இங்க 1000? அங்க எவ்வளவு?
“ரேசன் அட்டை கொண்டு போன டோக்கன்கொடுத்துவிடுவார்கள்!”
கம்மியா கொடுத்த வாங்கதே!
ஏன் அவசரபடுகிறாய்? விடு தேடி வருவார்கள் கவலைப்படாதே.
இரண்டு நாட்களுக்கு இதுதானுங்க பரவலான பேச்சா இருக்குதுங்க நம்ம ஏரியாவில்.
இதில பணம் வாங்கலாமா? வேண்டாமா?
வாங்கினால் என்ன தப்பு அவங்க சொந்தபணத்தையா கொடுக்கறாங்க?
எல்லாம் நம்மகிட்ட கொள்ளையடிச்ச பணத்தில் கொஞ்சத்தை திரும்பி
நமக்கே கொடுக்கிறானுங்க வாங்கிகவேண்டியதுதானே,இப்படி பட்டிமன்றமே
நடக்குதுங்க அதனாலநமக்கு சந்தேகம் இது ஜனநாயகதேர்தலா? இல்லை
பணநாயக தேர்தலா?
இந்த தேர்தலுக்கு 12800 கோடிரூபாய் செலவுசெய்கிறார்கள் அரசியல்கட்சியினர்
என்கிறது அரசியல் ஆய்வரிக்கை,இந்த பணம் எங்குயிருந்து வந்தது.இவ்வளவு
பணம் செலவு செய்பவர்கள் எவ்வளவு பணத்தை கொள்ளையடித்து இருப்பார்கள்
என்பது சுவிஸ் வங்கிக்கே வெளிச்சம்.
அரசு திட்டபணம் "படிப்படி" யாக குறைந்து கடைசியாக மக்களிடம் வந்து
சேரும்போது நான்கில் ஒரு பங்குதான்கிடைக்கும், அதுபோலதான் நேற்றுஆரம்பித்த
பண பட்டுவாடா தலைமையில் இருந்துமாவட்டம்,வட்டம்,வார்டுக்குவந்து
1000 க்கு 200 ஆக 500 க்கு 100 ஆக மக்களுக்கு வந்துகொண்டுஇருக்கிறது.
மேல் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை சுருட்ட ஆரம்பிக்கும்
இவர்களா ஜனநாயகவாதிகள் இதுவா ஜனநாயகதேர்தல்.
இந்தபணநாயக தேர்தலில் கொள்கையே எங்கள் இலட்ச்சியம் என்ற கொள்கை
சிற்பிகளில் ஒருவர் தேர்தல்முடிவுக்கு முன்பே கூட்டணியில் இருந்துவிலகி
தாமரைகூட்டனிக்கு சென்றுவிட்டார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதுஅந்த
சந்திரசேகரகாருக்கே வெளிச்சம்.இந்த கூட்டனியில் முக்கியமானவர் தேர்தலுக்கு பின் ஆதரவுகொடுப்பதை ஆலோசிப்போம் என்று சொல்லி தனது காரத்தை குறைத்து கொண்டார் எவ்வளவு "கை" மாறபோகிறதோ தெரியவில்லை,வட மாநிலத்தில்இருக்கும் பஸ்... நாங்க இன்னும் கூட்டனியில்தான் இருக்கிறோம் மரியாதையாக கூப்பிட்டால் ரயில்லிருந்து இறங்கி வந்து கை கொடுப்போம்ன்னு அப்பட்டமாக சொல்கிறார்.
ரயிலும் தடம் புரளதயார் நிலையில் உள்ளது . என்னை முதல்வர் ஆக்குபவருக்கே ஆதரவு என்று குதிரை பேரத்திற்கு பெட்டி
தயார்செய்துவிட்டார்முலாயம்.இங்க மருத்துவர் மாங்கணிகளில் உள்ள இலையை பிய்த்துவிட்டு யார் வருகிறார்களோ அவர்களுக்கு கை யில்கொடுக்கலாமா அல்லது தாமரையில் வைக்கலாமா என்று இலாப நட்ட கணக்கு பார்க்க ஆடம்பித்துவிட்டார்.இதையெல்லாம் பார்க்கும்போதுங்க
நமக்கு சந்தேகம்வந்துருச்சிங்கோ,இந்த தேர்தலை பற்றி.
தமிழகத்தை பொருத்தவரை மதுரை முடிவைவைத்து
இது ஜனநாயகதேர்தலா இல்லை பணநாயக தேர்தலா?என்று நீங்களே தெரிந்து கொள்ளவும்
இரண்டு வாரமா வேலைபளு காரணமாக இந்த பக்கம் வரமுடியமா இருந்தாலும்,
இரண்டு நாளைக்கு ஒரு முறை போன் போட்ட பாசகார நண்பர்களே,
சிங்கபூரில் இருந்து நம்ம சாமானியன் சரக்குடன் (தமிழ்நாட்டு சரக்கு என்று அர்த்தம் கொள்ளவும்)
திருச்சிக்கு வந்து இருக்கிறார்.அவருடைய விருப்பபடி கடை விடுமுறை அன்று
அதானுங்க மே 13 தவறாம திருச்சிக்கு வந்து சரக்கை பகிர்ந்துகொள்ள
அன்புடன்அழைக்கிறேன்.அங்க வந்து சொல்லுங்க
இது ஜனநாயக தேர்தலா இல்லை பணநாயக தேர்தலா?
23 comments:
அகில இந்திய ரீதில அலசலா? இதுல வட மாநிலத் தலைவர்கள் பற்றி சூசகமா சொல்றீங்க? என்ன பண்ணினாலும் கடைசில ஆப்பு நமக்குத்தான் நண்பா... கொடுக்கிற காசை வாங்கி வச்சிக்கிட்டு உங்களுக்கு பிடிச்ச கட்சிக்கு ஓட்டு போடுங்க நண்பா..
//1000 க்கு 200 ஆக 500 க்கு 100 ஆக மக்களுக்கு வந்துகொண்டுஇருக்கிறது.//
ஆமா தலைவா.. அவன் இவன் மாவட்டம் வட்டம் சதுரம்.. இபபடி எல்லா பயலுங்களும் சூம்புனது போக, மக்கள் நம்ம கையிக்கு வர்றது வெறும் குச்சி மட்டும் தான். இப்படி அடிச்ச பணத்தைதான் இவனுங்க தேர்தலுக்கு இப்படி செலவு பண்ணுறாங்க. பார்க்கலாம் மக்கள் என்ன முடிவெடுக்குறாங்கனு..
கார்த்திகைப் பாண்டியன் said...
அகில இந்திய ரீதில அலசலா? இதுல வட மாநிலத் தலைவர்கள் பற்றி சூசகமா சொல்றீங்க? என்ன பண்ணினாலும் கடைசில ஆப்பு நமக்குத்தான் நண்பா... கொடுக்கிற காசை வாங்கி வச்சிக்கிட்டு உங்களுக்கு பிடிச்ச கட்சிக்கு ஓட்டு போடுங்க நண்பா..
----------------------- இதையே நானும்....!!!
எங்களுக்கு இன்னும் பணம் வரலையே???
ஓட்டுக்குக் காசு வாங்குவது மகா குற்றம். இதை போலிஸ் ஏன் தடுக்கவில்லை?? (அரசியல் பலமே காரணம்)
ஒரு ஓட்டு ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது எனில் அவன் செலுத்தும் வரிப்பணத்தில் ஆயிரம் மட்டும் திரும்புவதாக எண்ணிக் கொள்வோம்... மீதிப் பணத்தை அப்படியே கொள்ளையடிப்பதாகவும் எண்ணிக் கொள்வோம்... மக்கள் மடையர்கள். ஓட்டுக்காக பணம் வாங்குபவர்கள் மகா மடையர்கள்!!!!
அரசியல் எப்போதோ தொழிலாகிவிட்டது.... இப்போதுதான் ஓட்டுக்களை காசு கொடுத்து வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
-----------------------------
உடல்நிலை காரணமாக என்னால் திருச்சி சந்திப்பில் கலந்து கொள்ளமுடியாத சூழ்நிலை.... அனைவரும் என்னை மன்னிக்கவும்!!!!
நீங்க ஓட்டு போட்டுட்டீங்களா? நாங்கள் காலையிலேயே போட்டுவிட்டதால் பிரச்சனை இல்லை. ஆனால் மதியவாக்கில் ஒரே கலவரம். மத்திய சென்னையில் மக்களை வெளிவரவேண்டாம் என போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அலுவலகத்திலிருந்து வரும் போது வெறிச்சோடியிருக்கிறது.
முதலில் ஓட்டு கேட்டுப்பார்த்தார்கள், நம்பிக்கை வரவில்லை.பிறகு கணக்குப் போட்டுப் பார்த்தார்கள், சரியாக இல்லை, பிறகு நீங்கள் சொன்னது போல் காசும் பொருளும் கொடுத்துப் பார்த்தார்கள் அப்படியும் சரியாக வரவில்லை, இப்போது கத்தியும் கட்டையும் பேசிபார்க்கின்றன. பார்ப்போம்.
நல்ல கேள்வி
உதித்த நாள் வாழ்த்துக்கள்..!
பிறந்த நாள் வாழ்த்துகள். [கொஞ்சம் தாமதமாக...]
கார்த்திகைப் பாண்டியன் said
//கொடுக்கிற காசை வாங்கி வச்சிக்கிட்டு உங்களுக்கு பிடிச்ச கட்சிக்கு ஓட்டு போடுங்க நண்பா..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
உழவன் said..
//இப்படி அடிச்ச பணத்தைதான் இவனுங்க தேர்தலுக்கு இப்படி செலவு பண்ணுறாங்க. பார்க்கலாம் மக்கள் என்ன முடிவெடுக்குறாங்கனு..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஆ.முத்துராமலிங்கம்
எங்களுக்கு இன்னும் பணம் வரலையே???
அப்படியா!!!!!!!!!!!
ஏமாந்திட்டீங்களே ஆதவா.
கருத்துக்கு நன்றிங்க சகோதரி உமா
balaji said...
// நல்ல கேள்வி //
முதல் வருகை நன்றிங்க
டக்ளஸ்....... said...
// உதித்த நாள் வாழ்த்துக்கள்..!//
நன்றிங்க நண்பா
உமா said...
பிறந்த நாள் வாழ்த்துகள்.
நன்றிங்க சகோதரி உமா
உண்மையை சும்மா நச்சுனு சொல்லிட்டிங்க
கருத்துக்கு நன்றிங்க சக்கரை
சந்தேகமே இல்லை. இது பணநாயக தேர்தல்தான். ஜனநாயகம் எப்பவோ செத்துப்போய்வி்ட்டது! தங்கள் வலைக்கு இது என் முதல் வருகை. இனி தொடர்வோம். தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! (தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்)
உங்கஅன்பிற்க்கும்,
கருத்துக்கும் நன்றிங்க
பணம் தான் பிரதானம் பாஸ்..
இதுதான் இந்த தேர்தல் சொல்லும் பாடம்..
இனி வரும் ஐந்தாண்டுகாலம் என்ன பாடம் சொல்லப்போகிறது..
தீப்பெட்டி said...
//பணம் தான் பிரதானம் பாஸ்..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
மிகவும் அருமை
Post a Comment