Wednesday, March 11, 2009

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கல்விதகுதி‍ ஏதும் தேவையில்லை

உயரம் மைக் எட்டும் உயரம்

எடை நாற்காலி தூக்கும் அளவிற்கு

நன்னடத்தை சிறை சென்றவர்க்குமுன்னுரிமை

பிறதகுதிகள்

1)பல வழக்குகளை சந்தித்து அனுபவமபெற்றுயிருக்கவேண்டும்

2)சுமார் ஜந்து கோடி செலவு செய்யும்நபர்

(இதை பத்து அல்லது நுறு மடங்காக எடுப்பது உங்கள் திற்மையை பொருத்தது)

சம்பளம்

அடிப்படை சம்பளம் - 12,000/ மாதம்

பஞ்சபடி - 10,000/மாதம்

அலுவலகபடி - 14,000/மாதம்

பயனபடி - 48,000/மாதம்

பிற சலுகைகள்

இந்தியா முழுவதும் இலவச இரயில் பயனம்,

40 விமான பயனங்கள்/ஆண்டுக்கு

50,000 யுனிட்டு இலவச‌மின்சாரம்

1,70,000 இலவச தொலைபேசிஅழைப்புகள்

விண்ணப்பம் பெறும் தேதி ,நேர்முக தேர்வு ஜந்து கட்டமாக நடைபெறும்(அனைத்து செய்திதாள்களையும் பார்க்க‌)

விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்

உடன் பிறப்பு கோச்சிங் சென்டர்

உடன் பிறவா கோச்சிங் சென்டர்

தாமர கோச்சிங் சென்டர்

பேரியக்க‌ கோச்சிங் சென்டர்

பசுமை கோச்சிங் சென்டர்

தோழர்கள் கோச்சிங் சென்டர்

மறுமறந்த‌ கோச்சிங் சென்டர்

மனைவி,மைத்துனர் கோச்சிங் சென்டர்

இவர்கள் பரிந்துரைக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டும்தேர்வு எமுத அனுமதியளிக்கபடுவார்கள்

அனைத்து லெட்டர் பேடு கோச்சிங் சென்டர்

சுயம் கோச்சிங் சென்டர்

இங்கிருந்து வரும் விண்ணப்பங்கள் முடிந்தயளவு நிராகரிக்கபடும்

முக்கியமானத மறந்துட்டனங்க அதானுங்க‌

வே லையின் பெயர் மக்கள் பிரதநிதி

காலியிடங்கள் 536

வந்தவர் எல்லாம் வென்றததும் இல்லை

வென்றவர் எல்லாம் வந்ததும் இல்லை

20 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

தலைவா.. பிச்சு உதறிட்டீங்க.. தடாலடி பதிவு.. நெறைய விஷயங்கள் சேகரிச்சு எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

சொல்லரசன் said...

நன்றிங்க நண்பா இது தடாலடி அல்ல உடாலடி

ஆதவா said...

அடிதடி, தடாலடி...

எந்த ஒரு விஷயமும் சொல்லவேண்டிய சூதானத்தில் நாசூக்காகச் சொன்னால் புரிந்துவிடும் என்பார்கள்.

பட்டையக் கிளப்பிட்டீங்க சொல்லரசன்.

Unknown said...

நன்றிங்க ஆதவா.
//எந்த ஒரு விஷயமும் சொல்லவேண்டிய சூதானத்தில் நாசூக்காகச் சொன்னால் புரிந்துவிடும் என்பார்கள்.//
இதில் ஏதும் உள்குத்து இல்லையே!

உமா said...

அதிரடியா சொல்லியிருக்கீங்க. interesting ஆக இருக்கு.வாழ்த்துக்கள்.

சொல்லரசன் said...

உமா said...
நன்றிங்க,
எல்லாம் உங்கள் கவிதையை பார்த்து வந்த அதிரடிதான்

ராம்.CM said...

தலைவா.. பிச்சு உதறிட்டீங்க.. தடாலடி பதிவு.. நெறைய விஷயங்கள் சேகரிச்சு எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

அப்படியே.. ரிப்பீட்ட்டுடு..... நல்லாயிருந்தது சொல்லரசன்.

சொல்லரசன் said...

நன்றிங்க ராம்.அடிக்கடி வாங்க‌

கோவி.கண்ணன் said...

சூப்பரு !
:)

சொல்லரசன் said...

முதல் வருகைக்கு நன்றிங்க கோவி.கண்ணன்

நையாண்டி நைனா said...

சூப்பருங்கண்ணா....

சொல்லரசன் said...

வருகைக்கு நன்றிங்க நைனா

அகரம் அமுதா said...

ஃகா... ஃகா... ஃகா...

சாந்தி நேசக்கரம் said...

விண்ணப்ப முடிவுத்திகதி காலாவதியாகிவிட்டது.

சாந்தி

சொல்லரசன் said...

அகரம்.அமுதா said...
ஃகா... ஃகா... ஃகா...

சிரிப்பு கூட தமிழ் தான்.
நன்றிங்க நண்பரே.

சொல்லரசன் said...

நன்றிங்க சகோதரி சாநதி,
இன்னும் விண்ணப்பம் கொடுத்து முடிக்கவில்லை.

Anonymous said...

ஹா! ஹா! நிஜமாவே விண்ணப்பங்கள் இப்படித்தான் இருக்கும்போல :)

கலக்கிட்டீங்க நண்பா!

ஆ.ஞானசேகரன் said...

அடேய்யப்பாஆ..... இதுதான் காலதிற்கேற்ற பதிவா? சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்

என்னங்க சொல்லரசன் நீங்க விண்ணப்பம் அனுப்பியாச்சா?

சொல்லரசன் said...

ஷீ-நிசி said...

// ஹா! ஹா! நிஜமாவே விண்ணப்பங்கள் இப்படித்தான் இருக்கும்போல :)

கலக்கிட்டீங்க நண்பா!//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நண்பரே.

சொல்லரசன் said...

ஆ.ஞானசேகரன் said...

//என்னங்க சொல்லரசன் நீங்க விண்ணப்பம் அனுப்பியாச்சா?//

பிரச்சனையின்னா பேசி தீர்த்துகலாம்,அதுக்காக இப்படியா?