Thursday, July 23, 2009

அசல் டாக்டருக்கும்,போலி டாக்டருக்கும் நன்றி

கடந்த ஞாயிறு அன்று அசல் டாக்டர் தேவன் சார் அலைபேசியில் அழைத்து மக்கா உனக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெட்டியை திறந்து பார் என்றார்.
நான் அலுவலக வேலையாக சென்னையில் இருப்பதால் பார்க்கமுடியவில்லை என்னவென்று சொல்லுங்கள் என்றேன்.சுவாரசியமான பதிவர் விருது கொடுத்துள்ளேன் என்றார். "என்னகொடுமை சார்" எனக்கு போய்
இந்த விருந்து கொடுத்துயிருக்கிங்க என்று கேட்டால்,நீ எழுதவதற்கு யாரவது இந்த விருது கொடுப்பார்களா? நீ போட்ட பின்னுட்டத்தில் வீட்டில் பின்னிபெடல் எடுத்த‌தை பார்த்த எனது குழந்தைகள் சுவாரசியமா இருக்குதுஎன்று மகிழுந்ததால், இந்த விருது வேறஏதாவது பெருச நினைச்சுட்டு நானும் ரவடிதான்னு சொல்லிக்காதே என்றார்.எது எப்படியோ நமக்கும் விருது கொடுக்கவேண்டும் என்று அவருடைய பெருதன்மைக்கு நன்றி.

அப்புறம் நம்ம பின்னுட்டம் என்னுடைய கற்பனைமட்டுமே அந்தமாதிரி எந்த அனுபவமும் அவருக்கு இல்லை என்பதை உறுதியாக சகலமானவருக்கும் சொல்லி கொள்ளகடமை பட்டுள்ளேன்.
அடுத்த நாள் பெட்டி திறந்து பார்த்தால் இன்னொரு இன்ப அதிர்ச்சி தன்னை
டாக்டராக பாவித்துகொண்டு பதிவு எழுதும் போலி டாக்டர் சுசி பட்டாம்பூச்சி விருதுயை கொடுத்துஇருக்கிறார்,ஏற்கெனவே பட்டாம்பூச்சி விருது கொடுத்த‌
கா.பா பதிவுலக‌நண்பர் என்ற முறையில் கொடுத்துஇருந்தார்,ஆனால் சுசிஅவர்கள் இளமைகாலங்கள் பதிவின்முலம்தான் முதன்முதலாக எனக்கு அறிமுகம் இரண்டு பின்னுட்டம் மட்டும்தான் அவருக்கு போட்டுயிருக்கிறேன்.அவர் எனக்கு விருது கொடுத்தது உண்மையிலே மகிழ்ச்சியான விசயம் இவர் கொடுத்தவிருதால் நானும் ரவடிதான்னு, மும்பை,சூரத்வாழ்
எதிர்கவுஜசங்க‌ நண்பர்களுக்கு சொல்லிகொள்கிறேன்.

இனிமேல் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் இல்லை தொடர்ந்து வருவேன்.
பதிவுலக பெரியோர்களே,தாய்மார்களே உயிரின்னும்மேலான.........(இடைதேர்தல்தான் உப்புசப்பு இல்லாமல் ஆகிபோச்சு இங்கயாவது பேசிகவேண்டியதுதான்)ஆகவே விருது கொடுத்த‌
அசல் டாக்டர் தேவன் சாருக்கும் ,போலி டாக்டர் சுசிக்கும் நன்றி

27 comments:

சுந்தர் said...

வந்துட்டேன்

சுந்தர் said...

வாழ்த்துக்கள் , பார்ட்டி எப்போ ?

சொல்லரசன் said...

இதுக்கும்மா?நீங்க சரக்கு அடிப்பதாக இருந்தால் நானும் தயார்.

abi said...

’’அப்புறம் நம்ம பின்னுட்டம் என்னுடைய கற்பனைமட்டுமே அந்தமாதிரி எந்த அனுபவமும் அவருக்கு இல்லை என்பதை உறுதியாக சகலமானவருக்கும்
’’’

எந்த மாதிரி அனுபவம் ?/

Raju said...

\\மும்பை,சூரத்வாழ்
எதிர்கவுஜசங்க‌ நண்பர்களுக்கு சொல்லிகொள்கிறேன்.\\

அடிங்கொய்யால...!
யோவ். நைனா எங்கய்யா இருக்க...?

Raju said...

அப்பறம், திருப்பூர் வலை பதிவர் சங்கத்துல "பாராட்டு விழாவா...? இல்ல நீராட்டு விழாவா..?"...
வாழ்த்துக்கள் நண்பா..( விருது வாங்குனா இதச் "சொல்"லனுமாம்மே...!

சொல்லரசன் said...

abi said...
எந்த மாதிரி அனுபவம் ?/

அதை நீங்கள் காரைக்குடி டாக்டரிடம்தான் கேட்கவேண்டும்

சொல்லரசன் said...

டக்ளஸ்... said...

வாழ்த்துக்கள் நண்பா..( விருது வாங்குனா இதச் "சொல்"லனுமாம்மே...!

இஃகி இஃகி இஃகி.......எல்லாம் ஒரு விளம்பரம்தான்,அப்பதானே உங்க மாதிரி ஆளுங்க கிளப்பர வதந்தியில் இருந்து தப்பிக்கமுடியும்

நையாண்டி நைனா said...

நைனா ஆஜர்.
நண்பருக்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா said...

/*இனிமேல் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் இல்லை தொடர்ந்து வருவேன்.*/

ஹா...ஹ..ஹா....
விரிச்ச வலையிலே சிங்கம் விழுந்திருச்சே..... ஹா...ஹ..ஹா.... சிங்கம் விழுந்திருச்சே..... சிங்கம் விழுந்திருச்சே..... சிங்கம் மாட்டிகிச்சே.....

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துககள் தலைவரே..:-)))

Anbu said...

வாழ்த்துக்கள் அண்ணா..

நையாண்டி நைனா said...

நன்றி சுசி அவர்களே.
இப்படி தான் தேரை இழுத்து நடுத்தெருவிலே உடனும்.

உசுபேத்தி உசுபேத்தியே....

சொல்லரசன் said...

நைனா நீங்க நடுதெரு என்று எதை சொல்லறீங்க,பதிவுலகத்தையா?
பிரபல பதிவர்களே கவனிக்கவும் நைனாவின் நையான்டியை

சொல்லரசன் said...

நையான்டி சொன்னதை நோட்பண்னுங்க கா.பா.
வாழ்த்துக்கு நன்றி

சொல்லரசன் said...

வாழ்த்துக்கு நன்றி அன்பு

Raju said...

நானும் பார்த்துகுட்டே இருக்கேன் ரொம்ப ஓவராப் போறீங்க..!
நீங்க கவிதை எழுதாமய்யா போவீங்க..
அப்ப வச்சுக்குறோம் உங்கள, நைனா இவர மைன்ட்ல வச்சுக்கோங்க.

சொல்லரசன் said...

உங்க எதிர்கவுஜ‌ சங்கத்தை கண்டு பயந்து கவிதை பதிவு கம்மியாகிவிட்டதுன்னு வதந்தி உலவுகிறதே மெய்யாலுமா?

சுசி said...

வாழ்த்துக்கள் சொல்லரசன்.
உங்க பில்டப்புக்கு அப்புறம் என்னோட போலி டாக்டர் பதவியை ராஜினாமா செய்துடலாமான்னு லைட்டா யோசிச்சிட்டிருக்கேன்.

அத்துடன் விருது வழங்கியதற்கான காரணத்தை என் பதிவில் விள....க்கமாகக் கூறியும் நீங்கள் இப்படி ஒரு கருத்தில் என் விருதை ஏற்றுக் கொள்வதை நான் வன்மையாக, உண்மையாக, திடமாக, இன்னும் பல ஆகவும் ஆக (யாருப்பா அது ஒரு சோடா குடுங்க) கண்டிக்கின்றேன்.
அப்புறம் எனக்கு நன்றி சொன்ன நண்பர் (அரசியல்னா தோழர்னு வரணுமோ?) நையாண்டி நைனாவுக்கும் என்னோட நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன்.

அது என்னன்னு தெரிலீங்க. உங்க பதிவுக்கு வந்ததுமே தேர்தல் பீலிங் வந்துடுது.

ஆ.ஞானசேகரன் said...

//இனிமேல் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் இல்லை தொடர்ந்து வருவேன்.//

வாருங்கள் சொல்லரசன்

வாழ்த்துகள்

அகநாழிகை said...

வாழ்த்துக்கள் சொல்லரசன்.

“அகநாழிகை“ பொன்.வாசுதேவன்

குடந்தை அன்புமணி said...

//இனிமேல் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் இல்லை தொடர்ந்து வருவேன்.//

இதை... இதைத்தான் எதிர்பார்த்தோம்... வாங்க... நிறைய எழுதுங்க... பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுறோம். இல்லன்னா எதிர்இடுகை போடுறோம்.

சொல்லரசன் said...

//அது என்னன்னு தெரிலீங்க. உங்க பதிவுக்கு வந்ததுமே தேர்தல் பீலிங் வந்துடுது.//

நீங்களுமா?

//நையாண்டி நைனாவுக்கும் என்னோட நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன்.//

நல்ல வேளை நையான்டி உங்க பின்னுட்டத்தைபார்க்கவில்லை,
பார்த்துஇருந்தால் உங்க பதிவுக்கும் எதிர்பதிவு போட ஆரம்பிச்சிருவார்

சொல்லரசன் said...

நன்றிங்க ஞானசேகரன்,நன்றிங்க வாசு.

சொல்லரசன் said...

//இதை... இதைத்தான் எதிர்பார்த்தோம்... வாங்க... நிறைய எழுதுங்க... பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுறோம். இல்லன்னா எதிர்இடுகை போடுறோம்.//

நீங்களும் நையான்டி குரூப்ஸ்ல் சேர்த்துவிட்டீர்களா,நடத்துங்க நடத்துங்க‌

"உழவன்" "Uzhavan" said...

மகிழ்ச்சி நண்பா :-)

சொல்லரசன் said...

நன்றிங்க நண்பா