Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, August 24, 2010

யார் பிச்சைகார‌ன்?

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.நேற்று நண்பர் சிங்கை ஞாணசேகரன் அலைபேசியில் என்னை தொடர்புகொண்டு ஏன் பதிவுபோடுவது இல்லை?ஏதாவது எழுதுங்கள் என்றார் எதைபற்றி எழுதுவது எனயோசிக்கையில் ஞாயிறுயன்றுநடந்த சம்பவத்தை பதிவாக போடலாம் என்று தொடர்கிறேன்

இரண்டு மாதத்திற்கு முன்புபுதியதாக வீடுகட்டியிருந்த ஆயத்தஆடை நிறுவன‌ நண்பர் வீட்டுக்கு ஞாயிறுயன்று சென்றுயிருந்தேன்.அந்த வீட்டிற்கு முதல்முறையாக செல்வதால் வீட்டை சுற்றிகாட்டினார்.அப்போது வரவேற்பறையில் சோனி தொலைகாட்சி பெட்டியும், குழந்தைகளுக்கான அறைகளில் இரண்டு கலைஞர் அரசு தொலைகாட்சி பெட்டியும் இருப்பதை பார்த்தேன்.உங்களுக்கும் கலைஞர் தொலைகாட்சி பெட்டி கொடுத்தார்களா என கேட்டதற்கு, கிராமத்தில் அம்மாவுக்குஉள்ள ரேசன்கார்டுக்கும்,இங்க எங்களுக்கு உள்ள ரேசன்கார்டுக்கு டோக்கன்வாங்கியிருந்தேன் அதற்கு இரண்டு மாததிற்கு முன்பு கொடுத்தார்கள்என்றார்.

அப்போது வாசலில் சுமார் 50 வயதுமதிக்கதக்க பிச்சைகாரன் ஒருவன் பிச்சை கேட்டுகுரல் கொடுத்துகொண்டுயிருந்தான். தொந்தரவு தாங்காத நண்பர் அவனிடம் யோவ் நல்லதானே இருக்கே வேலைக்கு போகவேண்டியதுதானே என சத்தம்போட்டபின் அவன்சென்றுவிட்டான்,அதன்பின் தொழில்சம்மந்தமாக கொஞ்ச‌நேரம் பேசிவிட்டு கிளம்பிவிட்டேன்.வருடத்திற் இரண்டு கோடிக்கு ஆர்டர் செய்யும் அவர் இலவசத்தை விட மனம்யில்லாமல் வாங்கி கொண்டு,அந்த பிச்சைகாரனிடம் சத்தம் போட்ட முரன்பாடு என‌க்கு நெருடியது.அதன்விளைவாக மனதில் தோன்றி நாலுவரி





அய்யாயாயா.........
சாமீமீ.........
பிச்சைபோடுங்க
வாசலில் பிச்சைகாரன்.

ஊனம் ஏதும் இல்லையே
உழைத்து சாப்பிடு
விரட்டியடித்தேன் வீதிக்கு


இல‌வ‌ச‌ தொலைகாட்சி பெற‌
முட்டிமோதி சென்று
வ‌ரிசையில் நின்றேன்
பஞ்சாய‌த்து அலுவ‌ல‌க‌ வாச‌லில்

எங்கிருந்தோ வ‌ந்தொருவ‌ன்
நெட்டித்த‌ள்ள‌ விழுந்தேன் வீதியில்
கைபிடித்து துக்கிவிட்டான்
விர‌ட்டிய‌டித்த‌ பிச்சைகார‌ன்
மெல்ல‌ சிரித்து கேட்டான்
ஏஞ்சாமீ உழைத்து வாங்க‌வேண்டிய‌துதானே!


இதுபோல் இலவசமின்மோட்டார் திட்டத்திலும் நடக்காமல் மோட்டார் இல்லாதவிவாசயிகளுக்கு,மின்மோட்டார் வழங்கவேண்டியது அரசின் கடமை.அதில் தவறுயிருந்தால் கண்டிக்கவேண்டியது யார் கடமை?

Monday, July 13, 2009

அரசியல்வாதி வாங்கினால் அன்பளிப்பு,அரசு ஊழியன் வாங்கினால்.......

மத்தியஅரசின் 2009 2010 பட்ஜெட்டில் அரசியல்கட்சிக்கு கொடுக்கும் அன்பளிப்புக்கு வருமானவரி விலக்கு அளித்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,அரசியல்வாதிகளுக்கு நன்கொடை கொடுக்கவேண்டும் என்றுசொல்லாமல் சொல்வதுபோல் உள்ளது என்பது மக்களின் கருத்து. அரசியல்வாதி வாங்கினால் அன்பளிப்பு, அரசு ஊழியன் வாங்கினால் லஞ்சமா? இதுநேற்று நான் சந்தித்த‌அரசு ஊழியரின் கேள்வி.

நிலம் வாங்கி கிரயம் செய்வதில் தொடங்கி,நிறுவனம் தொடங்கும்வரை பதிவுதுறை,
உள்ளாட்சிதுறை,வருவாய்துறை,மின்சாரதுறை,தொழில்துறை,என எல்லாதுறைக‌ளிலும் அவ‌ர்க‌ளுக்கு அனும‌தி வ‌ழ‌ங்க‌ சில‌ வேலைகளையும் அவ‌ர்க‌ளுக்கு செய்து கொடுப்ப‌த‌ற்கு நாங்க‌ள் ஏதாவ‌து வாங்கினால் ல‌ஞ்ச‌ம் வாங்குவ‌தாக‌ கூப்பாடுபோடுகிறார்க‌ள்,ஆனால் எந்த வேலையும் செய்யாமல்க‌ரைவேட்டிக‌ள் ர‌சீதுபுக் துக்கிகொண்டு வ‌ந்துவிட்டால் அன்ப‌ளிப்பு என்றுகொடுக்கிறார்க‌ள்,இத‌ற்கு இப்போது அர‌ச‌ங்கஅனுமதியும்கொடுத்துவிட்டார்கள் என நமதுஅரசங்க ஊழியர் நண்பர் புலம்பி அவர் கேட்ட கேள்விதான் பதிவின் தலைப்பு.

"அன்பளிப்பு வேண்டுவோர் சங்க மூலம் அனுகவும்" என்கிற அறிவிப்பு பலகைகளை எங்க‌ ஊரில் நீங்க‌ பார்க்க‌லாம் அந்த‌ அள‌வுக்கு நொந்த‌போன‌ நிறுவ‌ன‌ங்கள் இங்குஅதிக‌ம்,க‌ட்சி பாகுபாடுயின்றிஅனைத்துவிச‌ய‌த்திற்கும்,நிதி திர‌ட்டுவ‌தில் பலே கில்லாடிக‌ள்.இருச‌க்க‌ர‌வாக‌ன‌ நிதி வ‌சூல்புக் அடித்து பத்துச‌க்க‌ர‌ வாக‌ன‌ம் வாங்குஅள‌விற்கு வ‌சூல் செய்யும் சூர‌ர்க‌ள் நிறைந்த‌ ஊரில்,இந்த‌ அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.நிதி கொடுக்க‌ம‌றுத்தால் அதை ம‌ன‌தில் வைத்துகொண்டு லெட்டர்பேடுகட்சிகள்கூட‌ நடத்தும் ப‌ந்த்ச‌ம‌ய‌ங்க‌ளில்தாக்குத‌ற்கு ப‌ய‌ந்து ப‌ந்த‌ என்றாலே விடுமுறை என்று தொழிலாள‌ர்க‌ள் சுற்றுலாகிள‌ப்பும் அள‌விற்கு அன்ப‌ளிப்பு ஆட்டிப‌டைக்கிற‌து இங்கு,இனி வ‌ரி வில‌க்கு இருக்கிற‌து என்று சொல்லி தைரிய‌மாக‌ ரசீதுபுக் துக்கிகொண்டுவ‌ந்துவிடுவார்க‌ள் என்ற க‌வ‌லை இப்போதே ப‌ல‌ருக்கு வ‌ந்துவிட்ட‌து.


கட்அவுட் நிதியில் தொடங்கி கட்சிமாநாடு வரை நிதி கொடுக்கும் பெரும் தொழில்நிறுவனங்களுக்கு அந்த பணத்தை கணக்குகாட்டலாம் என்பது சிறிய‌ஆறுதல்,ஆனால் சிறு,குறு நிறுவனங்களுக்குதிண்டாட்டம்தான். ஆளும்கட்சி முத‌ல் லெட்ட‌ர்பேடு க‌ட்சிவ‌ரை இனி ர‌சீதுபுக்கை தூக்கிகொண்டு
வ‌சூல் வேட்டையில் இற‌ங்கிவிடுவார்கள்.இப்ப‌டி வ‌சூல் செய்து சேர்த்த ப‌ண‌த்தைதான் தேர்த‌ல் நேரங்க‌ளில் செல‌வு செய்கிறார்க‌ள்,ஆனால் ஏதோஇவ‌ர்க‌ள் கையில் இருந்துகொடுப்ப‌துபோல் ஓட்டுக்கு அவ்வ‌ள‌வு கொடுத்தோம்இவ்வள‌வு கொடுத்தோம் என‌ அள‌ப்பார்க‌ள்.இந்த‌ அறிவிப்பை பார்த்தால் அர‌சிய‌ல்க‌ட்சிக்கு தொழில்நிறுவ‌ன‌ங்க‌ள் ந‌ன்கொடை கொடுக்க‌வேண்டும் என்றும‌றைமுக‌ ச‌ட்ட‌ம் போட்ட‌மாதிரிதான் தெரிகிற‌து.

கோவில்திருவிழா நிதிவ‌சூல் செய்தால் திருவிழா முடிந்த‌பின் ஒருரூபாய் கொடுத்துயிருக்கிறேன் க‌ண‌க்குகேட்க‌ என‌க்கு உரிமையுள்ள‌து என்று ர‌வுசுவுடும் ம‌க்க‌ள்,இந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌ம் கண‌க்குகேட்ட‌ சரித்திர‌ம் உண்டா?இத‌னால்தான் ரசீதுபுக் அடித்து பொழ‌ப்புந‌ட‌த்தும் ஊருக்கு நாலுபேர் இனிதெருவுக்கு நாலுபேரகாக‌ மாறுவார்க‌ள்.

ந‌ன்கொடை கொடுப்ப‌வ‌ர்க‌ள் ந‌ன்கொடைவாங்குப‌வ‌ரிட‌ம் க‌ண‌க்கு கேட்கும் உரிமை உண்டு என‌ ச‌ட்ட‌த்தில் இட‌முள்ள‌து என்றுகூறுகிறார்க‌ள்,அப்ப‌டியான‌ல் அர‌சிய‌ல்க‌ட்சி வ‌சூலிக்கும் ந‌ன்கொடைக்கு க‌ண‌க்கு கேட்க‌ ச‌ட்ட‌த்தில் இட‌முள்ள‌தா?இது ப‌ற்றி நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தால் அரசிய‌ல் க‌ட்சிக்குவிள‌க்க‌ம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப‌வ‌ர்க‌ளா?இப்ப‌டி வ‌ழ‌க்கு தொட‌ருவார்க‌ள் என்ற‌ ப‌ய‌ம் வ‌ந்தால்தான் அவ‌ர்களும் கொஞ்ச‌மாவ‌து திருந்துவார்க‌ள் இல்லையெனில் இன்று நிறுவன‌ங்க‌ளில் வ‌சூல் வேட்டைநட‌த்துப‌வ‌ர்க‌ள் நாளைவீட்டிற்கு வீடு ந‌ட‌த்து கால‌ம் வெகு தொலைவில் இல்லை

Friday, July 3, 2009

சாதிகள் இருக்குதடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா! என்ற பாரதியின் பாடலை சொல்லிகொடுக்கும் பள்ளிகள்தான்,இன்று சாதி சான்றிதழ் இல்லையென்றால் அட்மிசன் கொடுக்கமுடியாது என்று சொல்கிறார்கள். .சாதிகள் ஒழிய அடிதளமாக விளங்கும் பள்ளிகளில் இந்தநிலை.சாதிகள் ஒழிக்கபட குழந்தைகள் மனத்தில் சாதிகள் பற்றிய சிந்தனைகள் இருக்ககூடாது என நினைத்தபாரதி இன்று இருந்துயிருந்தால் இப்படிதான் பாடியிருப்பரோ!

சாதிகள் இருக்குதடி பாப்பா!
சாதி சான்றிதழ் கொடுத்துவிடு பாப்பா,
இல்லையெனில் அட்மிசன் இல்லையடி பாப்பா,
இது அரசங்க உத்தரவடி பாப்பா.

இந்தியா சுகந்திரம் பெற்றபோது இடஒதுக்கிடு சட்டம் கொண்டுவந்தவர்கள் ஜம்பது ஆண்டுகளில் இடஒதுக்கிடு சதவீதம் குறைந்து சாதிகளஅற்ற சமூதாயம் உருவாகவேண்டும் என்று கன்வு கண்டார்கள்,ஆனால் இன்றோ18 சதவீதம் 69 சதவீதமாக உயர்ந்து சாதிகள் ஒழிக்கமுடியாதநிலை ஏற்பட்டுயுள்ளது.எழுத்திலும் பேச்சிலும் தீன்டாமைஒழிந்துவிட்டது, ஒடுக்கபட்டவர்கள் உயர்ந்துவிட்டார்கள்,சாதிகள் ஒழிந்துவிட்டது என்று கூறலாம்,ஆனால் சாதிகள் வளர்ந்து கொண்டுயுள்ளது என்பது எனது கருத்து, சந்தேகம் இருந்தால் அரசங்கம் வெளியிடும் பட்டியலை பார்த்தால்புரியும்.கலப்பு திருமணம் பெருகிவிட்ட இக்காலத்தில் சாதியை பற்றி பேசுவதாக என்னை குறைசொல்லவேண்டாம்,கலப்பு திருமணம் செய்தவர்கள் எத்தனை பேர் எனக்கு சலுகைவேண்டாம் இடஒதுக்கிடு வேண்டாம் என சாதிகள் இல்லை என்ற சொல்கிறார்கள். அவர்களில் எந்த சாதிக்கு சலுகை அதிகம் என்று பார்த்து அந்த சாதியை குறித்து சான்றிதழ் வாங்கதவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

16 ம் நூற்றாண்டுகளில் உருவான ஜந்துசாதிகள்,இன்று 500 மேற்பட்ட சாதிகளாக வளர்ந்துள்ளது,அதுமட்டும் இல்லாமல் பல உட்பிரிவுகளும் தோன்றி இன்னும் ஒழிக்கபடமால் இருப்பது வருத்தபடவேண்டிய விசயம்.ஆண்டுக்கு ஆண்டுக்கு பெருகிவரும் சாதிசங்களினாலும்,சாதி அடிபடையிலான இடஒதுக்கிடு இருக்கும்வரை ஒழிக்கமுடியாது நிலைதான் உள்ள‌து.பத்தாண்டுக்கு முன்னால் ஒரு வகுப்பினர் மூன்று எழுத்தைஇனைத்து கொண்டு நாங்கள் மலைஜாதியினர் என சலுகை அனுபவித்து பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு அவர்கள்பெற்ற சலுகை ரத்து செய்யபட்டது எல்லாம் இந்த சாதிசான்றிதழ் வாங்கிதான் என்பது நினைவுகொள்ளதக்கது,ஏன் இப்பொழுதுகூட உள்ளாச்சி தேர்தலில் தவறான‌ சாதிசான்றிதழ் கொடுத்து இட‌ஒதுக்கிடுவில் தேர்ந்துஎடுக்கபடுவதை தடுக்க தகுந்த சட்டமுன்வடிவு தாக்கல் செய்யபடும் என‌ சட்டசபை அறிவிப்பு சாதிசான்றிதழ் அவலத்திற்கு ஒரு சான்று.சாதிசான்றிதழ் இருந்தால் இட ஒதுக்கிடு பெறலாம் என்று வருவாய்கொடுத்து சான்றிதழ் வாங்கி சலுகைபெறுவதால்,உண்மையில் ஒடுக்க‌ப‌ட்ட‌வ‌ர்க‌ள் முன்னேற‌ இந்த‌ இட‌ ஒதுக்கிடு உத‌வியாக‌ இருக்கிற‌தா என்ற‌ கேள்வி எழுகிறது.

ஒடுக்கபட்டவர்கள்,கடைகோடி,மக்கள் முன்னேற இன்றைய காலகட்டத்தில் இந்த சாதிய இடஒதுக்கிடுவை தவிர்த்து பொருளாதாரா அடிபடையில் இட ஒதுக்கிடு கொண்டு வரவேண்டும் அதற்கு முதலில் பள்ளிகளில் சாதிசான்றிதழ் வாங்குவதை தடைசெய்யவேண்டும்,நம் தலைமுறைகள் சாதியில்லா தலைமுறையாக உருவாக்க கல்விசலுகை பெறதவர்கள்,வசதி வாய்ப்புள்ளவர்கள், சலுகை தேவையில்லை என சான்றிதழ் கொடுக்காமல் இருக்க வேண்டும்.உதட்டளவில் சாதிஒழிப்பு பற்றி பேசுபவர்கள் முதலில் அவர்கள் குழந்தகளுக்கு சாதியில்லை என‌ பள்ளிகளில் சேர்க்க முன்வரவேண்டும்,இவையெல்லாம் மக்கள் செய்ய முன்வந்தால் அரசங்கம் தனது கொள்கையை தளர்த்தி உண்மையில் ஒடுக்க பட்டவர்களுக்கு முன்னேற வழிஏற்படுத்தபடும் சூழ்நிலை உருவாகும்.

இந்த தலைப்பில் பதிவு எழுதவேண்டும் என்று நினைக்கையில்,நண்பர் கா.பா வின் சாதிகள் இல்லையடி பாப்பாவில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பின்னுட்டம்யிட்டபோது,சகோதரி உமா அவர்கள் இன்றயை காலகட்டத்தில் சாதிகளை பற்றி பேசுவதும்,எழுதுவதும் சரியல்ல என்றதால் இந்த பதிவை தவிர்த்துவிடலாம் என்று இருந்தேன்,ஆனால் எனது பையனை U.K.G சேர்ப்பதற்கு பள்ளிக்கு சென்றபோது,நுழைவுத்தேர்வு,நேர்முகதேர்வு என்று பெரும் போராடத்துக்கு பின்அட்மிசன் வாங்கவேண்டி இருந்தது, அதன்பின் அட்மிசன் அன்று சாதி சான்றிதழ் கொடுத்தால்தான் அட்மிசன் போடுவோம் என்று சொல்லிவிட்டார்கள். மெட்ரிக்குலேசன் பள்ளியில் இடஒதுக்கிடு கிடையாதே நீங்கள் ஏன் சான்றிதழ் கேட்கிறீர்கள் என்று நாம் கேட்டால் இது அரசங்கஉத்தரவு என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். அப்புறம் மெட்ரிக்குலேசன் ஆய்வாளர் வரை சென்று அட்மிசன் வாங்க வேன்டியதாகிவிட்டது. அப்போது கூட நான் சாதி சான்றிதழ் விரைவில் வாங்கிகொடுத்துவிடவேண்டும் என்ற உறுதி அளித்தபின் தான் அட்மிசன் போட்டார்கள். அதனால் ஏற்பட்ட அலைகழிப்பினால்,இதுபோல் நிகழ்வுகளால் சாதிகள் ஒழிய வாய்ப்பில்லை என்பதால் இந்த பதிவு

Wednesday, April 15, 2009

"விரோதி"க்கு வந்த சோதனை

நேற்றுவந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கு பதில் வாழ்த்து சொல்லாமா, வேண்டாமா, என்று எனக்கு ஒரே குழப்பமாகயுள்ளது.

ஏற்கெனவே தைமுதல் நாள்தான் தமிழ்புத்தாண்டு என்றுவாழ்த்துகூறிய திராவிட நண்பர்களிடைய சித்திரையில்தானே தமிழ்புத்தாண்டு என சொல்ல,அவர்கள் எங்கதலைவ்ர் உலகதமிழறிஞர்களைகலந்து தை திங்கள்தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட‌வேண்டும் என்று சட்டம் போட்டது தெரியதா? உலகமே ஏற்றுகொண்டு உள்ளது, உனக்கு என்னடா அப்படின் கேட்க,எதுக்குடா வம்பு நாமும் வாழ்த்து சொல்லிவிட வேண்டியதுதானுன். எல்லோருக்கு வாழ்த்து சொல்லிகொண்டாடிய முன்று மாதத்திற்குள்.

மறுபடியும் நேற்று பதிவுலக நண்பர்களின் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளின் குறுஅஞ்சலை பார்த்தவுடன் ஒரேவருடத்தில் இரண்டுதமிழ்புத்தாண்டா? கொஞ்சம் குழப்பமாகதான் உள்ளது.இது பற்றி இன்று வாழ்த்து அனுப்பிய நண்பரும் ஆண்மிகத்திலும் சாஸ்திரத்திலும் அதீத நம்பிக்கை உள்ள வங்கியில் பனியாற்றுபவரிடம்,இதைதான் தைமாதத்தில் கொண்டாட சொல்லி சட்டம் போட்டு,நண்பர்கள் சொல்ல நானும் கொண்டாடிவிட்டேனே என்று சொல்ல, அவருக்கு என்மேல் எத்தனை வருட கோபமோ தெரியவில்லை மனுசன் ஒரு காய்ச்சி காயத்து விட்டார்.நீ எப்ப அந்தகூட்டத்திலிருந்து வெளியேவருவீயோ,அப்பதான்டா உருப்படுவே அப்படின்னு சாபமே கொடுத்துட்டார்.பிரச்சனை வந்தா முன்னாடி நிக்கற பிறப்புகளையும், தோழர்களை விட்டு எப்படிங்க வெளியவரமுடியும்.நீங்க இதற்கு விளக்கம் சொல்லுங்கோனுன் கேட்க.

பத்து பேர்சேர்ந்து கூட்டம் போட்டு சட்டம் கொண்டுவந்தால் சரித்திரம் மாறிவிடுமோ!
அப்படின்னா ஒரு சட்டம் போட்டு ஈழத்து பிரச்சனையை ஏன் தீர்க்க‌முடியல,தமிழகத்தில் உள்ள லஞ்சத்தையும்,வறுமையும் சட்டம் போட்டு ஒழிக்கவேண்டியதுதானே.............

நான் குறுக்கிட்டு அய்யா சாமி புத்தாண்டு எப்பகொண்டாடலாம் அதை சொல்லு முதல்ல........

அததான்டா சொல்லவருகிறேன் என்று வானசாஸ்திரத்தையும், கிரஹகநிலையும், ஆதிமனிதனின் பருவகால கணக்குகளையும், அப்போதைய குமரிநிலப்பரப்பு அதன் பின் தமிழர் இருப்பிடம்பற்றி மிக மிக.....நீண்ட விளக்கம்கொடுத்து.சித்திரை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டுனுன் சொல்லிமுடிக்க நம்ம அலைபேசி பேட்டரியில்சார்ஜ் போகவும்சரியா இருந்ததுங்கோ. அவர்சொன்னவிளக்கத்தைஎழுதும் அளவிற்கு எனக்கு நேரமின்மையின் பொருட்டும்.நாலுவரியில் எழுதி நானும் இங்கே இருக்கிறேன் என்று காட்டிகொள்ள வேண்டியதால்.சுருக்கமாக சொல்லிவிடறனுங்க.

ஆதி மனிதன் விவசாயம் செய்ய நாட்களை சூரியனைகொண்டும், பருவநிலையை சந்திரனைகொண்டு ஆறுபருவமாக பிரித்து காலத்தை அறிந்துவைத்துள்ளான்.இதில் சூரியன் தெற்கே இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வான் உச்சிக்கு வருவது ஆண்டின் தொடக்கநாளாக கொண்டாடபடுவது பழங்காலத்துகுமரி நிலப்பரப்பின் தமிழர்களின் மரபு அந்த நாள் மார்ச் 21, அதன்பின் குமரிகண்டத்தை பெருங்கடல் ஆட்கொண்டபின் இடம் பெயர்ந்து வந்தபின் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை 1, தற்போதயை தமிழகத்திற்கு வந்தபின் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை பத்து,என்வே தமிழனின் மரபுபடி சூரியன்வான் உச்சிக்கு வரும் சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாட‌வேண்டும் என்பது நம் நண்பரின் வாதம்.

இது நம்ம நண்பர் சொல்ல கேட்டு எழுதிய செவிவழி செய்தி. இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று என‌க்கு தெரியவில்லை.இருந்தாலும் தமிழ் வருடத்தின் இருபத்திமூன்றாவ‌து விரோதிவருட புத்தாண்டு போகட்டும் அடுத்து வருகிற விக்ருதி வருடபுத்தாண்டு எப்போது கொண்டாடுவது என்று தெரிந்தால் நமக்கும்,அடுத்து ஆண்டு காலண்டரில் போட சிவகாசி மக்களுக்கும் வசதியாக இருக்கும்.

என‌வே அடுத்த தமிழ் புத்தாண்டு எப்போது தைமாதத்திலா?சித்திரையிலா?

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று மக்களிடம் ஒட்டுகேட்டு ஜஸ்கிரிமும் டிப்ஸ்ம் தர நமக்குவசதி இல்லைங்க.

சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கும் அளவிற்கு வயது வந்தவங்க பதிவு இல்லை நம்முடையது.

வழக்கமா பின்னுட்டம் போடும் பாசகார நண்பர்களே நம் குழப்பத்தை தீர்க்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

நீங்களும் வழக்கமா பின்னுட்டம் போடுவது போல,
இதிலும் அரசியலா?ஜஸ்கிரிமுக்கு டிப்ஸ்க்கும் விளக்கம் வேண்டும்? மறைந்து இருந்து அம்பு விடுறீங்க,கண்டன பேரணி நடத்துவோம்,ஏன் இப்படி? அப்படின் போடமா

உருப்படியான யோசனை சொல்லுங்க பாசமுள்ள நண்பர்களே

Wednesday, March 18, 2009

இந்திய பொருளாதாரம் சுவிஸ் வங்கியில்


கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து திரும்ப கொண்டுவருவோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டசெய்திவரவேற்கதக்கது.

சுவிஸ் வங்கியில் இந்தியாவின் கருப்பு பணம் (கொஞ்சம்தானுங்க)1.4 ட்ரிலியன்டாலர் இந்திய மதிப்பில் சுமார் 70 இலட்சம் கோடிடிடிடிடிடிடி இது உலக கருப்புபணத்தில் 56 சதவீதம் என்று,இண்டியன் இண்ஸ்டிட்டியூட் ஆப் பைனாஸ்சில் கடந்த மே மாதம் போராசிரியர் சுமன் அகர்வால் தாக்கல் செய்தபொருளாதார ஆய்வறிக்கையில்தெரிகிறது.

இது இந்தியாவின் கடன் தொகையைவிட பதின்முன்று மடங்கு அதிகம்.நம் நாட்டின் பணம் சுவிஸ் வங்கியில்இருக்கையில்,நாம் உலக வங்கியிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம்.அந்தபணம் இந்தியாவிற்கு கொண்டு வந்து (முடியாது என நீங்கள் சொல்லறது எனக்குகேட்குதுங்க)உலக நாடுகளுக்குகடன் கொடுத்து அதில் வரும் வட்டியில் நம் நாட்டிற்கு வரியில்லா பட்ஜெட்போடலாம்.இல்லையெனில் சுமார் 50 கோடி ஏழைமக்களுக்கு பிரித்துகொடுத்தால் நல்லயிருக்குங்கோ.(இதுக்கும் டோக்கன் கொடுத்துகாசுபார்க்காதீங்க பிறப்புகளா)

எனக்குள் ஒரு கேள்வி கடந்த 2008 பிப்ரவரி மாதத்தில் ஜெர்மனியின்புலனாய்வுதுறை பி.என்.டி அமைப்பு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அருகில்யுள்ளலீச்டென்ஸ்டின் நாட்டில் உள்ள எல்.டி.ஜி வங்கியில் வாடிக்கையாளர் தகவலைசேகரித்து பணத்தை மீட்டு சென்றபோது.அப்போது அந்த வங்கி இதுபோல்இந்தியா கேட்டால் அவர்கள் நாட்டின் வாடிக்கையாளர் விபரமும் பணத்தையும் கொடுக்கதயார் என்று கூறியபோது எங்கே இருந்தார்கள் இவர்கள்?

இதுகுறித்து ட்ரான்ஃபரன்ஸீ இண்டர்நேசன் அமைப்பின் இந்திய தலைவர் அட்மிரல்தஹிலியானி இந்தியாவிற்கு சொந்தம் ஆன பணத்தை வாங்கிகொடுக்க இந்தியஅரசு மறப்பது ஏன்? என்று கேட்டபோது என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்.இந்த கருப்பு பணம் முதலை வாய்க்குள் போனது என்பதுஎங்களுக்கு தெரியும்.இதில் (சுமார் 50 சதவீதத்திற்கு மேலுள்ள ஊழல்பணம்)எல்லா அரசியில்வாதிகளுக்கும்,மற்ற கருப்பு பணம்சினிமாநடிகர்களுக்கும்,பெரும் தொழிலதிபர்களுக்கும்,கிரிகெட் வீரர்களுக்கும்சொந்தம்.அது மட்டும்யின்றி 1934 ஆம் ஆண்டு சுவிட்ச்ர்லாந்து நாட்டு வங்கிதொடர்பான சட்டபடி அந்த நாடே சுவிஸ் வங்கியில் விபரம் கோரமுடியாதுஎன்று கேள்விபட்டுயுள்ளோம்.அதையும் மீறி கருப்பு பணத்தை இந்தியாவிற்குகொண்டுவந்தால்,இந்தியாவின் சரசாரி வருமானம் பெருகி மக்கள் வளமான இந்தியர்களாக இருப்பர்கள்.எனவே நீங்கள் ஆட்சியமைத்தாலும் அமைக்காவிட்டாலும் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள கருப்பு பண விவரம் தொடருமா?
குறைந்தபட்சம் பெயர்பட்டியில்லாவது வெளியிடமுயற்சி செய்வீர்களா?

Thursday, February 19, 2009

காதலர்தின கொண்டாட்டமும் திண்டாட்டமும்

சென்றவாரம் அனைத்து ஊடகத்திலும்,இவ் வலைபூவிலும் அதிகம்

முக்கியத்துவம்பெற்ற செய்தி காதலர்தினசெய்தியாகதான் இருக்கும்

என்பதில்ஜயமில்லை. கர்நாடக மாநிலதில் காதலர்தினம் திண்டாட்டம்

ஆகிவிடுமோஎன்றசூழ்நிலையில்எதிர்ப்பு அமைப்புகளின்கைது

நடவடிக்கையில் காதலர்க்குகொன்டாட்டம்.கோவையில் இந்து முன்னனி

வீரவணக்க நாள் மற்றும்கொங்கு அரசியல் மாநாடு முன்னிட்டும்

காவல்துறையின்பலத்த பாதுகாப்பில்காதலர்களுக்குசற்று திண்டாட்டம்தான்.

திருச்சியில்மலைகோட்டை,மற்றும் முக்கொம்புவில் காதலர்களுக்கு

இரண்டு நாட்கள் மகா கொண்டாட்டம்.ஆனால் பாவம் பிரம்மசாரியான

உச்சிபிள்ளையாருக்குபடுதிண்டாட்டம்.

வடமாநிலங்களில்கொண்டாட்டங்கள்இருந்தபொதிலும்,திண்டாட்டகளும்

அதிகம்.குறிப்பாகஜார்கண்ட்மாநிலத்தில்காதலர்தினம்,கொண்டாடிய பெண்களைசிறைபிடித்தது,ஆண்களைதோப்புகராணம்போடவைத்துதிண்டாட்டம் கொடுத்துள்ளனர்..சே அமைப்பினர்.காதலர்தினம் கொண்டடுவது இந்திய

அமைப்புசட்டதில்குற்றமா?.அப்படிஇருதாலும், தண்டனை கொடுக்கும் அதிகாரம்

இவர்களுக்கு யார் கொடுத்தது,இது மனித உரிமை மீறல் இல்லையா? அங்கே மனித உரிமை கழகங்கள் திண்டாட்டதில் இருக்கிறதா.அல்லது பீகார் பினாகுமாரியின் புதுமையில்மறைக்கபட்டுவிட்டதா. சிறை பிடித்ததை புகைபடம் எடுத்து வெளியிடும் செய்திதாள்க்கு கொண்டாட்டம். அதில் யாரேனும் தவறான முடிவுக்கு சென்றால் செய்திதாள்கள்பொறுப்புஏற்கதயரா?.

நம் வலைபூவில் பெரும்பாலும் திண்டாட்டம் இல்லாத காதலர் தின கொண்டாட்டங்கள் நிறைந்த பதிவு வாரம்.

Tuesday, February 10, 2009

கலாச்சார சீரழிவு

கடந்த வாரம் செய்திதாளில் படித்தது.
காதலர் தினத்தில் சந்திக்கும் காதலர்களை பதிவு அலுவலத்திற்கு அழைத்துசென்று திருமணம் செய்து வைப்போம் என ஒரு அமைப்புமிரட்டியுள்ளது. இது அத்துமிறிய செயல் எனவும்.இல்லை இல்லை இது சரியானதுதான் நம் கலாச்சாரத்திற்கு என்று வாதம் நடைபெற்றுகொண்டு இருக்கையில்,கடந்த இரு நாட்களுக்கு முன்செய்திதாளில் ஒரு அமைப்பை சேர்ந்த பெண் பேட்டி கொடுக்கிறார் எனனவென்று, ஒரின சேர்கையாளர் அனைவரும் இன்றுபுதிதாகஅமைப்புஉருவாககியுள்ளோம்.ஒரின சேர்க்கையாளர் பலர் இங்குயுள்ளனர்,திருமணமாகி குழந்தை பெற்றவர்களும்,கல்லுரி மாணவிகளும் இதில் அடக்கம்,எங்கள் இன்னல்கள் ..........(அந்த கண்றாவி நமக்கு எதற்கு) எனவே எங்களுக்கு சட்டபுர்வமான அங்கீகாரம் வேண்டும்,என அரசிடம் கோரிககை வைக்கிறோம்.

இது ஏதோ மேலைநாடுகளில் எடுக்கபட்ட பேட்டி என நினைத்துவிடதீர்கள் சாட்சாத் நம் சென்னையில் கடந்த வாரம் ஒரின சேர்கையாளர்கள் சங்கம் ஆரம்பித்து (நாட்டில் இதற்கெல்லாம் சங்கமா) செய்திதாள்களுக்கு கொடுக்கபட்டபேட்டி. இதை எல்லாம் பார்க்கும் போது ரசே..அமைப்பினர் செயல் ஒன்றும் தவறாக தெரியவில்லை. மனதை பரிமாறிகொள்ளும் காதலையே எதிர்க்கும் நம் நாட்டில் காமத்தை மட்டுமே பரிமாறிகொள்ளும் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம், அங்கீகாரம் கேட்கும் அளவுக்கு.
மேலை நாட்டில்யுள்ள நல்ல விசயங்களை தவிர்த்துவிட்டு.
அவர்களே அருவருக்கும் இதை பின்பற்றுவது நாட்டின் கலாச்சார சீரழிவு ஆகும்.

நட்பின் புனிதத்தைக் களங்படுத்தி சந்தேகபடவைக்கும் இழிசெயலை வேரிலே அழிப்போம். நல்லாசிரியர் விருது பெரும் செய்தியை நாலுவ்ரியில் போடும் பத்திரிக்கை அன்பர்களே,இந்த கலாச்சார சீரழிவாளர்களுக்கு கால் பக்கம் ஒதுக்கவது ஏன்? ஜனநாயகத்தின் நான்காவ்து துண் என்று சென்னால் மட்டும் போதுமா, ஜனநாயக நாட்டின் கலாச்சாரம் பற்றி கவலை இல்லையா? இனி மேலாவது இந்த இழிசெயலை இருட்டிப்பு செய்யுஙகள்.வீட்டின் கலாச்சாரமே,நாட்டின் கலாச்சாரம் எனவே இநத காம இழிவாளர்களை புறம்தள்ளுங்கள். நம் பிள்ளைகளின் நட்பை சந்தேகபடமால் நிம்மதியாக பார்க்கலாம்.உலக கலாச்சாரத்தில் இந்தியாவிற்கு இருக்கும் பெயரையும்,மரியாதையும் காப்போம்.