Wednesday, July 29, 2009

பொங்கி வந்தாள் காவேரி


உரிமையென கேட்டும்
கொடுக்கவில்லை

போராடி பார்த்தும்
கிடைக்கவில்லை.

கதறி கேட்டும்
கருனையில்லை

உயிர்பிச்சை வேண்டி
உருகவில்லை

வறன்டது நாக்கு
வற்றியது வயிறு

வேறுவழி தேடி
கரை கடக்கையில்

பொங்கி வந்தாள்- காவேரி
நட்டாற்றில் நாங்கள்


42 comments:

லோகு said...

மழை அதிகமாகி அங்க வெள்ளம் வந்தா மட்டும் தான், காவிரியை அனுப்புவேன்னு அவர் சொன்னார்ல, அப்புறம் எதுக்கு நீங்க மறுபடியும் கேக்கறீங்க..

குடந்தை அன்புமணி said...

நடாற்றில் நாங்கள் எடுத்துவிட்டால் நல்லாருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

// குடந்தை அன்புமணி said...

நடாற்றில் நாங்கள் எடுத்துவிட்டால் நல்லாருக்கும்.//

வழிமொழிகின்றேன் நண்பா....

பொங்கி வந்தாள்- காவேரி
மகிச்சியில் தஞ்சை....

இன்னும் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்...

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசி வரியில் கோபம் தெரிகிறது..

Anbu said...

nalla irukku anna......

ஆர்.வேணுகோபாலன் said...

இயற்கையாகப் பார்த்து அனுப்பினால் தானுண்டு என்கிற நிலை! காவிரி வெள்ளம் போல தங்குதடையின்றி வெளிப்பட்டிருக்கிறது கவிதை! பாராட்டுக்கள்!

வழிப்போக்கன் said...

ஆவேசம் தெரிகிறது...
:)))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லா இருக்கு அண்ணா , சாரி அன்புவோட தாக்கம். நல்ல கவிதை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நானும் கவிதை எழுதுறதா முடிவு பண்ணிட்டேன்,(விதியை யாராலும் மாத்த முடியாது)

சொல்லரசன் said...

//லோகு said...
மழை அதிகமாகி அங்க வெள்ளம் வந்தா மட்டும் தான், காவிரியை அனுப்புவேன்னு அவர் சொன்னார்ல, அப்புறம் எதுக்கு நீங்க மறுபடியும் கேக்கறீங்க..//

இது அவ‌ரு அனுப்ப‌வில்லை இய‌ற்க்கை அனுப்பிய‌து.

சொல்லரசன் said...

குடந்தை அன்புமணி said...
நடாற்றில் நாங்கள் எடுத்துவிட்டால் நல்லாருக்கும்.

சூன் மாத‌ம் த‌ண்ணீர் இல்லாதால் மேட்டூர் அனைக்கு மேலுள்ளநீர் பிடிப்பு பகுதிகளில் விவ‌சாய‌ செய்ய‌த‌ந‌ண்ப‌ர் ஒருவ‌ரின் ஆத‌ங்க‌ம்

சொல்லரசன் said...

//ஆ.ஞானசேகரன் said...
பொங்கி வந்தாள்- காவேரி
மகிச்சியில் தஞ்சை....
இன்னும் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்...//

இதுவும் ந‌ன்றாக‌ இருக்கிற‌து,அன்பும‌னிக்கு நான் இட்ட‌ ப‌தில் பின்னுட்ட‌த்தை
பார்த்தால் என‌து பார்வை புரியும்

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
கடைசி வரியில் கோபம் தெரிகிறது..

க‌ருத்துக்கு ந‌ன்றிங்க‌ கா.பா,

சொல்லரசன் said...

Anbu said...
nalla irukku anna......


ந‌ன்றி அன்பு

சொல்லரசன் said...

//தமிழன் வேணு said...
இயற்கையாகப் பார்த்து அனுப்பினால் தானுண்டு என்கிற நிலை! காவிரி வெள்ளம் போல தங்குதடையின்றி வெளிப்பட்டிருக்கிறது கவிதை! பாராட்டுக்கள்!//

க‌ருத்துக்கும் வ‌ருகைக்கும் ந‌ன்றிங்க‌

சொல்லரசன் said...

வழிப்போக்கன் said...
ஆவேசம் தெரிகிறது...
:)))

குறைத்து விடுவோம்

சொல்லரசன் said...

//ஸ்ரீ said...
நானும் கவிதை எழுதுறதா முடிவு பண்ணிட்டேன்,(விதியை யாராலும் மாத்த முடியாது)//

எனக்கு தோன்றியதை எழுதினேன் நண்பா,ஆனால் கவிதை என்று நான் சொல்லவில்லை உங்க‌ முடிவை வ‌ர‌வேற்கிறேன்

ஆ.சுதா said...

நல்லா இருக்கு.

கடைசி வரியில்தானே கவிதை இருக்கின்றது நண்பரே (அன்புமணி)

தேவன் மாயம் said...

பொங்கி வந்தாள்- காவேரி
நடாற்றில் நாங்கள் ///

நடக்கின்ற கதையை சொன்னவிதம் அருமை!!

சொல்லரசன் said...
This comment has been removed by the author.
சொல்லரசன் said...

கருத்துக்கு நன்றிங்க டாக்டர்

சொல்லரசன் said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நல்லா இருக்கு.

கடைசி வரியில்தானே கவிதை இருக்கின்றது நண்பரே (அன்புமணி)//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க கவிஞரே

உமா said...

சொல்லரசன் மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

சொல்லரசன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க உமா.

"உழவன்" "Uzhavan" said...

நடாற்றிலா அல்லது நட்டாற்றிலா?

தேவையான நேரத்தில் எது கிடைக்காமல் போனாலும் அது இழப்பே. அதனால் ஒரு நன்மையும் இல்லை. நல்ல வரிகள் நண்பா!

அகரம் அமுதா said...

அள்ளும் தமிழின் அழகால், மிகுநகையா(ல்)
எள்ளும் வகையாலிங் கெண்ணற்றோர் -உள்ளத்தைச்
சொல்லரசன் சொல்லும் சுவைமிகும் தீங்கவியால்
வெல்லரசன் என்பேன் வியந்து!



குறிப்பு:-

"நடாற்றில்" அல்ல அல்ல -நட்டாற்றில்

சொல்லரசன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா,திருத்திவிட்டேன் தவறை.

சொல்லரசன் said...

வாருங்கள் வெண்பா ஆசிரியரே,உங்க கவிதை கருத்துக்கு நன்றி,
எழுத்துபிழைக்கு பொருத்தருளுக.

அகரம் அமுதா said...

பொறுத்தேன், பொறுத்தேன். வாழ்க வளமுடன்!

குறை ஒன்றும் இல்லை !!! said...

அகன்ற ஆறு
ஓடத்திற்கு பதில்
செருப்பு !!!!

ஹேமா said...

கவிதை நல்லாயிருக்கு.
அரசியல் கோபமா?

Unknown said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
//அகன்ற ஆறு
ஓடத்திற்கு பதில்
செருப்பு !!!!

புரியவில்லை,//


ஹேமா said...
//கவிதை நல்லாயிருக்கு.
அரசியல் கோபமா?//

கருத்துக்கும் வருகைக்கு நன்றிங்க‌

August 2, 2009 4:19 AM

சுந்தர் said...

வாழ்த்துக்கள் கவிஞரே!

சுசி said...

நல்ல கவிதை சொல்லரசன்.

சொல்லரசன் said...

//நல்ல கவிதை சொல்லரசன்//

வருகைக்கு நன்றிங்க சுசி


//வாழ்த்துக்கள் கவிஞரே!//
இதில் ஏதும் குத்துஇல்லையே சுந்தர்

உமா said...

திரு. சொல்லரசன், என்ன சில நாட்களாய் தங்களைக்காணவில்லை. சற்று என் வலைப்பக்கம் வந்து தொடர் இடுக்கையைத் தொடருங்ளேன்.

அன்புடன் உமா.

குடந்தை அன்புமணி said...

சில வலைத்தளத்தை சில பிரவுசர்களில் படிக்க முடியாமல் இருக்கும். இதன்லேயே பல வலைத்தளங்களுக்கு சென்றுவிட்டு படிக்க முடியாததால் திரும்பி இருக்கிறேன். இதற்கு தீர்வு எதுவும் உண்டா?
இது உங்களுக்கான பதிவு. thagavalmalar.blogspot.com வலைத்தளத்திற்கு வரவும்.

ஜோதிஜி said...

ஒரு வேளை வெட்டு ஒன்று துண்டு ஒன்று பேசி நட்டாத்தில் தவிக்க விடாமல் அடுத்த முறை அதிகார வர்க்கத்திடம் பேசாமல் உங்கள் வார்த்தைகளுக்குள் அடங்கி பிரவாகம் செய்த அந்த காவேரித் தாயிடம் ஒரு கருணை மகஜர் அளித்துப் பார்க்கலாமா?


தேவியர் இல்லம். திருப்பூர்.

ஜோதிஜி said...

ஒரு வேளை வெட்டு ஒன்று துண்டு ஒன்று பேசி நட்டாத்தில் தவிக்க விடாமல் அடுத்த முறை அதிகார வர்க்கத்திடம் பேசாமல் உங்கள் வார்த்தைகளுக்குள் அடங்கி பிரவாகம் செய்த அந்த காவேரித் தாயிடம் ஒரு கருணை மகஜர் அளித்துப் பார்க்கலாமா?


தேவியர் இல்லம். திருப்பூர்.

Several tips said...

கவிதை அருமை. மனம் தான் வருந்துகிறது.

ஹேமா said...

மனதின் வேதனை வரிகள் கடைசியில்.

தமிழ் அஞ்சல் said...

அவளா பொங்கி வர்றதெல்லாம் ரைட்டு பாஸ் ...நாமளும் அணையை கினைய கட்டி யூஸ் பண்ணனும்ல..அதான் பொங்கி வர்ற வேகத்துல கடலுக்கே போயிடுறா...

நல்ல கவிதை!பாராட்டுக்கள் !