Monday, October 19, 2009

வீடு எப்ப‌டியோ நாடும் அப்ப‌டியே

கடவுள் இல்லை,கடவுள் இல்லை
கடவுள் என்பது மாயை
கடவுளை கும்பிடுபவன் முட்டாள்
தன்னம்பிக்கை இல்லாதவன்
நம்பிக்கையை கடவுள்
நற்திசை சென்று முழங்கிடுவார்
கடவுள்மறுப்பு நண்பர் ஒருவர்

வேதங்கள் பொய்
ஓதும்மந்திரங்கள் பொய்
சாஸ்திரம் வேண்டாம்
சம்பிரதாயமும் வேண்டாம்
இழிவானது இதிகாசங்கள் ‍
புத்தியில்லாதவரின் புனைவே வேதநூல்
வாதிடுவார் தெருவெங்கும்

தீபதிருநாளன்று
வீட்டிற்கு வந்தவரை
சாப்பிட‌ அழைத்தோம்
பெருமாளை சேவித்து
புர‌ட்டாசி விர‌த‌ம்
புலாலுண‌வு வேண்டாம் ம‌றுத்திட்டார்
க‌ட‌வுள் ம‌றுப்பு அன்பு ம‌ணைவி

க‌டைதெருவில் க‌ண்டு
வேள்விக‌ணை தொடுத்தேன்
க‌ட‌வுள்ம‌றுப்பு ந‌ண்ப‌ரிட‌ம்
க‌ண‌பொழுதில் ப‌திலுரைத்தார்
த‌னிம‌னித‌ சுக‌ந்திர‌த்தை போற்றுப‌வ‌ன்
வீட்டில்வுள்ளோர் விருப்ப‌த்தை த‌டுப்ப‌தில்லை.

இன்று இவ‌ர் சொல்லிய‌து கேட்டு
நினைவுக்கு வ‌ந்த‌து
அன்று அண்ணா சொன்ன‌து
வீடு எப்ப‌டியோ நாடும் அப்ப‌டியே(பி,கு இது என்னுடைய நெருங்கிய நண்பரிடம் நான் கேட்ட கேள்வியின் வெளிபாடு பதிவுலக கடவுள்மறுப்பாளர்களை பற்றியல்ல.)

29 comments:

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் சொல்லரசன்,, ... நீண்ட இடைவெளிக்கு பின் சந்திப்பதில் மகிழ்ச்சி!

ஆ.ஞானசேகரன் said...

//த‌னிம‌னித‌ சுக‌ந்திர‌த்தை போற்றுப‌வ‌ன்
வீட்டில்வுள்ளோர் விருப்ப‌த்தை த‌டுப்ப‌தில்லை.//

தடுக்கவும் முடிவதில்லை..

அகநாழிகை said...

நல்லாயிருக்குங்க சொல்லரசன்.

- பொன்.வாசுதேவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணே.. இதுல ஏதும் அரசியல் இருக்காண்ணே?

சுசி said...

நல்லாருக்கு. நல்ல கொள்கை உங்க நண்பருக்கு.

velji said...

not just socially,politically good!

cheena (சீனா) said...

நல்ல சிந்தனை அன்பின் சொல்லரசன்

உண்மையான யதார்த்த நிலை இதுதான் நண்பா

நல்வாழ்த்துகள்

சொல்லரசன் said...

ஆ.ஞானசேகரன் said...
//த‌னிம‌னித‌ சுக‌ந்திர‌த்தை போற்றுப‌வ‌ன்
வீட்டில்வுள்ளோர் விருப்ப‌த்தை த‌டுப்ப‌தில்லை.//

தடுக்கவும் முடிவதில்லை..//

வீட்டில் உள்ளவர்களை தடுக்க முடியாதவர்கள்,நாட்டில் உள்ளவர்களை திருத்தமுடியுமா
என்பது எனது கேள்வி

சொல்லரசன் said...

அகநாழிகை said...
நல்லாயிருக்குங்க சொல்லரசன்.

- பொன்.வாசுதேவன்


நன்றிங்க வாசு

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
//அண்ணே.. இதுல ஏதும் அரசியல் இருக்காண்ணே?//

எதை எழுதினாலும் அரசியல் முத்திரை குத்தனா எப்படி?

சொல்லரசன் said...

சுசி said...
நல்லாருக்கு. நல்ல கொள்கை உங்க நண்பருக்கு.


அந்த கொள்கையை வெளியிருப்பவரிடம் பின்பற்ற வேண்டும் என்பது எனது கருத்து

சொல்லரசன் said...

velji said...
not just socially,politically good!

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சொல்லரசன் said...

cheena (சீனா) said...
//நல்ல சிந்தனை அன்பின் சொல்லரசன்

உண்மையான யதார்த்த நிலை இதுதான் நண்பா

நல்வாழ்த்துகள்//

வருகைக்கு நன்றிங்க, மக்கள் புரிந்துகொண்டால் சரி

உமா said...

//வீடு எப்ப‌டியோ நாடும் அப்ப‌டியே//

உண்மைதான், வீட்டிலுள்ளவரிடம் பல விடயங்களில் சகித்துக்கொள்ளுதல் போல் நாட்டிலும் பிறரிடத்திலும் மாற்றுக்கருத்துக்கு மதிப்பளிக்கவேண்டும்.

கடவுள் கொள்கை மட்டுமல்ல. தமிழுணர்வு, கையூட்டு கொடுத்தல் / பெறுதல், நேர்மையாயிருத்தல் இது போன்ற பல விடயங்களில் மற்றவரு்காக முழங்குவது ஒன்று, தான் நடைமுறையில் கையாள்வது ஒன்று என்பதே பலரின் நிலை.

நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்

சொல்லரசன் said...

உமா said...
//வீடு எப்ப‌டியோ நாடும் அப்ப‌டியே//

உண்மைதான், வீட்டிலுள்ளவரிடம் பல விடயங்களில் சகித்துக்கொள்ளுதல் போல் நாட்டிலும் பிறரிடத்திலும் மாற்றுக்கருத்துக்கு மதிப்பளிக்கவேண்டும்.

கண்டிப்பாக சிலர் வீட்டில் நடக்கும் தவறுகளை கண்டுகொள்வதில்லை.அதே தவறு வெளியில் நடப்பதையை கண்டு ஆவேசபடுவது ஏன் என்று புரியவில்லை.கருத்துக்கு நன்றிங்க உமா.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//(பி,கு இது என்னுடைய நெருங்கிய நண்பரிடம் நான் கேட்ட கேள்வியின் வெளிபாடு பதிவுலக கடவுள்மறுப்பாளர்களை பற்றியல்ல.)//

நம்ப முடியலயே ,கார்த்தி மாதிரி எனக்கும் சந்தேகம் வருது.

சொல்லரசன் said...

நம்பிதான் ஆகவேண்டும், வம்பை விலை கொடுத்து வாங்ககூடாது என்பதற்குதான்அந்த பி.கு அதுவும் முக்கியமாக உங்க இரண்டுபேருக்காக.....,

வால்பையன் said...

நல்லா குத்துறிங்க தல!

சொல்லரசன் said...

//வால்பையன் said...
நல்லா குத்துறிங்க தல!//

இந்த குத்து உங்களுக்கு இல்லை வால்.

"உழவன்" "Uzhavan" said...

அப்ப வீடு வளர்ந்தால் நாடும் வளரும்!!

சொல்லரசன் said...

" உழவன் " " Uzhavan " said...
அப்ப வீடு வளர்ந்தால் நாடும் வளரும்!!//

அப்ப‌டியேதான்

Jerry Eshananda said...

அண்ணா நூற்றாண்டில் நல்ல நினைவு. நண்பரே.

ஹேமா said...

சொல்லரசன்,நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காணவில்லையே.
இன்றைய யதார்த்தம் தந்திருக்கிறீர்கள்.அருமை.கேள்விக்கும்சரி பதிலுக்கும் சரி சிக்கலான விஷயம்.

சொல்லரசன் said...

//ஜெரி ஈசானந்தா. said...
அண்ணா நூற்றாண்டில் நல்ல நினைவு. நண்பரே.//

கருத்துக்கு நன்றிங்க‌

சொல்லரசன் said...

ஹேமா said...
சொல்லரசன்,நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காணவில்லையே.
இன்றைய யதார்த்தம் தந்திருக்கிறீர்கள்.அருமை.கேள்விக்கும்சரி பதிலுக்கும் சரி சிக்கலான விஷயம்.

வாங்க ஹேமா,வேலை பளு காரணமாகதான் வரமுடியவில்லை,கருத்துக்கு நன்றிங்க‌

Anbu said...

நல்லா இருக்கு அண்ணே..

Unknown said...

நன்றிங்க அன்பு

பாலகுமார் said...

உண்மை தான்....

நல்லா இருக்கு !

Unknown said...

ஒருவேளை குத்து எனக்கானதா?
:-)