Sunday, May 17, 2009

எரியிற கொள்ளியில்...........தேர்தல் முடிவு.

நடந்து முடிந்த தேர்தலின்முடிவு பெரும்பாலன வலைபதிவர்களுக்கு அதிர்ச்சியாக‌இருக்கும்,ஏனெனில் ஈழபிரச்சனையை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தல் போல்ஒரு தோற்றத்தை உருவாக்கி,அதில்பெரிய‌பாதிப்பு இல்லாதால் சற்று அதிர்ச்சிதான்.ஈழபிரச்சனை மக்களிடையே எந்தமாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை என்பது எனதுகருத்து.ஈழ விரோதி கலைஞர்க்கு எதிராக வாக்களிக்க சொன்னவர்கள் எதிர்முகாமில் இருந்தவர்கள் ஈழஆதரவாளர்கள் என மக்கள்ஏற்று கொண்டர்களா என்று அறிந்துகொள்ளவில்லை. அம்மையாரின் திடீர் ஈழத்து ஆதரவு, அரசியல்வேசியின் லாப நட்ட ஈழ ஆதரவுகணக்கு,பொதுவுடமை தோழரின்கொள்கையில்லாகூட்டு,இவையனைத்தும் மக்களை சிந்திக்கவைத்து,ஈழத்து பிரச்சனையில் அரசியல்வாதிகள் ஒன்றுமே செய்யமுடியாது, இது தேர்தல் நேரபாசமே என்பதைபுரிந்துகொண்டார்கள்.

இனி இவர்கள் அடுத்த தேர்தலுக்குதான் ஈழஆதரவு துருப்புசீட்டாக‌ கையில்எடுப்பார்கள், அதற்குள் எல்லாம் முடிந்துவிடும் அங்கே என்பதைமக்கள் அறிந்து கொண்டார்கள்.

தமிழக அரசியல்வாதிகளை புறம்தள்ளிவிட்டு சர்வேதேச அளவில் எடுத்து செல்ல என்னவழி என்று ஒவ்வொரு தமிழனும் வழிமுறை கானவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள நாம் இனியும் இந்த அரசியல்வாதிகளை நம்பாமால் ஈழ ஆதரவு கோரிக்கையை சர்வேதேச சமூகத்திற்கு தெரியபடுத்தவேண்டும்.

கொங்குமண்டலத்தில் ஈழ ஆதரவால் தி.மு.க கூட்டனிக்கு தோல்வி என்பதும்,சீமான், பாரதிராஜவின் பிரச்சாரமே தி.மு.க,காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று கூறினாலும், என்னைபொருத்தளவில்அறிவாலயத்தால் தொடர்ந்து புறக்கனிக்கப்படும் கொங்குமண்டல எழுச்சியே காரணம், கொங்குநாட்டு உடன்பிறப்புகளின் களபணிகளால் கொங்குமுன்னேற்ற‌பேரவையின் வாக்குகளை பார்த்தால்புரியும் உங்களுக்கு.

ஈரோடு
கனேசமுர்த்தி(மதிமுக) 284148
இளங்கோவன்(காங்) 234812
பாலசுப்பிரமணியம்(கொ.மு.பே) 106604

திருப்பூர்
சிவசாமி (அதிமுக) 295731
கார்வேந்தன் (காங்) 210385
பாலசுப்பிரமணியம்(கொ.மு.பே) 95299

கோவை
நடராஜன் (கம்யூ) 293165
பிரபு (காங்) 254501
ஈஸ்வரன் (கொ.மு.பே) 128070

பொள்ளாச்சி
சுகுமார் (அ.தி.மு.க) 305826
சன்முகசுந்தரம்(தி.மு.க) 258047
பெஸ்ட் ராமசாமி(கொ.மு.பே) 102834

நான்கு தொகுதிகளிலும் 4,32,807 வாக்குகள் கட்சிஆரம்பித்து முன்று மாதத்தில்வாங்கியிருப்பதில்,உடன்பிறப்புகளின் பங்கும் இதில் உண்டு.அறிவாலயத்தில் உடன்பிறப்புகளின் மேலுள்ள‌ பாராமுகம்,நிதியமைச்சர்ராக இருந்தபோது சிதம்பரத்தின் கொங்குமண்டல தொழில்சலுகை புறக்கணிப்பு,இதுவேகொ.மு.பே
எழுச்சியாக தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்தது. தி.மு.ககூட்டனி தோல்விக்கு இதுவே காரணம்.இனிமேலும் புறக்கணிப்பு தொடர்ந்தால் சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் அவர்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்.எனவே கொங்குமண்டலத்திலும் ஈழஆதரவு பிரச்சாரம்வெற்றி என்பதையும் ஏற்றுகொள்ள‌இயலவில்லை. மொத்ததில் எரியிற கொள்ளியில் எந்தகொள்ளி நல்லகொள்ளி கதையாகதான் இந்த தேர்தல் முடிவு.


23 comments:

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் சொல்லரசன்,

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..
//.ஈழபிரச்சனை மக்களிடையே எந்தமாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை என்பது எனதுகருத்து.//
கருத்து மட்டும் இல்லை சொல்லரசன் உண்மையும் கூட, தமிழ்நாட்டில் ஈழதமிழர்களுக்காக வருத்தப்படுகின்றார்கள் என்பது உண்மையானாலும் அதற்காக தமிழ்நாட்டில் அமைதியை கெடுக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை...
//மொத்ததில் எரியிற கொள்ளியில் எந்தகொள்ளி நல்லகொள்ளி கதையாகதான் இந்த தேர்தல் முடிவு.//
ஆமாம் ஆமாம்.. அதைவிட மதசார்பின்மையும் கலவரமில்லா நிலையும் மக்கள் எதிர்பார்க்கின்றது புரிகின்றது.

லோகு said...

//நான்கு தொகுதிகளிலும் 4,32,807 வாக்குகள் கட்சிஆரம்பித்து முன்று மாதத்தில்வாங்கியிருப்பதில்,உடன்பிறப்புகளின் பங்கும் இதில் உண்டு.அறிவாலயத்தில் உடன்பிறப்புகளின் மேலுள்ள‌ பாராமுகம்,நிதியமைச்சர்ராக இருந்தபோது சிதம்பரத்தின் கொங்குமண்டல தொழில்சலுகை புறக்கணிப்பு,இதுவேகொ.மு.பே
எழுச்சியாக தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்தது. தி.மு.ககூட்டனி தோல்விக்கு இதுவே காரணம்.///


உண்மை..

குடந்தைஅன்புமணி said...

தங்கள் கருத்தும், ஞானசேகரன் அவர்களின் கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான். மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்பதையே இந்த தேர்தல் காட்டுகிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

தமிழ் மக்கள் ஈழ மக்களுக்காக கவலைப்படுவது உண்மைதான் என்றாலும் தேர்தலை முன்னிட்டு அதை எதிர்க்கட்சிகள் அரசியல் வியாபாரம் ஆக்கியதைத்தான் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள்.. சர்வதேச சமூகமும் ஒன்றும் செய்ய இயலாமல் கையைக் கட்டிக்கொண்டு தான் இருக்கிறது.. நம் கண்முன்னே நம் உறவுகள் அழிவதை நாம் வேதனையோடு வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும்..

சொல்லரசன் said...

ஆ.ஞானசேகரன் said...
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
எனக்கும்தான்

ஆமாம் ஆமாம்.. அதைவிட மதசார்பின்மையும் கலவரமில்லா நிலையும் மக்கள் எதிர்பார்க்கின்றது புரிகின்றது.உங்கள் கருத்தும் வரவேற்கதக்கது

பயணம் இனிதாக இருந்தற்கு வாழ்த்துகள்

சொல்லரசன் said...

வருகைக்கு நன்றிங்க‌ லோகு

சொல்லரசன் said...

குடந்தைஅன்புமணி said

மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்பதையே இந்த தேர்தல் காட்டுகிறது.
உண்மைதான் நண்பரே.

" உழவன் " " Uzhavan " said...

//ஈழ விரோதி கலைஞர்க்கு எதிராக வாக்களிக்க சொன்னவர்கள் எதிர்முகாமில் இருந்தவர்கள் ஈழஆதரவாளர்கள் என மக்கள்ஏற்று கொண்டர்களா என்று அறிந்துகொள்ளவில்லை. அம்மையாரின் திடீர் ஈழத்து ஆதரவு, அரசியல்வேசியின் லாப நட்ட ஈழ ஆதரவுகணக்கு,பொதுவுடமை தோழரின்கொள்கையில்லாகூட்டு,இவையனைத்தும் மக்களை சிந்திக்கவைத்து,ஈழத்து பிரச்சனையில் அரசியல்வாதிகள் ஒன்றுமே செய்யமுடியாது, இது தேர்தல் நேரபாசமே என்பதைபுரிந்துகொண்டார்கள்.//

அப்படித்தான் இருக்கும்.

ஆதவா said...நீங்கள் சொல்வது முற்றீலும் உண்மை. ஈழப் போராட்டத்தைவிட தமிழ்நாடு போராட்டமே மக்களுக்குப் பெரியதாக இருந்திருக்கிறது. நான் கணித்து பொய்க்காதது அது ஒன்றே.

கொங்கு பேரவை பொள்ளாச்சி அல்லது கோவையில் ஜெயிக்க அல்லது இரண்டாமிட வாய்ப்பிருக்கலாம் என்று நினைத்தேன்... பரவாயில்லை... நல்ல ஓட்டு வங்கி அவர்களுக்கு!!! சட்டசபை தேர்தலுக்கு அது பயன்படும்..


சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

தேர்தலை முன்னிட்டு அதை எதிர்க்கட்சிகள் அரசியல் வியாபாரம் ஆக்கியதைத்தான் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள்..மக்கள் இவர்களை நன்றாக புரிந்துவைத்துள்ளார்கள்


சர்வதேச சமூகமும் ஒன்றும் செய்ய இயலாமல் கையைக் கட்டிக்கொண்டு தான் இருக்கிறது.. சரியான முறையில் எடுத்து செல்லவில்லை என்பது எனது கருத்து

சொல்லரசன் said...

கருத்துக்கு நன்றிங்க உழவன்

சொல்லரசன் said...

சட்டசபை தேர்தலுக்கு அது பயன்படும்....... கண்டிப்பாக ஆதவா.

Asfar said...

welcome your opinion but we couldn't think tamil people mind as a srilankan.
have a nice day

சொல்லரசன் said...

முதல் வருகைக்கு நன்றிங்க அஸ்பர்

கலையரசன் said...

சத்ரியனா இருப்பதைவிட சாணக்கியனா இருப்பதே மேல்!
அதான் நல்ல கொள்ளியா புடிங்கிட்டாரு தாத்தா...


(நீங்க சொல்லரசன் தானே, டி.ஆர் மகன் குறலரசன் இல்லயே!.. நா கலையரசன்)
நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க..

உமா said...

மன்னிக்கவும்.

சொல்லரசன் said...

எதற்கு மன்னிப்பு புரியவில்லையே!!!!

சொல்லரசன் said...

கலையரசன் said...

//சத்ரியனா இருப்பதைவிட சாணக்கியனா இருப்பதே மேல்!
அதான் நல்ல கொள்ளியா புடிங்கிட்டாரு தாத்தா...//

கருத்துக்கு நன்றிங்க கலையரசன்

சொல்லரசன் said...

//நீங்க சொல்லரசன் தானே, டி.ஆர் மகன் குறலரசன் இல்லயே!.. நா கலையரசன்//

நீங்கதான் வடலுர் கொ(க)லையரசனா?

Suresh said...

மச்சான் உன் பதிவுல உள்ளது எல்லாம் உண்மை சும்மா அழகா சொல்லி இருக்க

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

சொல்லரசன் said...

வாங்க சக்கரை கருத்துக்கு நன்றிங்க