோ.
வழக்கொழிந்த சொற்கள்
ஆர்கலிகடல்
சூத்திரம் - வஞ்சனை, பழிவாங்கு
அடை - முல்லை
எச்சம் - மிச்சப்படும் பொருள்
புறவுகாடுகள்
வைகல்பொழுது
உதிரம் - இரத்தம்
உகிர் - நகம்
தக்கிணைகாணிக்கை
முகட்டு வழிவாயிற்படி
அளாவிகரைத்தல்

வட்டார
வழக்கொழிந்த சொற்கள்
தொறப்புகுச்சி-சாவி
பைய - மெல்ல
தண்டல்- வரி
வெள்ளனா -அதிகாலையில்
வெகுளான்-கோபகாரன்
தப்பா இருந்த சொல்லிருங்க.அப்புறம் யாரவது இரண்டு பேரை பதிவுக்குஅழைக்கவேண்டுமாம்.

"வென்பா கவிஞர்" அகரம் அமுதா
"சிலகவிதைகள்" உமா
அன்போடு வருக
பதிவுவொன்று இடுக