Wednesday, April 22, 2009
பறக்க விட்டேன் பட்டாம்பூச்சியை!
அன்பார்ந்த பதிவுலகபெரியோர்களே,பாசமிகுநண்பர்களே,நேசமிகு கவிஞர்களே.சிந்தனை சிற்பிகளே.........
(தேர்தல் நேரபிரச்சார பேச்ச கேட்டு கேட்டு அதே மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டேன்)
சரி விஷயத்திற்கு வரவோம்.மூன்று வாரத்திற்குமுன்பு நண்பர் கார்த்திகை பாண்டியன் போன்ல் கூப்பிட்டு நண்பா நம்ம பதிவு பாருங்க ஒரு மகிழ்ச்சியான செய்தின்னுசொன்னார்.நான்வெளியில் இருப்பதால்உடனே பார்க்கமுடியாது என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்டால்,பதிவ பாருங்கன்னு சொல்லி விட்டு போனை கட் செய்துவிட்டார்.
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள் பதிவு போட்டவருக்குகாதலி கிடைத்து விட்டாளா? அந்த மகிழ்ச்சியில் மனுசன் ஏதாவ்து பதிவு போட்டுயிருப்பார்ன்னு நெனைச்சி பெட்டியை திறந்து பார்த்தா பற பற பட்டாம்பூச்சி பதிவுபோட்டு நமக்குபட்டாம்பூச்சி விருதுகொடுத்துட்டார்.
இதென்னடா பதிவுலகத்துக்கு வந்த சோதனை நமக்கெல்லாம் விருது கொடுத்து இருக்கார்.அதுவும் நான் முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்.பதிவு எழுத வந்த மூன்று மாதத்தில்விருதா? அப்படின்னுங்க,கார்த்திகைபாண்டியரிடம் இதெல்லாம் நமக்கு வேண்டாங்க வேற நல்ல எழுதற பதிவருக்கு கொடுக்க சொன்னா,அதெல்லாம் முடியாது கொடுத்தது கொடுத்ததுதான்,பாசத்தோடு கொடுப்பதை ஏற்றுகொள்ளவேண்டும் என்றார்.
ஒருவேளை இதுவும் நம்ம அரசாங்கம் கொடுக்கும் விருதுபோன்று வேண்டபட்டவர்களுக்கு விவேகமாக கொடுக்கும் விருதுபோல,பதிவுலகில் பாசமிகு பாண்டியர் கொடுக்கிறார் என நினைத்து விருது பட்டயத்தை பசை போட்டு ஒட்டிவிட்டேன் நமது தளத்தில்.சும்மா சொல்லகூடாது அதை ஒட்டியபிறகு புதிய புதிய நண்பர்கள் எல்லாம் வந்து வாழ்த்து சொன்னபோது
சந்தோசமா இருந்துங்க.
போனவாரம் நான் விருது யாருக்கும் கொடுக்காமல் இருப்பதை பார்த்த ஒரு பொய்யன பொய்யபேசும் தமிழன் நான் விருது கொடுத்ததாக பதிவு போட்டு விருது இன்னும் கொடுக்காமா என்ன செய்யறிங்கன் கேட்க அப்பதான் நமக்குதெரிந்தது இந்த விருதுதை யாராவது மூன்றுபேருக்கு கொடுக்க வேண்டும் என்று சரி யாருக்கு கொடுப்பது என்று யோசிக்கையில் என்னுடைய ஞாபகத்திற்குவந்த மூன்று நண்பர்கள்
சிலகவிதைகள் சகோதரி உமா
2006 ல் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து இன்று வரை பல கவிதைகள் எழுதியவர்.இவரது மரபுகவிதைகள் பெரும்பாலும் சமுதாய சாடலாகவே
இருக்கும்.சில நேரங்களில் வென்பா முலம் தனது கருத்தை தைரியமாக சொல்பவர்.அன்றாட சமுதாய நிகழ்வுகளை கூட கவிதைகளால் பதிவுலகத்திற்கு தெரிவித்துவிடுவார்.இவருடை தளத்தில்உள்ள சுட்டிகள் அனைத்தும் இலக்கியம் சார்ந்த தளமாகவே இருக்கும்.
சாமானியனுக்கு சகல ஞானமும் சென்று சேர வேண்டும் என்று எழுதும் தஞ்சையில் பிறந்து சிங்கையில் பனிபுரியும் ஆ.ஞானசேகரன்.பதிவுகளில் சதம் கண்டு அன்றாட பிரச்சனைகளை அலசி பாமரனுக்கும் புரியஎளிமையாக எழுதுபவர்.தனது தளத்தில்ஒரு மினி நூலகத்தையே வைத்திருப்பவர்
தனதுதளத்தை புதிதுபுதிதாக அலங்கரிப்பதில் அலாதிபிரியம் என்பதை இவரது தளத்தை பார்த்தால் புரியும்.
"உழவனின் உளறல்கள்" உலகத்தில் உழவன் எப்படியோ?அதுபோல் இந்த உழவனின் உளறல்கள் பதிவுலகத்தில்.சாரசரி மனிதனின்அன்றாட
வாழ்க்கையை மிக எளிமையாக கவிதைகளாக எழுதுபவர்.இவரது தளத்தை பார்த்தால் ஒரு கவிதை தொகுப்பு போல்தான் இருக்கும்.பதிவுகளால் மட்டும் அரியபட்டவர். இவரை பற்றி எனக்கு தெரியாதுஇருந்தாலும் இவரது பதிவு எனக்கு பிடிக்கும்.
அப்பறம் நமக்கு ஒரு சந்தேகம் இந்த விருதுக்கு ஏன் பட்டாம்பூச்சி பெயர் வந்துச்சிங்கோ ஒரு வேளை பட்டாம்பூச்சி மலருக்கு மலர் தாவுவது போல் இதுவும் பதிவருக்கு பதிவர் போகவேண்டும் என்பதாலோ?
பதில் சொல்லுங்க பாசகார நண்பர்களே.
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
வணக்கம் சொல்லரசன்.. பாட்டாம்பூச்சி வாழ்த்துகள்... என்னங்க இது நமக்குமா? நான் விருது என்ற நிலை அடையவில்லை என்றுதான் நினைக்கின்றேன்.. நீங்கள் சொல்வதைபோல் பாசமா கொடுக்கின்ற விருதை... வாங்கி யாருக்கு கொடுப்பது என்பதுதான் தெரியவில்லை.. எல்லோரும் வாங்கிவிட்டார்கள் என்றே நினைக்கின்றேன்...... நன்றி சொல்லரசன் மெலும் சிலகவிதைகள் உமா அவர்களுக்கும் உழவனின் உளறல்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
வருகைக்கு நன்றிங்க ஞானசேகரன்.
வாழ்த்துக்கள் உங்களுக்கும் மூவருக்கும்!!!! தொடர்ந்து எழுதுங்கள்!!
தமிழிஷில் சேர்ந்திட்டீங்களா..... !!! உங்களுக்கு இன்னும் பல வருகைகள் இருக்கும்!!!
நன்றிங்க ஆதவா.
எங்கே ஆளையே பார்க்கமுடியவில்லை?
வாழ்த்துகள் என் நன்பர் மச்சான் கார்த்திகிட்ட இருந்து வாங்கி இருக்கிங்க கண்டிப்பா அவரு சரியான ஆளுகிட்ட தான் கொடுத்துஇருக்காரு
வாழ்த்துகள் தொடர்ந்து பிரகாசியுங்கள் தோழா
வாழ்த்துகள் விருது கொடுத்தவருக்கும் அதை பெற்ற நல்ல பதிவர்களுக்கும்
வாழ்த்துகள்! சொல்லராசன்.
மற்றும் மூவருக்கும் என் வாழ்த்துகள்.
விருது பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..
//ஒருவேளை இதுவும் நம்ம அரசாங்கம் கொடுக்கும் விருது போன்று வேண்டபட்டவர்களுக்கு விவேகமாக கொடுக்கும் விருது போல,பதிவுலகில் பாசமிகு பாண்டியர் கொடுக்கிறார் என நினைத்து விருது பட்டயத்தை பசை போட்டு ஒட்டி விட்டேன் நமது தளத்தில்.சும்மா சொல்லகூடாது அதை ஒட்டியபிறகு புதிய புதிய நண்பர்கள் எல்லாம் வந்து வாழ்த்து சொன்னபோது சந்தோசமா இருந்துங்க.//
விவேகம்மா கொடுத்ததோ. வடிவேலுவா கொடுத்ததோ.. நண்பர் சந்தோஷப் பட்டீங்கள்ள.. அது போதும்..
விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...
Suresh said...
//வாழ்த்துகள் விருது கொடுத்தவருக்கும் அதை பெற்ற நல்ல பதிவர்களுக்கும்//
உங்க இனிப்பான வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
நன்றி சொல்லரசன். பட்டாம்பூச்சியை என் தோட்டத்தின் பக்கம் பறக்கவிட்டமைக்கு. ஆனால் இந்த பட்டாம்பூச்சி கொஞ்சம் பாவம். பல அற்புதமான பெரும் மலர்களிலெல்லாம் வாசம் செய்து என் குட்டிச்செடிகளில் சற்றே ஏமாறலாம்.ஆனாலும் கருத்துத்தேனை சிறிதேனும் அருந்தி இளைப்பாரட்டும்.
நன்றியுடன் உமா.
ஆ.முத்துராமலிங்கம் said...
//வாழ்த்துகள்! சொல்லராசன்.
மற்றும் மூவருக்கும் என் வாழ்த்துகள்.//
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
கார்த்திகைப் பாண்டியன்
//விவேகம்மா கொடுத்ததோ. வடிவேலுவா கொடுத்ததோ.. நண்பர் சந்தோஷப் பட்டீங்கள்ள.. அது போதும்..//
''விவேக''ம்மா கொடுத்த விருதில் பலருக்கு சந்தோசம் இல்லைங்கோ.
வேத்தியன் said...
//விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
உமா said...
// பல அற்புதமான பெரும் மலர்களிலெல்லாம் வாசம் செய்து என் குட்டிச்செடிகளில் சற்றே ஏமாறலாம்.ஆனாலும் கருத்துத்தேனை சிறிதேனும் அருந்தி இளைப்பாரட்டும்.//
உங்கள் கருத்துத்தேன் கண்டிப்பாக அந்த பட்டாம்பூச்சிக்கு பிடிக்கும்.
வணக்கம் சொல்லரசன்!
நண்பர் ஞானசேகரன் சொன்னதுபோல, நான் இன்னும் விருது வாங்குகிற நிலையை அடையவில்லை என்றே கருதுகிறேன். நீங்கள் சொல்வது போல் மிகுந்த பாசத்துடன் கொடுக்கும் இவ்விருதை பணிவோடும், மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்கிறேன்.
என்னுடைய உளறல்களும் உங்களைப் போன்ற பலரைக் கவர்ந்திருப்பது கண்டு மகிழ்கிறேன். விருது தந்த நண்பர் சொல்லரசன் அவர்களூக்கு நன்றிகள் பல! மேலும் என்னோடு சேர்ந்து விருதுபெற்ற சகோதரி "சில கவிதைகள்" உமா அவர்களுக்கும், நண்பர் ஞானசேகரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
வருகைக்கு நன்றிங்க உழவன்.
பசியாற்றும் உழவனை மறக்கலாமா?
congrats!!
வாழ்த்துக்கள்.
Sasirekha Ramachandran said...
congrats!!
முதல் வருகைக்கு நன்றிங்க
ராம்.CM said...
//வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு நன்றிங்க ராம்,
தேர்தல் டியூட்டி ஆரம்பித்துவிட்டதா? ஆளையே பார்க்கமுடியவில்லை.
vaalthukkal
Post a Comment