Tuesday, February 10, 2009

கலாச்சார சீரழிவு

கடந்த வாரம் செய்திதாளில் படித்தது.
காதலர் தினத்தில் சந்திக்கும் காதலர்களை பதிவு அலுவலத்திற்கு அழைத்துசென்று திருமணம் செய்து வைப்போம் என ஒரு அமைப்புமிரட்டியுள்ளது. இது அத்துமிறிய செயல் எனவும்.இல்லை இல்லை இது சரியானதுதான் நம் கலாச்சாரத்திற்கு என்று வாதம் நடைபெற்றுகொண்டு இருக்கையில்,கடந்த இரு நாட்களுக்கு முன்செய்திதாளில் ஒரு அமைப்பை சேர்ந்த பெண் பேட்டி கொடுக்கிறார் எனனவென்று, ஒரின சேர்கையாளர் அனைவரும் இன்றுபுதிதாகஅமைப்புஉருவாககியுள்ளோம்.ஒரின சேர்க்கையாளர் பலர் இங்குயுள்ளனர்,திருமணமாகி குழந்தை பெற்றவர்களும்,கல்லுரி மாணவிகளும் இதில் அடக்கம்,எங்கள் இன்னல்கள் ..........(அந்த கண்றாவி நமக்கு எதற்கு) எனவே எங்களுக்கு சட்டபுர்வமான அங்கீகாரம் வேண்டும்,என அரசிடம் கோரிககை வைக்கிறோம்.

இது ஏதோ மேலைநாடுகளில் எடுக்கபட்ட பேட்டி என நினைத்துவிடதீர்கள் சாட்சாத் நம் சென்னையில் கடந்த வாரம் ஒரின சேர்கையாளர்கள் சங்கம் ஆரம்பித்து (நாட்டில் இதற்கெல்லாம் சங்கமா) செய்திதாள்களுக்கு கொடுக்கபட்டபேட்டி. இதை எல்லாம் பார்க்கும் போது ரசே..அமைப்பினர் செயல் ஒன்றும் தவறாக தெரியவில்லை. மனதை பரிமாறிகொள்ளும் காதலையே எதிர்க்கும் நம் நாட்டில் காமத்தை மட்டுமே பரிமாறிகொள்ளும் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம், அங்கீகாரம் கேட்கும் அளவுக்கு.
மேலை நாட்டில்யுள்ள நல்ல விசயங்களை தவிர்த்துவிட்டு.
அவர்களே அருவருக்கும் இதை பின்பற்றுவது நாட்டின் கலாச்சார சீரழிவு ஆகும்.

நட்பின் புனிதத்தைக் களங்படுத்தி சந்தேகபடவைக்கும் இழிசெயலை வேரிலே அழிப்போம். நல்லாசிரியர் விருது பெரும் செய்தியை நாலுவ்ரியில் போடும் பத்திரிக்கை அன்பர்களே,இந்த கலாச்சார சீரழிவாளர்களுக்கு கால் பக்கம் ஒதுக்கவது ஏன்? ஜனநாயகத்தின் நான்காவ்து துண் என்று சென்னால் மட்டும் போதுமா, ஜனநாயக நாட்டின் கலாச்சாரம் பற்றி கவலை இல்லையா? இனி மேலாவது இந்த இழிசெயலை இருட்டிப்பு செய்யுஙகள்.வீட்டின் கலாச்சாரமே,நாட்டின் கலாச்சாரம் எனவே இநத காம இழிவாளர்களை புறம்தள்ளுங்கள். நம் பிள்ளைகளின் நட்பை சந்தேகபடமால் நிம்மதியாக பார்க்கலாம்.உலக கலாச்சாரத்தில் இந்தியாவிற்கு இருக்கும் பெயரையும்,மரியாதையும் காப்போம்.

15 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

//நல்லாசிரியர் விருது பெரும் செய்தியை நாலுவ்ரியில் போடும் பத்திரிக்கை அன்பர்களே,இந்த கலாச்சார சீரழிவாளர்களுக்கு கால் பக்கம் ஒதுக்கவது ஏன்? ஜனநாயகத்தின் நான்காவ்து துண் என்று சென்னால் மட்டும் போதுமா, ஜனநாயக நாட்டின் கலாச்சாரம் பற்றி கவலை இல்லையா? //
இவங்க எல்லாம் சொன்னாலும் திருந்த மாட்டாங்க நண்பா.. சமூக அக்கறையுடன் எழுதி உள்ளீர்கள்.. உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.. அவரவருக்கான துணையை அவர்கள் தேர்ந்து எடுக்கும் உரிமை உண்டு.. ஆனால் இதற்காக சங்கம் என்பதெல்லாம் ஓவர்.. நல்ல பதிவு..

Anonymous said...

\\நல்லாசிரியர் விருது பெரும் செய்தியை நாலுவ்ரியில் போடும் பத்திரிக்கை அன்பர்களே,இந்த கலாச்சார சீரழிவாளர்களுக்கு கால் பக்கம் ஒதுக்கவது ஏன்? \\
இதை ஒத்துகிரன்

Anonymous said...

சங்கம் அமைகிறது அவங்க இஸ்டம் அமைச்சிருச்சு போயிடட்டுமே... ஏதோ அவங்களாலை முடிஞ்சதை செய்றாங்க?????ஜனானாயக நட்டிலை எல்லாதுக்கும் உரிமை உண்டு தானே அண்ணா???

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

//இவங்க எல்லாம் சொன்னாலும் திருந்த மாட்டாங்க நண்பா.. சமூக அக்கறையுடன் எழுதி உள்ளீர்கள்.. உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.. அவரவருக்கான துணையை அவர்கள் தேர்ந்து எடுக்கும் உரிமை உண்டு.. ஆனால் இதற்காக சங்கம் என்பதெல்லாம் ஓவர்.. நல்ல பதிவு..//

கருத்துக்கு நனறிங்க,
அவரவருக்கான துணை,சமுதாயத்தை களங்கபடுத்தும் விணையாக இருக்ககூடாது

சொல்லரசன் said...

கவின் said...

//சங்கம் அமைகிறது அவங்க இஸ்டம் அமைச்சிருச்சு போயிடட்டுமே... ஏதோ அவங்களாலை முடிஞ்சதை செய்றாங்க?????ஜனானாயக நட்டிலை எல்லாதுக்கும் உரிமை உண்டு தானே அண்ணா???//

வருகைக்கும் கருத்துக்கு நனறிங்க,
இப்படி உரிமை உண்டு என எல்லோரும் சங்கம் வைத்துதான் நாடு நாசமாகிகொண்டுயுள்ளது

ராம்.CM said...

நானும் அந்த செய்தியைப் படித்தேன் சொல்லரசன்!மனதிற்கு வருத்தமாக இருந்தது. இந்தியாவின் நிலை இப்படியா? என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் தாங்கள் பதிவாக போட்டுவிட்டீர்கள்!... நல்லாயிருந்தது... வாழ்த்துக்கள்!...

சொல்லரசன் said...

ராம்.CM said...

//நானும் அந்த செய்தியைப் படித்தேன் சொல்லரசன்!மனதிற்கு வருத்தமாக இருந்தது. இந்தியாவின் நிலை இப்படியா? என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் தாங்கள் பதிவாக போட்டுவிட்டீர்கள்!... நல்லாயிருந்தது... வாழ்த்துக்கள்!...//

நன்றிங்க ராம்

மழைக்காதலன் said...

அய்யா, உங்கள் கருத்தோடு உடன்பட முடியாது... இதைக் கலாச்சார சீரழிவாக பார்க்காமல், கலாச்சாரம் மேலும் வளர்கிறது என்ற பார்வையில் பாருங்களேன்... அவரவர் துணையை அவரவர் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.. இதை ஒரு காமத்திலான பார்வையோடு பார்க்காமல், தங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு துணைத்தேடல் என்று பாருங்களேன்....

சொல்லரசன் said...

மழைக்காதலன் said...
//இதை ஒரு காமத்திலான பார்வையோடு பார்க்காமல், தங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு துணைத்தேடல்என்று பாருங்களேன்....//

துணைத்தேடல் நடபாக இருக்கலாமே,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

ஆதவா said...

சொல்லரசன்... இதுகுறித்து பின் வந்த கார்த்திகைப் பாண்டியனது பதிவில் என் பின்னூட்டம் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

காமம் என்பது தனிநபர் விஷயம், ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் விருப்பத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அது அவரது உரிமை. இதில் தலையிடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது.

பெங்களூரில், ஓரினச் சேர்க்கையாளர் சங்கம் ஏற்கனவே உண்டு....

சொல்லரசன் said...

ஆதவா said...

//சொல்லரசன்... இதுகுறித்து பின் வந்த கார்த்திகைப் பாண்டியனது பதிவில் என் பின்னூட்டம் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..

காமம் என்பது தனிநபர் விஷயம், ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் விருப்பத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அது அவரது உரிமை. இதில் தலையிடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது.//

இதை பற்றி விரிவான பதிவை விரைவில் பதிவு செய்கிறேன்
முதல் வருகைக்கு நன்றி.

கார்க்கிபவா said...

என்ன சொல்றதுன்னு தெரியல..

சொல்லரசன் said...

வருகைக்கு நன்றிங்க

மேலும் இது பற்றிய கருத்து மோதல்களை காண
http://feedproxy.google.com/~r/maathavaraj/~3/tBA_vY1mjo8/blog-post_12.htmlபார்க்கவும்

உமா said...

வக்கிரமான விஷயங்களுக்குத்தான் இப்போதெல்லாம் வறவேற்பு அதிகம்.குத்து கொலை கற்பழிப்பு,கள்ளக்காதல் மற்றும் இது போன்ற சகிக்க முடியாத விஷயங்களுக்குத்தான் செய்தி தாளில் முக்கியத்துவம். வெட்கக்கேடு.

சொல்லரசன் said...

உமா said...
// வக்கிரமான விஷயங்களுக்குத்தான் இப்போதெல்லாம் வறவேற்பு அதிகம்.குத்து கொலை கற்பழிப்பு,கள்ளக்காதல் மற்றும் இது போன்ற சகிக்க முடியாத விஷயங்களுக்குத்தான் செய்தி தாளில் முக்கியத்துவம். வெட்கக்கேடு.//

கருத்துக்கும் வருகைக்கு நன்றிங்க.