கேள்வி பதில் தொடர்பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் லோகுவின்
அன்புகட்டளை ஏற்று தொடர்கிறேன்
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஏழாவது படிக்கும் போது புதிதாக வந்த தமிழ் ஆசிரியர் யாருடா நல்ல கதை
சொல்வாங்கன்னு கேட்க, பசங்க எல்லாம் என்னை கைகாட்டி நல்ல கதைவுடுவான் அய்யா இவன்ன்னு சொல்ல,உன் பெயர் என்ன? என்றார் நான் பெயரை சொன்னவுடன் இததென்டா வாயில் நுழையாத பெயரா இருக்கு,சரி ராசா வந்து செய்யுளை சொல்ராசா என்றார்.செய்யுள் பாடம் நடத்தும் போது மாணவர்களை செய்யுள் சொல்ல சொல்லி விளக்கம் தருவது அவருடைய பழக்கமாம் நான் செய்யுளை ஏற்ற இறக்கதுடன் சொல்வதை கேட்டு செய்யுள்பாடம் நடத்தும்போது எல்லாம் என்னை "ராசா செய்யுளை சொல்ராசா" என்று கூப்பிடுவதை வைத்து சொல்ராசா என்று பட்ட பெயரிலே பள்ளி நண்பர்கள் அழைக்க ஆரம்பித்து சொல்ராசா,சொல்லரசு ஆகி பள்ளி இறுதியில் சொல்லரசன்ஆகிவிட்டது.பதிவு எழுதமுடிவு எடுத்தபோது இந்த பெயரிலே பிளாக் ஆரம்பித்து விட்டேன்.இந்த பெயர் என்றுதான் கேள்வியிருக்கிறது அதனால் இயற்பெயர் காரணத்தை சொல்லவில்லை.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நையான்டி நைனா பதிவ படிக்கும்போது......
உண்மைதானுங்கோ சிரிச்சா எனக்கு கண்ணீர் வரும்,
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான் சிரித்துகொண்டே அழுவேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பள்ளி நண்பர்கள் உன் கையெழுத்து நல்ல இருக்குடான் சொல்லி அவங்க ரெக்காட எழுதவைச்சுறுவானுங்க.இப்ப என் பெண் அப்பா உங்க கையெழுத்து நல்ல இருக்குன்னு சொல்லி அவ ஹோம்ஒர்க்க எழுதவைச்சிருரா அவங்களுக்கு பிடிப்பதால் எனக்கும் பிடிக்கும்
4.பிடித்த மதிய உணவு என்ன?
மீன்குழம்பு,மீன்வருவலுடன் சாப்பாடு,மட்டன் பிரியாணி சிக்கன் வருவல்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
முதல் சந்திப்பிலேயே ஒருவரை பற்றி அறிந்துகொள்வேன்
நல்லவராக தெரிந்தால் நட்பு தொடரும்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ஆற்றில்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்களை
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு பேசறது.
பிடிக்காத விஷயம்: வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு பேசறது.(சில பேர் மூஞ்சிக்கு நேரா இப்படி பேசுகிறான் என்று வருத்தபடும்போது)
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் சுட சுட தோசை ஊற்றி கொடுப்பது
பிடிக்காதது அட்சயதிததி மற்றும் ஆடிதள்ளுபடியின் போது நச்சரிப்பு.
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அம்மா அப்பா
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அடர் பச்சை நிற பேன்ட்,இளம் பச்சையில் வெள்ளை கோடு போட்ட சட்டை
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
10X11 ரூமுக்குள் உட்கார்ந்து என்னத்த பார்க்க முடியும் கணனிதிரையை
நான் ராகுல்காந்தி மாதிரி, ஒருசமயத்தில் ஒரு வேளைதான் செய்யமுடியும்
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வெளீர்நீல நிறம்
14.பிடித்த மணம்?
மல்லிகை வாசனை
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
அனைத்து விசயத்தையும் நையான்டியாக எழுதும் நையான்டி நைனா. அனைத்தையும் சாமானியன் அறிந்துகொள்ளவேண்டும் என ஆசைபடும் ஆ.ஞானசேகரன்.
குடந்தை அன்புமணி கதை,கவிதை, சமுதாய சிந்தனை என இவர் கலந்துகட்டியடிப்பது பிடிக்கும்
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அனைத்து விசய பதிவுகளும் ரசிக்கதக்கது
17. பிடித்த விளையாட்டு?
கபடி,கைப்பந்து,ஹாக்கி.
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை...
19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
முழு நீள நகைச்சுவை படங்கள்
20.கடைசியாகப் பார்த்த படம்?
முதல்வன் ,தியேட்டருக்கு போய் படம் பார்த்து பல ஆண்டுகள் ஆச்சு.
21.பிடித்த பருவ காலம் எது?
எல்லாகாலமும்
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
அர்த்தமுள்ள இந்து மதம் மூன்றாம் பாகம்
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மூன்றுமாதத்திற்கு ஒருமுறை
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்:மழலையின் சிரிப்பு
பிடிக்காத சத்தம்: அரசியல்வாதியின் சிரிப்பு
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அஹமத்நகர்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தேடவேண்டும்
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
முயற்சிக்காமல் முடியாது என்று சொல்வது
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தான் என்னிடத்தில் தங்க அனுமதியில்லை
29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
மூனாறு
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஆசையில்லா மனிதனாக
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
நண்பர்களுடன் த...........(என் மனைவியும் இதை படிப்பதால் தணிக்கைசெய்துவிட்டேன் புரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள்)
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
கடவுள் நமக்கு அளித்த அற்புதபயனம்,எளிமையாக்குவதும் கடினமாக்குவதும் நம்கையில்.
38 comments:
யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.
யாருடைய பின்னூடமும் தேவையில்லை.
படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்
“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)
வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!
உங்களினை நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது!
பெயர் வந்த விதம் அருமைங்க!
ம்ம்ம் கலக்கல்
வருகைக்கு நன்றிங்க கவின்
வருகைக்கு நன்றிங்க ஞானசேகரன், கேள்விக்கு பதில் எப்பொது?
தங்களின் பெயரின் விளக்கம்
நன்றாக இருக்கிறது
பின் வருகின்றேன்.
வருகைக்கு நன்றிங்க திகழ்மிளிர்
வா(வ)ரம் said...
//யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.
யாருடைய பின்னூடமும் தேவையில்லை.
படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்
“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)
வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!//
ஓட்டு தேவையில்லை,பின்னுட்டம் அவசியம் தேவை,
பிரம்மனையே சுயபரிசோதனையிடசெய்யும் விமர்சனம்(பின்னுட்டம்) தேவை
அழைப்பு நன்றிங்கோ.
அழைப்பை ஏற்றதற்கு நன்றி..
வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு சூப்பரா எழுதிட்டீங்க..
ஆஹா. கலக்கல்... சில இடங்களீல் உங்களோடு பேசியதை நினைவு கூர்ந்தேன். ஆரம்பத்தில் விவரமாக ஆரம்பித்து போகப்போக ஒற்றை சொல்லோடு பதிலை முடித்துக் கொண்டீர்களே...
அந்த முப்பத்தின் ஒண்ணாம் கேள்விக்கு "தண்ணீ" தான் பதில் என்பதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன்!!!
ஹி ஹி
இறுதி கேள்விக்கு இதைவிடவும் சிறப்பாகவும் எளீமையாகவும் யாரும் சொல்லிவிடமுடியாது!!
இறுதி கேள்விக்கு இதைவிடவும் சிறப்பாகவும் எளீமையாகவும் யாரும் சொல்லிவிடமுடியாது!!
வந்துட்டேன் சாமியோவ்....
உங்க பதில் எல்லாம் அசத்தல் ரகம்.
என்ன??? துரை கேள்விலாம் கேட்டு வச்சிருக்கு...
முயற்சி பண்றேன் ராசா...
அண்ணா.. நீங்களும் கேள்வி பதில் ஜோதில ஐக்கியம் ஆகிட்டீங்களா..நானே கூப்பிட்டு இருக்க வேண்டியது.. தப்பிச்சுட்டீங்க.. பதில்களை இன்னும் விரிவா சொல்லி இருக்கலாம்.. ஓகே ஓகே.. அடுத்தது நைனாவா? ஒழிஞ்சது உலகம்..
நல்ல பதில்கள் அண்ணா
வருகைக்கு நன்றிங்க
ஆ.முத்துராமலிங்கம்
நன்றிங்க லோகு
ஆதவா said...
ஆஹா. கலக்கல்... சில இடங்களீல் உங்களோடு பேசியதை நினைவு கூர்ந்தேன். ஆரம்பத்தில் விவரமாக ஆரம்பித்து போகப்போக ஒற்றை சொல்லோடு பதிலை முடித்துக் கொண்டீர்களே...
நம்ம லோகுதான் வெட்டுஒன்னு துண்டு இரண்டுன்னு எழுத சொன்னார்
அதனால்தான் ஆதவா.
உங்க பதில் எல்லாம் அசத்தல் ரகம்.
கருத்துக்கு நன்றிங்க நையான்டி.
கார்த்திகைப் பாண்டியன் said...
//அண்ணா.. நீங்களும் கேள்வி பதில் ஜோதில ஐக்கியம் ஆகிட்டீங்களா..நானே கூப்பிட்டு இருக்க வேண்டியது.. தப்பிச்சுட்டீங்க.. பதில்களை இன்னும் விரிவா சொல்லி இருக்கலாம்.. ஓகே ஓகே.. அடுத்தது நைனாவா? ஒழிஞ்சது உலகம்..//
கருத்துக்கு நன்றிங்க கா.பா.
ஏன் இந்த வெறி நையான்டி மேல்
உங்களைப் பற்றி சற்றுக் கூடுதலாக தெரிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. அத்தனை பதில்களூம் மிகவும் இயல்பாக உள்ளது. ஆனால் 20வது பதிலை படிச்சதுக்கு அப்புறம் அடுத்த கேள்விக்கு போவதற்குள்ள ரொம்ப நேரம் ஆச்சு.. அவ்வளவு ஷாக் குடுத்திட்டீங்க :-))
இந்த பதிவைத் தொடரப்போகும் மூன்று பேருமே நன்கு பரிச்சயமான நண்பர்கள்தான். படிப்பதற்கு ஆவலாக உள்ளது. வாழ்த்துக்களும்!!
அருமையான பதில்கள்.வாழ்த்துகள்.
என்னை அழைத்தமைக்கு நன்றி நண்பா! விரைவில் பதிவிடுகிறேன்.
தங்களைப் பற்றிய பெயர் விவரங்களை தெரிந்து கொண்டேன். இயற்பெயர் என்ன நண்பா?
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஏழாவது படிக்கும் போது புதிதாக வந்த தமிழ் ஆசிரியர் யாருடா நல்ல கதை
சொல்வாங்கன்னு கேட்க, பசங்க எல்லாம் என்னை கைகாட்டி நல்ல கதைவுடுவான் அய்யா இவன்ன்னு சொல்ல,உன் பெயர் என்ன? என்றார் நான் பெயரை சொன்னவுடன் இததென்டா வாயில் நுழையாத பெயரா இருக்கு,சரி ராசா வந்து செய்யுளை சொல்ராசா என்றார்.செய்யுள் பாடம் நடத்தும் போது மாணவர்களை செய்யுள் சொல்ல சொல்லி விளக்கம் தருவது அவருடைய பழக்கமாம் நான் செய்யுளை ஏற்ற இறக்கதுடன் சொல்வதை கேட்டு செய்யுள்பாடம் நடத்தும்போது எல்லாம் என்னை "ராசா செய்யுளை சொல்ராசா" என்று கூப்பிடுவதை வைத்து சொல்ராசா என்று பட்ட பெயரிலே பள்ளி நண்பர்கள்///
இந்தக்கதையே
நல்லாயிருக்கே!!
simply Super Brother..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க உழவன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ராம்
//தங்களைப் பற்றிய பெயர் விவரங்களை தெரிந்து கொண்டேன். இயற்பெயர் என்ன நண்பா?//
வாங்க குடந்தை அன்புமனி,நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்போது சொல்கிறேன்.
டாக்டர்,இது கதையல்ல நிஜம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க டக்ளஸ்
//18.கண்ணாடி அணிபவரா?
இல்லை//
தவறான விடை. அல்ல என்பதே சரி!
வாங்க பழமைபேசி முதமுதலா வந்திருகீங்க நன்றிங்கோ.
இல்லை என்பதே சரி என்று நினைக்கிறேன்.
நல்ல பதில்கள்....
அறிந்து கொண்டோம்...
போகிறவழியில் நம்மையும் கண்டு பின்னுட்டம் போட்டதற்கு பின்தொடர்வதற்கும் நன்றி
நண்பா,
புதிய இடுக்கைக்கு ஏன் தாமதம்?
nalla pathilkal.
Post a Comment