இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த
தங்க தமிழனுக்குவாழ்த்துகள்
1929 தொடங்கி இதுவரை எந்த இந்திய இசையாமைபாளர்க்கும் கிடைக்காத ஒரு அங்கீகாரம்.இன்று தமிழனாய் நீ பெற்று கொடுத்துயிருக்கிறாய்.இந்திய இசையை உலக அரங்கில்தலை நிமிர்ந்து பார்க்கவைத்த முதல் இந்தியன். இரண்டுபிரிவுகளில் ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான்.அவர்களை வாழ்த்துகிறேன்
மும்பை நகரின் குடிசைகள்,அமுக்கான தெருக்களையும், ஏழ்மையும் படம் பிடித்து உலக அரங்கில் இந்தியாவை சிறுமை படுத்திவிட்டார்கள் என்ற சர்ச்சைக்கு இடையில் எட்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருது பெற்றபடம் ''ஸ்ல்ம் டாக் மில்லியனர்"இதில் பின்னனி இசை,பாடல் இரு பிரிவிலும் சிறந்தாக தேர்தெடுக்கபட்டுஆஸ்கார் என்னும் நாண்கு கிலோ தங்கசிலையை பெற்ற தங்கதமிழா. இன்று தொடங்கிய கணக்கு,வரும் வருடங்களில் இந்திய திரையுலகில் தொடரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளாய்.
"தாய் மண்ணே வணக்கம்" பாடி தேசபற்றை பொங்கசெய்த தமிழனே இதுபோல் திருக்குறளை உன் இசையால் உலக அரங்கிற்கு எடுத்து சென்று. தமிழனின் பெருமை உலகறிய செய்யும் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்