Tuesday, August 24, 2010

யார் பிச்சைகார‌ன்?

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.நேற்று நண்பர் சிங்கை ஞாணசேகரன் அலைபேசியில் என்னை தொடர்புகொண்டு ஏன் பதிவுபோடுவது இல்லை?ஏதாவது எழுதுங்கள் என்றார் எதைபற்றி எழுதுவது எனயோசிக்கையில் ஞாயிறுயன்றுநடந்த சம்பவத்தை பதிவாக போடலாம் என்று தொடர்கிறேன்

இரண்டு மாதத்திற்கு முன்புபுதியதாக வீடுகட்டியிருந்த ஆயத்தஆடை நிறுவன‌ நண்பர் வீட்டுக்கு ஞாயிறுயன்று சென்றுயிருந்தேன்.அந்த வீட்டிற்கு முதல்முறையாக செல்வதால் வீட்டை சுற்றிகாட்டினார்.அப்போது வரவேற்பறையில் சோனி தொலைகாட்சி பெட்டியும், குழந்தைகளுக்கான அறைகளில் இரண்டு கலைஞர் அரசு தொலைகாட்சி பெட்டியும் இருப்பதை பார்த்தேன்.உங்களுக்கும் கலைஞர் தொலைகாட்சி பெட்டி கொடுத்தார்களா என கேட்டதற்கு, கிராமத்தில் அம்மாவுக்குஉள்ள ரேசன்கார்டுக்கும்,இங்க எங்களுக்கு உள்ள ரேசன்கார்டுக்கு டோக்கன்வாங்கியிருந்தேன் அதற்கு இரண்டு மாததிற்கு முன்பு கொடுத்தார்கள்என்றார்.

அப்போது வாசலில் சுமார் 50 வயதுமதிக்கதக்க பிச்சைகாரன் ஒருவன் பிச்சை கேட்டுகுரல் கொடுத்துகொண்டுயிருந்தான். தொந்தரவு தாங்காத நண்பர் அவனிடம் யோவ் நல்லதானே இருக்கே வேலைக்கு போகவேண்டியதுதானே என சத்தம்போட்டபின் அவன்சென்றுவிட்டான்,அதன்பின் தொழில்சம்மந்தமாக கொஞ்ச‌நேரம் பேசிவிட்டு கிளம்பிவிட்டேன்.வருடத்திற் இரண்டு கோடிக்கு ஆர்டர் செய்யும் அவர் இலவசத்தை விட மனம்யில்லாமல் வாங்கி கொண்டு,அந்த பிச்சைகாரனிடம் சத்தம் போட்ட முரன்பாடு என‌க்கு நெருடியது.அதன்விளைவாக மனதில் தோன்றி நாலுவரி

அய்யாயாயா.........
சாமீமீ.........
பிச்சைபோடுங்க
வாசலில் பிச்சைகாரன்.

ஊனம் ஏதும் இல்லையே
உழைத்து சாப்பிடு
விரட்டியடித்தேன் வீதிக்கு


இல‌வ‌ச‌ தொலைகாட்சி பெற‌
முட்டிமோதி சென்று
வ‌ரிசையில் நின்றேன்
பஞ்சாய‌த்து அலுவ‌ல‌க‌ வாச‌லில்

எங்கிருந்தோ வ‌ந்தொருவ‌ன்
நெட்டித்த‌ள்ள‌ விழுந்தேன் வீதியில்
கைபிடித்து துக்கிவிட்டான்
விர‌ட்டிய‌டித்த‌ பிச்சைகார‌ன்
மெல்ல‌ சிரித்து கேட்டான்
ஏஞ்சாமீ உழைத்து வாங்க‌வேண்டிய‌துதானே!


இதுபோல் இலவசமின்மோட்டார் திட்டத்திலும் நடக்காமல் மோட்டார் இல்லாதவிவாசயிகளுக்கு,மின்மோட்டார் வழங்கவேண்டியது அரசின் கடமை.அதில் தவறுயிருந்தால் கண்டிக்கவேண்டியது யார் கடமை?

29 comments:

சுசி said...

யார் கடமை??

priyamudanprabu said...

nice post

Anbu said...

நல்ல பதிவு அண்ணே..

வேணும்னா இதைப்பற்றி ஒரு படம் எடுக்க சொல்லலாம்..ஏனென்றால், பல பரதேசி படங்களை பார்த்து கெட்டுப்போகும் நம் மக்கள், ஒரு நல்ல நட(டி)க்கும் நடிகனின் சினிமாவை பார்த்து திருந்துவாங்க இல்லையா.?

Unknown said...

//.. யார் கடமை?? ..//

நல்லா கேக்குராங்கையா டீடைலு..

☼ வெயிலான் said...

நீண்ட....... நாட்களுக்குப் பின் பதிவு.

மகிழ்ச்சி! தொடருங்கள்.

"உழவன்" "Uzhavan" said...

கவிதை அருமை தலைவா

நிகழ்காலத்தில்... said...

இலவசமாக வருவதை மறுக்கும் மனப்பக்குவம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காது :)

பிச்சைக்காரனை விரட்டியதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன்:)

வாழ்த்துகள் சொல்லரசன்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல, நியாயமான இடுகைண்ணே..:-))

@அன்பு..

கேட்ட கேள்விக்கு உன்னுடைய தளத்துல பதில் சொல்லாம இங்க வந்து அரசியல் பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்..:-))

சொல்லரசன் said...

சுசி said...
யார் கடமை??

என‌க்கு கேள்வி ம‌ட்டும்தான் கேட்க‌தெரியும் ப‌தில் சொல்ல‌தெரியாது.
ந‌ன்றிங்க‌ சுசி

சொல்லரசன் said...

பிரியமுடன் பிரபு said...
nice post

ந‌ன்றிங்க‌

சொல்லரசன் said...

//Anbu said...
நல்ல பதிவு அண்ணே..

வேணும்னா இதைப்பற்றி ஒரு படம் எடுக்க சொல்லலாம்..ஏனென்றால், பல பரதேசி படங்களை பார்த்து கெட்டுப்போகும் நம் மக்கள், ஒரு நல்ல நட(டி)க்கும் நடிகனின் சினிமாவை பார்த்து திருந்துவாங்க இல்லையா.?//

த‌ம்பி வ‌ழிமாறி வ‌ந்திட்ட‌ன்னு நினைக்கிறேன்,புரிய‌லையே

சொல்லரசன் said...

திருஞானசம்பத்.மா. said...
//.. யார் கடமை?? ..

நல்லா கேக்குராங்கையா டீடைலு..//

க‌ருத்துக்கு ந‌ன்றி

சொல்லரசன் said...

☼ வெயிலான் said...
//நீண்ட....... நாட்களுக்குப் பின் பதிவு.

மகிழ்ச்சி! தொடருங்கள்.//

ந‌ன்றிங்க‌, க‌ருனாநிதியிட‌ம் சொல்லுங்க‌ள்,த‌லைவ‌ரே நான் சொன்ன‌து உங்க‌ அலுவ‌ல‌க‌ க‌ருனாநிதியிட‌ம்

சொல்லரசன் said...

நிகழ்காலத்தில்... said...
//இலவசமாக வருவதை மறுக்கும் மனப்பக்குவம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காது :)//

அப்ப‌டியான‌ல் அர‌சு ப‌ண‌த்தில் இலவசமாக சொத்துசேர்க்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளை எதிர்க்கும் ம‌ன‌ப்ப‌க்கும் அவர்க‌ளிட‌ம் இருக்காது

//பிச்சைக்காரனை விரட்டியதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன்:)//
அந்த‌ சுழ்நிலையில் அந்த‌ பெரிய‌வ‌ரை பார்த்த‌போது அது த‌வ‌றாக‌ என‌க்குப‌ட்ட‌து

சொல்லரசன் said...

"உழவன்" "Uzhavan" said...
//கவிதை அருமை தலைவா//

ந‌ன்றிங்க‌ ந‌ண்பா

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
//நல்ல, நியாயமான இடுகைண்ணே..:‍))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கா.பா

உமா said...

பிறருடைய குற்றங்களை காணும் நம் கண்ணுக்கு நம் குற்றங்கள் தெரிவதில்லை என்பது உண்மைதான்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

சொல்லரசன் said...

// உமா said...
பிறருடைய குற்றங்களை காணும் நம் கண்ணுக்கு நம் குற்றங்கள் தெரிவதில்லை என்பது உண்மைதான்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.//

கருத்துக்கு நன்றிங்க‌

Unknown said...

திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.

அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..

அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

அமைதி அப்பா said...

சிந்தனையைத் தூண்டும் நல்ல பதிவு.

aanandam said...

oru kallil pala maangaaigal.purinthukondaal sari.

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

KANALI said...

நாமும் பிச்சைக்காரானுக்கும்,பிச்சைக்காரன் நமக்கும் அறிவுரை வழங்குவதில் வல்லவர்கள்தான்.ஆனால் அரசிடம் இலவசம் வேண்டாம் என்று நாம் சொன்னதில்லை.அரசும் இலவசத்தை கொடுத்து யோசிக்கவிடமல் வைத்திருப்பதில் வல்லவர்கள்தான்.


நல்ல பதிவு நண்பரே. வாழ்த்துக்கள்

Vetrinilavan said...

A beggar is 100% good citizen. He neither receives nor give bribe. This particular beggar has not given bribe to get a ration card. Some beggars got ration card and they give it to middle-class beggars for money!

ramalingams said...

கேவலமான பிழைப்பு இலவசங்கள் பிச்சைக்கு சமம்

Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Vignesh said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
GST Tax Consultant in Chennai
GST Tax Consultant in Chennai Sales Tax
GST Tax Consultant in TNagar
GST Tax Consultants in Chennai
GST Tax Filing Auditors in Chennai
GST Tax Filing in Chennai
GST Tax returns Consultant in Bangalore
GST Tax returns Consultant in Chennai
GST Tax returns Consultant in TNagar
Import Export code registration Consultant in Chennai

Vignesh said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Luxurious hotel in chennai | Budget Hotels in Chennai | Centrally Located Hotels in Chennai |Hotels near Shankarnetralaya | Boutique Hotels in Chennai | Hudson Lounge Bar|Chennai Bars and Lounges | PubsinChennai | Hotel reservation chennai

Vignesh said...

I would highly appreciate if you guide me through this.
Thanks for the article…
Best Digital Marketing Agency in Chennai
Best SEO Services in Chennai
seo specialist companies in chennai
Brand makers in chennai
Expert logo designers of chennai
Best seo analytics in chennai
leading digital marketing agencies in chennai
Best SEO Services in Chennai