Saturday, January 31, 2009

நிலவு தொட்டு விடும் துரம் தான்

நான் படித்ததை கேட்டதை பதிவர் வட்டத்தில் பகிர்ந்துகொள்ளவந்துள்ளேன்

கேட்டது….

திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் குடியரசு தினத்தன்று தொலைகாட்சி நேர்கானலில் சொல்லகேட்டது
நிலவில் ஹிலியம்- 3 என்கிற கணிமம் பற்றி ஆராய்ச்சி நடைப்பெறுவதாகவும்.அந்த கணிமம் கண்டுபிடிக்கபட்டால்,
ஒரு கிலோ ஹிலியம்-3 யில் சென்னை நகரின் மின்சார தேவையை நிறைவு செய்யாலம் என்றும்.மேலும்
சந்திராயனுக்கு 2015 வாக்கில் இந்தியா மனிதனை அனுப்பும்போது, நிலவில் உள்ள கணிமவளங்களை கொண்டு இந்தியாவின் எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்ய முடியுமாம்.

படித்தது

நிலா மீது இதுவரை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள்தான் தங்கள் நாட்டு தேசியக்கொடிகளை பறக்க விட்டுள்ளன. சந்திராயன் உதவியுடன் நமது நாடும் 4-வது நாடாக தனது தேசியக்கொடியை பறக்க விட்டு உள்ளது..
இவ் அரிய சாதனையின் திட்ட இயக்குநர் திரு. மயில்சாமி அண்ணாதுரை என்ற கொங்கு தமிழன் என்பதில் எனக்கு, ஏன் உலகளாவிய தமிழர் அனைவருக்கும் பெருமை

ஒரு தமிழன் தயாரித்த செயற்கைக் கோள்தான் நிலாவை முதன் முதலாக ஆழமாக ஊடுருவி துல்லியமான ஆராய்ச்சிகளை , நடத்தி கொண்டுயிருக்கிறது, இதன் மூலம் ஒவ்வொரு தமிழனையும் அண்ணாதுரை பெருமைபடுத்தி உள்ளார். இந்த திட்டப்பணி அண்ணாதுரையுடன் கணிசமான தமிழ் விஞ்ஞானிகளும் இரவு- பகல் பாராது பாடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

சந்திராயன்-1 விண்கலம் நிலாவின் எந்த பகுதியில் ஆழ்பள்ளம் உள்ளது? எங்கு இயற்கை வளம் உள்ளது? என்பதை
நிலாவை சுற்றி பறந்து வந்து உயர்தரமான படங்களை எடுக்கிறது
இதன் மூலம் நிலாவில் ஒவ்வொரு பகுதியும் எப்படி உள்ளது என்பது சந்திராயன் தரும் தகவல்களைப் பொறுத்தே உலகுக்கே
தெரிந்துவருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில்தான் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா நாடுகள் சண்டை போட்டுக் கொள்ளாமல் சந்திரனை பிரித்துக்கொள்ள வழி ஏற்படப்போகிறது
மற்ற நாடுகள் தங்களின் தேவைக்காக வர்த்தகாக ரீதியாக சந்திராயன் விண்கலத்தை,பயன்படுத்துவது வழியாக இந்தியாவின் மதிப்பும்,ம்ரியாதையும், பொருளாதாரமும் உலகளவில் உயரும் எனவே…..
நிலவு தொட்டு விடும் துரம் தான்

2 comments:

Anonymous said...

// நிலவில் உள்ள கணிமவளங்களை கொண்டு இந்தியாவின் எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்ய முடியுமாம்.
//
நியமாகவா....

சொல்லரசன் said...

//கவின் said...

// நிலவில் உள்ள கணிமவளங்களை கொண்டு இந்தியாவின் எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்ய முடியுமாம்.//

நியமாகவா....//

நம்பிக்கையை வாழ்க்கை