Wednesday, April 22, 2009

பறக்க விட்டேன் பட்டாம்பூச்சியை!


அன்பார்ந்த பதிவுலகபெரியோர்களே,பாசமிகுநண்பர்களே,நேசமிகு கவிஞர்களே.சிந்தனை சிற்பிகளே.........
(தேர்தல் நேரபிரச்சார பேச்ச கேட்டு கேட்டு அதே மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டேன்)
சரி விஷயத்திற்கு வரவோம்.மூன்று வாரத்திற்குமுன்பு நண்பர் கார்த்திகை பாண்டியன் போன்ல் கூப்பிட்டு நண்பா நம்ம பதிவு பாருங்க ஒரு மகிழ்ச்சியான செய்தின்னுசொன்னார்.நான்வெளியில் இருப்பதால்உடனே பார்க்கமுடியாது என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்டால்,பதிவ பாருங்கன்னு சொல்லி விட்டு போனை கட் செய்துவிட்டார்.
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள் பதிவு போட்டவருக்குகாதலி கிடைத்து விட்டாளா? அந்த மகிழ்ச்சியில் மனுசன் ஏதாவ்து பதிவு போட்டுயிருப்பார்ன்னு நெனைச்சி பெட்டியை திறந்து பார்த்தா பற பற பட்டாம்பூச்சி பதிவுபோட்டு நமக்குபட்டாம்பூச்சி விருதுகொடுத்துட்டார்.

இதென்னடா பதிவுலகத்துக்கு வந்த சோதனை நமக்கெல்லாம் விருது கொடுத்து இருக்கார்.அதுவும் நான் முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்.பதிவு எழுத வந்த மூன்று மாதத்தில்விருதா? அப்படின்னுங்க,கார்த்திகைபாண்டியரிடம் இதெல்லாம் நமக்கு வேண்டாங்க வேற நல்ல எழுதற பதிவருக்கு கொடுக்க சொன்னா,அதெல்லாம் முடியாது கொடுத்தது கொடுத்ததுதான்,பாசத்தோடு கொடுப்பதை ஏற்றுகொள்ளவேண்டும் என்றார்.

ஒருவேளை இதுவும் நம்ம அரசாங்கம் கொடுக்கும் விருதுபோன்று வேண்டபட்டவர்களுக்கு விவேகமாக கொடுக்கும் விருதுபோல,பதிவுலகில் பாசமிகு பாண்டியர் கொடுக்கிறார் என நினைத்து விருது பட்டயத்தை பசை போட்டு ஒட்டிவிட்டேன் நமது தளத்தில்.சும்மா சொல்லகூடாது அதை ஒட்டியபிறகு புதிய புதிய நண்பர்கள் எல்லாம் வந்து வாழ்த்து சொன்னபோது
சந்தோசமா இருந்துங்க.

போனவாரம் நான் விருது யாருக்கும் கொடுக்காமல் இருப்பதை பார்த்த ஒரு பொய்யன பொய்யபேசும் தமிழன் நான் விருது கொடுத்ததாக பதிவு போட்டு விருது இன்னும் கொடுக்காமா என்ன செய்யறிங்கன் கேட்க அப்பதான் நமக்குதெரிந்தது இந்த விருதுதை யாராவது மூன்றுபேருக்கு கொடுக்க வேண்டும் என்று சரி யாருக்கு கொடுப்பது என்று யோசிக்கையில் என்னுடைய ஞாபகத்திற்குவந்த மூன்று நண்பர்கள்

சிலகவிதைகள் சகோதரி உமா
2006 ல் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து இன்று வரை பல கவிதைகள் எழுதியவர்.இவரது மரபுகவிதைகள் பெரும்பாலும் சமுதாய சாடலாகவே
இருக்கும்.சில நேரங்களில் வென்பா முலம் தனது கருத்தை தைரியமாக சொல்பவர்.அன்றாட சமுதாய நிகழ்வுகளை கூட கவிதைகளால் பதிவுலகத்திற்கு தெரிவித்துவிடுவார்.இவருடை தளத்தில்உள்ள சுட்டிகள் அனைத்தும் இலக்கியம் சார்ந்த தளமாகவே இருக்கும்.

சாமானியனுக்கு சகல ஞானமும் சென்று சேர வேண்டும் என்று எழுதும் தஞ்சையில் பிறந்து சிங்கையில் பனிபுரியும் .ஞானசேகரன்.பதிவுகளில் சதம் கண்டு அன்றாட பிரச்சனைகளை அலசி பாமரனுக்கும் புரியஎளிமையாக எழுதுபவர்.தனது தளத்தில்ஒரு மினி நூலகத்தையே வைத்திருப்பவர்
தனதுதளத்தை புதிதுபுதிதாக அலங்கரிப்பதில் அலாதிபிரியம் என்பதை இவரது தளத்தை பார்த்தால் புரியும்.

"உழவனின் உளறல்கள்" உலகத்தில் உழவன் எப்படியோ?அதுபோல் இந்த உழவனின் உளறல்கள் பதிவுலகத்தில்.சாரசரி மனிதனின்அன்றாட
வாழ்க்கையை மிக எளிமையாக கவிதைகளாக எழுதுபவர்.இவரது தளத்தை பார்த்தால் ஒரு கவிதை தொகுப்பு போல்தான் இருக்கும்.பதிவுகளால் மட்டும் அரியபட்டவர். இவரை பற்றி எனக்கு தெரியாதுஇருந்தாலும் இவரது பதிவு எனக்கு பிடிக்கும்.

அப்பறம் நமக்கு ஒரு சந்தேகம் இந்த விருதுக்கு ஏன் பட்டாம்பூச்சி பெயர் வந்துச்சிங்கோ ஒரு வேளை பட்டாம்பூச்சி மலருக்கு மலர் தாவுவது போல் இதுவும் பதிவருக்கு பதிவர் போகவேண்டும் என்பதாலோ?
பதில் சொல்லுங்க பாசகார நண்பர்களே.

Wednesday, April 15, 2009

"விரோதி"க்கு வந்த சோதனை

நேற்றுவந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கு பதில் வாழ்த்து சொல்லாமா, வேண்டாமா, என்று எனக்கு ஒரே குழப்பமாகயுள்ளது.

ஏற்கெனவே தைமுதல் நாள்தான் தமிழ்புத்தாண்டு என்றுவாழ்த்துகூறிய திராவிட நண்பர்களிடைய சித்திரையில்தானே தமிழ்புத்தாண்டு என சொல்ல,அவர்கள் எங்கதலைவ்ர் உலகதமிழறிஞர்களைகலந்து தை திங்கள்தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட‌வேண்டும் என்று சட்டம் போட்டது தெரியதா? உலகமே ஏற்றுகொண்டு உள்ளது, உனக்கு என்னடா அப்படின் கேட்க,எதுக்குடா வம்பு நாமும் வாழ்த்து சொல்லிவிட வேண்டியதுதானுன். எல்லோருக்கு வாழ்த்து சொல்லிகொண்டாடிய முன்று மாதத்திற்குள்.

மறுபடியும் நேற்று பதிவுலக நண்பர்களின் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளின் குறுஅஞ்சலை பார்த்தவுடன் ஒரேவருடத்தில் இரண்டுதமிழ்புத்தாண்டா? கொஞ்சம் குழப்பமாகதான் உள்ளது.இது பற்றி இன்று வாழ்த்து அனுப்பிய நண்பரும் ஆண்மிகத்திலும் சாஸ்திரத்திலும் அதீத நம்பிக்கை உள்ள வங்கியில் பனியாற்றுபவரிடம்,இதைதான் தைமாதத்தில் கொண்டாட சொல்லி சட்டம் போட்டு,நண்பர்கள் சொல்ல நானும் கொண்டாடிவிட்டேனே என்று சொல்ல, அவருக்கு என்மேல் எத்தனை வருட கோபமோ தெரியவில்லை மனுசன் ஒரு காய்ச்சி காயத்து விட்டார்.நீ எப்ப அந்தகூட்டத்திலிருந்து வெளியேவருவீயோ,அப்பதான்டா உருப்படுவே அப்படின்னு சாபமே கொடுத்துட்டார்.பிரச்சனை வந்தா முன்னாடி நிக்கற பிறப்புகளையும், தோழர்களை விட்டு எப்படிங்க வெளியவரமுடியும்.நீங்க இதற்கு விளக்கம் சொல்லுங்கோனுன் கேட்க.

பத்து பேர்சேர்ந்து கூட்டம் போட்டு சட்டம் கொண்டுவந்தால் சரித்திரம் மாறிவிடுமோ!
அப்படின்னா ஒரு சட்டம் போட்டு ஈழத்து பிரச்சனையை ஏன் தீர்க்க‌முடியல,தமிழகத்தில் உள்ள லஞ்சத்தையும்,வறுமையும் சட்டம் போட்டு ஒழிக்கவேண்டியதுதானே.............

நான் குறுக்கிட்டு அய்யா சாமி புத்தாண்டு எப்பகொண்டாடலாம் அதை சொல்லு முதல்ல........

அததான்டா சொல்லவருகிறேன் என்று வானசாஸ்திரத்தையும், கிரஹகநிலையும், ஆதிமனிதனின் பருவகால கணக்குகளையும், அப்போதைய குமரிநிலப்பரப்பு அதன் பின் தமிழர் இருப்பிடம்பற்றி மிக மிக.....நீண்ட விளக்கம்கொடுத்து.சித்திரை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டுனுன் சொல்லிமுடிக்க நம்ம அலைபேசி பேட்டரியில்சார்ஜ் போகவும்சரியா இருந்ததுங்கோ. அவர்சொன்னவிளக்கத்தைஎழுதும் அளவிற்கு எனக்கு நேரமின்மையின் பொருட்டும்.நாலுவரியில் எழுதி நானும் இங்கே இருக்கிறேன் என்று காட்டிகொள்ள வேண்டியதால்.சுருக்கமாக சொல்லிவிடறனுங்க.

ஆதி மனிதன் விவசாயம் செய்ய நாட்களை சூரியனைகொண்டும், பருவநிலையை சந்திரனைகொண்டு ஆறுபருவமாக பிரித்து காலத்தை அறிந்துவைத்துள்ளான்.இதில் சூரியன் தெற்கே இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வான் உச்சிக்கு வருவது ஆண்டின் தொடக்கநாளாக கொண்டாடபடுவது பழங்காலத்துகுமரி நிலப்பரப்பின் தமிழர்களின் மரபு அந்த நாள் மார்ச் 21, அதன்பின் குமரிகண்டத்தை பெருங்கடல் ஆட்கொண்டபின் இடம் பெயர்ந்து வந்தபின் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை 1, தற்போதயை தமிழகத்திற்கு வந்தபின் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை பத்து,என்வே தமிழனின் மரபுபடி சூரியன்வான் உச்சிக்கு வரும் சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாட‌வேண்டும் என்பது நம் நண்பரின் வாதம்.

இது நம்ம நண்பர் சொல்ல கேட்டு எழுதிய செவிவழி செய்தி. இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று என‌க்கு தெரியவில்லை.இருந்தாலும் தமிழ் வருடத்தின் இருபத்திமூன்றாவ‌து விரோதிவருட புத்தாண்டு போகட்டும் அடுத்து வருகிற விக்ருதி வருடபுத்தாண்டு எப்போது கொண்டாடுவது என்று தெரிந்தால் நமக்கும்,அடுத்து ஆண்டு காலண்டரில் போட சிவகாசி மக்களுக்கும் வசதியாக இருக்கும்.

என‌வே அடுத்த தமிழ் புத்தாண்டு எப்போது தைமாதத்திலா?சித்திரையிலா?

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று மக்களிடம் ஒட்டுகேட்டு ஜஸ்கிரிமும் டிப்ஸ்ம் தர நமக்குவசதி இல்லைங்க.

சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கும் அளவிற்கு வயது வந்தவங்க பதிவு இல்லை நம்முடையது.

வழக்கமா பின்னுட்டம் போடும் பாசகார நண்பர்களே நம் குழப்பத்தை தீர்க்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

நீங்களும் வழக்கமா பின்னுட்டம் போடுவது போல,
இதிலும் அரசியலா?ஜஸ்கிரிமுக்கு டிப்ஸ்க்கும் விளக்கம் வேண்டும்? மறைந்து இருந்து அம்பு விடுறீங்க,கண்டன பேரணி நடத்துவோம்,ஏன் இப்படி? அப்படின் போடமா

உருப்படியான யோசனை சொல்லுங்க பாசமுள்ள நண்பர்களே

Wednesday, April 8, 2009

மின்னலே! மின்னலே!மின்னலே! மின்னலே!

நொடியில் மறையும் மாயவனே.

உன் சிதறலை

சிறை பிடித்த‌

வல்லவன் யாரோ?

மின்னலே! மின்னலே!

மின்சார கண்ணனே-உன்னை

தாமிரதகட்டில் மடக்கிய‌

மானிடசக்தியை அறிவீரோ?

அறிந்தால் சொல் ஆற்காட்டற்க்கு

மின்னலில் மின்சாரம்

எடுப்பது எப்படி?அறுபதுகளில்

எழுச்சி கண்ட‌

கனவுலக நகரம்

கல்தோன்றா மண்தோன்றா!

காலத்து.............

வெட்டி சொல்வீச்சு வீரர்கள்

கவனிப்பரோ!Thursday, April 2, 2009

உண்மை தொண்டனின் குமறல்


இதிகாச தாசரே

நிறுவனதலைவரே

கற்பை விற்பவள் வேசி

தொண்டனை விற்பவன் யோசி


அஞ்சுரூபா மருத்துவரை

அய்யாவாக்கி அழகுபார்த்த

அன்றாட காய்ச்சிகளை

அய்யர் சாட்சியாக

ரெண்டலவொன்னு ஆட்ட

பகடையாக தொண்டனை

விற்றது ஏனோ


சங்கொத்து இருந்தவனை

சலசலப்பு உண்டாக்கி

கட்சி தொண்டனாக்கி

ஆக்காறாவும் ஆசிட்டும்

அறிய வைத்தாய்

மரவெட்டி பெயரிட்டு

வெளியுலகு அழைக்கவைத்த

அரசபடை சொந்தத்தை

விற்றது ஏனோ


சட்டையடி சவுக்கடி

சாய்ந்திரமோ உடாலடி

சனமே ஏசையில்

பதவியும் கொடுத்து

பவிசசையும் கொடுத்த

பந்தபடை பாட்டாளியை

விற்றது ஏனோ


கற்பைவிற்பவள் வேசி

தொண்டனை விற்பவன் யோசி