Wednesday, March 18, 2009

இந்திய பொருளாதாரம் சுவிஸ் வங்கியில்


கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து திரும்ப கொண்டுவருவோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டசெய்திவரவேற்கதக்கது.

சுவிஸ் வங்கியில் இந்தியாவின் கருப்பு பணம் (கொஞ்சம்தானுங்க)1.4 ட்ரிலியன்டாலர் இந்திய மதிப்பில் சுமார் 70 இலட்சம் கோடிடிடிடிடிடிடி இது உலக கருப்புபணத்தில் 56 சதவீதம் என்று,இண்டியன் இண்ஸ்டிட்டியூட் ஆப் பைனாஸ்சில் கடந்த மே மாதம் போராசிரியர் சுமன் அகர்வால் தாக்கல் செய்தபொருளாதார ஆய்வறிக்கையில்தெரிகிறது.

இது இந்தியாவின் கடன் தொகையைவிட பதின்முன்று மடங்கு அதிகம்.நம் நாட்டின் பணம் சுவிஸ் வங்கியில்இருக்கையில்,நாம் உலக வங்கியிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம்.அந்தபணம் இந்தியாவிற்கு கொண்டு வந்து (முடியாது என நீங்கள் சொல்லறது எனக்குகேட்குதுங்க)உலக நாடுகளுக்குகடன் கொடுத்து அதில் வரும் வட்டியில் நம் நாட்டிற்கு வரியில்லா பட்ஜெட்போடலாம்.இல்லையெனில் சுமார் 50 கோடி ஏழைமக்களுக்கு பிரித்துகொடுத்தால் நல்லயிருக்குங்கோ.(இதுக்கும் டோக்கன் கொடுத்துகாசுபார்க்காதீங்க பிறப்புகளா)

எனக்குள் ஒரு கேள்வி கடந்த 2008 பிப்ரவரி மாதத்தில் ஜெர்மனியின்புலனாய்வுதுறை பி.என்.டி அமைப்பு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அருகில்யுள்ளலீச்டென்ஸ்டின் நாட்டில் உள்ள எல்.டி.ஜி வங்கியில் வாடிக்கையாளர் தகவலைசேகரித்து பணத்தை மீட்டு சென்றபோது.அப்போது அந்த வங்கி இதுபோல்இந்தியா கேட்டால் அவர்கள் நாட்டின் வாடிக்கையாளர் விபரமும் பணத்தையும் கொடுக்கதயார் என்று கூறியபோது எங்கே இருந்தார்கள் இவர்கள்?

இதுகுறித்து ட்ரான்ஃபரன்ஸீ இண்டர்நேசன் அமைப்பின் இந்திய தலைவர் அட்மிரல்தஹிலியானி இந்தியாவிற்கு சொந்தம் ஆன பணத்தை வாங்கிகொடுக்க இந்தியஅரசு மறப்பது ஏன்? என்று கேட்டபோது என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்.இந்த கருப்பு பணம் முதலை வாய்க்குள் போனது என்பதுஎங்களுக்கு தெரியும்.இதில் (சுமார் 50 சதவீதத்திற்கு மேலுள்ள ஊழல்பணம்)எல்லா அரசியில்வாதிகளுக்கும்,மற்ற கருப்பு பணம்சினிமாநடிகர்களுக்கும்,பெரும் தொழிலதிபர்களுக்கும்,கிரிகெட் வீரர்களுக்கும்சொந்தம்.அது மட்டும்யின்றி 1934 ஆம் ஆண்டு சுவிட்ச்ர்லாந்து நாட்டு வங்கிதொடர்பான சட்டபடி அந்த நாடே சுவிஸ் வங்கியில் விபரம் கோரமுடியாதுஎன்று கேள்விபட்டுயுள்ளோம்.அதையும் மீறி கருப்பு பணத்தை இந்தியாவிற்குகொண்டுவந்தால்,இந்தியாவின் சரசாரி வருமானம் பெருகி மக்கள் வளமான இந்தியர்களாக இருப்பர்கள்.எனவே நீங்கள் ஆட்சியமைத்தாலும் அமைக்காவிட்டாலும் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள கருப்பு பண விவரம் தொடருமா?
குறைந்தபட்சம் பெயர்பட்டியில்லாவது வெளியிடமுயற்சி செய்வீர்களா?

35 comments:

Babu (பாபு நடராஜன்} said...

auto coming

ஆதவா said...

யப்பா... சுவிஸில் இவ்வளவு பணம் இருக்கா./.... அட மக்கா!

இந்த புள்ளிவிபரங்களைப் பார்த்தாலே தலை சுத்துதே!!!

சொல்லரசன் said...

babu said...

// auto coming//

லாரியே பார்த்தவன் நான்,இதுக்கு எல்லாம் பயந்தால்......

சொல்லரசன் said...

நன்றி ஆதவா, இதில் 0.001 சதவீதம் கிடைத்தால் நீங்கள் எங்கே சுற்றுவீர்கள்

ரவி said...

யம்மாமாமாடியோவ்

சொல்லரசன் said...

செந்தழல் ரவி said...

// யம்மாமாமாடியோவ்//
முதன்முதலாக வந்து இருக்கிங்கோ சோடா வேண்டுமா?

Anonymous said...

1.4 ட்ரிலியன்டாலர்
//
இது ரொம்பவே கொஞ்சம்தான்.....

சொல்லரசன் said...

நம் அரசியல்வாதிக்கு இது கொஞ்சம் குறைவுதானுங்கோ

கார்த்திகைப் பாண்டியன் said...

என்னப்பா இது.. பயங்கரமான புள்ளி விவரமெல்லாம் அடிபடுது..

//கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து திரும்ப கொண்டுவருவோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டசெய்திவரவேற்கதக்கது.//

இவங்கெல்லாம் சும்மா உதார் தான் விடுவாங்க நண்பா.. ஒண்ணும் நடக்காது..

ஆ.ஞானசேகரன் said...

//கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து திரும்ப கொண்டுவருவோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டசெய்திவரவேற்கதக்கது//

முடியுர காரியமா இது?...

Unknown said...

கார்த்திகைப் பாண்டியன் said...

// இவங்கெல்லாம் சும்மா உதார் தான் விடுவாங்க நண்பா.. ஒண்ணும் நடக்காது..//

மக்கள் புரிந்துகொண்டால் போதும் நண்பரே.

சொல்லரசன் said...

ஆ.ஞானசேகரன் said...

// முடியுர காரியமா இது?...//

முடியாது என்பதே எனது
கருத்து.ஆனால் பெயர் பட்டியில்லாவ்து வெளிவரவேண்டும்.

மாசிலா said...

இதுபோல் இந்திய பணங்களை ஸ்விஸ் வங்கிகளில் போட்டு தன் தாய்நாட்டை காயப்போடுகிறவர்கள் இந்தியாவின் முதல் எதிரிகளே.

கடின வேலை செய்பவர்களுக்கு சரியான சம்பளம் தருவதில்லை, கடனை திருப்பி கொடுக்க வசதியில்லாதவர்களிடம் பெரிய தொகைகளை கொடுத்து பிறகு அவர்களை வாழ்நாள் அடிமைகளாக்கி இரத்தத்தை கடைசி சொட்டுவரை உறிந்து குடிப்பது, ஊழல், இலஞ்சம், அடாவடி போன்ற அநியாய செயல்களால் சம்பாதித்த பணத்தை இப்படி அந்நிய வங்கிகளில் போட்டு அந்த நாடு முன்னேறுவதற்கு வழிவகைகள் செய்வது என போன்ற தேசக் குற்றத்திற்காக இவர்களை ஸ்விஸிற்கே நாடு கடத்தவேண்டும்.

அணுவிசை எரிபொருளுக்காக அமெரிக்காவை நம்பி இருக்கும் இந்தியா; தேசிய முன்னேற்றத்திற்கு அவசியமான அகலபாதை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள், புதிய விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற துறைகள் மற்றும் ஏனைய கட்டுமான பணிகள், கிராமங்களின் நிலமை ஆகியவைகளில் பின்தங்கியிருக்கும் இந்தியா; விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பின் தங்கியிருக்கும் இந்தியா; பாக்கிஸ்தான், சீனா, இலங்கை போன்ற நாடுகளினால் ஏற்பட்டிருக்கும் ஆபத்துகளில் சிக்கித்தவிக்கும் இந்தியாவிற்கு இந்த தொகைகள் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்து மக்கள் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வல்லமை படைத்த புதிய இந்தியாவாக மாற்றவும் இந்த தொகைகள் பெரும் வழிவகைகளை செய்ய்யும்.

இதை புரிந்துகொள்வார்களா இந்த படும்பாதகர்கள்?

Unknown said...

மாசிலா said...

//இதுபோல் இந்திய பணங்களை ஸ்விஸ் வங்கிகளில் போட்டு தன் தாய்நாட்டை காயப்போடுகிறவர்கள் இந்தியாவின் முதல் எதிரிகளே.//

உங்கள் குமறல் சரியே

//இதை புரிந்துகொள்வார்களா இந்த படும்பாதகர்கள்?//

அவர்களுக்கு மக்கள் புரிய வைக்கவேண்டும்

உமா said...

மக்கள் எப்படி பாடம் கற்பிப்பது.தேர்தல் மூலமா? முடியுமா? ஒருவர் போனால் வருபவரும் அதே வகைதானே.ஆளும் கட்சியானால் அதிக பணம்,எதிர்கட்சியானால் கொஞ்சம் கம்மி அவ்வளவுதான். சட்டம் போட்டாலும் ஓட்டைகளை கண்டுபிடித்து ஓடிவிடுபவர்கள்.கருப்புச் சட்டைகளும் காக்கிச் சட்டைகளுமே இப்படி சுயநலமாய் நடந்துக்கொண்டால் ஏழைசனங்கள் எப்படி எதிர்ப்பது. கிடைப்பது லாபம் என் காசு வாங்கி அதையே தொழிலாக்கிக் கொள்வார்கள். திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

//இது இந்தியாவின் கடன் தொகையைவிட பதின்முன்று மடங்கு அதிகம்.// இது வேதனை தான்.

சொல்லரசன் said...

உமா said...

//திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.//

ஆனால் திருடனை பார்த்தபின் தண்டிக்காமல் இருப்பது குற்றமே.வருகைக்கு கருத்துக்கும் நன்றிங்க‌

ஆதவா said...

///நன்றி ஆதவா, இதில் 0.001 சதவீதம் கிடைத்தால் நீங்கள் எங்கே சுற்றுவீர்கள்///

வேறெங்கே.... ரஷ்யாதான்.... ஹி ஹி

*இயற்கை ராஜி* said...

1.4 ட்ரிலியன்டாலர் //

adengappa...namakku therinchachu murugan dollar..ayyappan dollar thanugkoovvv....

ராம்.CM said...

புள்ளிவிபரங்கள் எங்கே கிடைத்தது. நம்மாளுங்களுக்கு இதெல்லாம் காணாதுங்கோ....

லோகு said...

சுவிஸ் வங்கி அப்படிங்கறது எங்க இருக்கு.. அதற்கு கிளைகள் இல்லையா.. அதில் பணம் போடும் நபர்கள் அங்கு சென்று தான் போட முடியுமா.. இங்கிருந்தே செலுத்தி விட முடியுமா.. அந்த வங்கியில் பணம் செலுத்துவதை / எடுப்பதை நமது அரசு தடை செய்ய முடியாதா?

*****

அப்புறம் என் பிளாக் பக்கம் ஒரு நடை வந்துட்டு போங்கோ..
நானும் திருப்பூரில் தான் இருக்கேன்..

நிகழ்காலத்தில்... said...

\\நம் அரசியல்வாதிக்கு இது கொஞ்சம் குறைவுதானுங்கோ\\

சரியான கணிப்பு...

சொல்லரசன் said...

ஆதவா said...

///நன்றி ஆதவா, இதில் 0.001 சதவீதம் கிடைத்தால் நீங்கள் எங்கே சுற்றுவீர்கள்///

// வேறெங்கே.... ரஷ்யாதான்.... ஹி ஹி//

நினைச்சேன் அங்குதான் போவீர்கள் என்று.

சொல்லரசன் said...

ராம்.CM said...

//புள்ளிவிபரங்கள் எங்கே கிடைத்தது. நம்மாளுங்களுக்கு இதெல்லாம் காணாதுங்கோ....//

எல்லாம் உங்களை போன்ற நண்பர்கள் கொடுப்பதுதான்

சொல்லரசன் said...

லோகு said...

சுவிஸ் வங்கி அப்படிங்கறது எங்க இருக்கு.. அதற்கு கிளைகள் இல்லையா.. அதில் பணம் போடும் நபர்கள் அங்கு சென்று தான் போட முடியுமா.. இங்கிருந்தே செலுத்தி விட முடியுமா.. அந்த வங்கியில் பணம் செலுத்துவதை / எடுப்பதை நமது அரசு தடை செய்ய முடியாதா?


இத எல்லாம் ரகசியம்,இங்கதானுங்க இருக்கிங்க உங்களுக்கு மட்டும் தனியா
சொல்கிறேன்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ.

சொல்லரசன் said...

அறிவே தெய்வம் said...

\\நம் அரசியல்வாதிக்கு இது கொஞ்சம் குறைவுதானுங்கோ\\

//சரியான கணிப்பு...//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நண்பரே.

சொல்லரசன் said...

இய‌ற்கை said...
adengappa...namakku therinchachu murugan dollar..ayyappan dollar thanugkoovvv....
டாலர் சிட்டிக்கு பக்கத்துல இருந்துட்டு இப்படியல்லாம் பேசதீங்கோ

பொன்.பாரதிராஜா said...

சொல்லு!!!!!பதிவுகள் ரொம்ப கம்மியா இருக்கே?

சொல்லரசன் said...

லொள்ளு!!!!பதிவு போட்ட உங்க கடைக்கே ஆதரவு இல்லாதபோது,நம் பதிவ யார் பார்க்கபோறங்க அப்படின்னு அசால்ட்டுதானுங்க.

மேவி... said...

hmmmmmmmmmmm

மேவி... said...

mne th 30

சொல்லரசன் said...

நன்றிங்க மேவி

அகநாழிகை said...

சொல்லரசன், வணக்கம்.
அலைபேசியில் பேசிய பிறகு உங்கள் பதிவுகளை முழுமையாக இன்றுதான் படித்து முடித்தேன். கதம்பமான ஒரு தொகுப்பினை பார்த்த அனுபவம் ஏற்பட்டது. பல்வேறு நிகழ்வுகள், பன்முகச் சிந்தனைகள் என உங்கள் பதிவுகள் பலவும் என்னை கவர்ந்தன. ‘நட்பு என்பது‘ இன்னும் அதிகமாக எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். கலாச்சார சீரழிவு, பொருளாதாரம் என சமுகம் சார்ந்த உங்களது சிந்தனைகள் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாய்ப்பிருந்தால் நேரில் சந்திப்போம். நேரம் கிடைத்தால் அலைபேசி உரையாடலாம். நன்றி.
இனி உங்கள் பக்கங்களில் தொடர்ந்து வாசிக்கிறேன்.

- பொன். வாசுதேவன்

சொல்லரசன் said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
விரைவில் சந்திப்போம் நண்பரே.

"உழவன்" "Uzhavan" said...

இப்பொழுதுதான் நண்பா இப்பதிவைப் படிக்க நேர்ந்தது. நல்ல பதிவில் நல்ல கேள்வியும் கேட்டுள்ளீர்கள்.
கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கியிலிருந்து வெளிக்கொணர்வதென்பது சற்றுக் கூடுதல் கடினம்தான். இந்திய அரசு கேட்டால், நாங்கள் அவர்கள் நாட்டின் வாடிக்கையாளர் விபரமும் பணத்தையும் கொடுக்கதயார் என்று சுவிஸ் சொல்லக்காரணமே, அமைச்சரவையில் இருக்கும் எந்த இந்தியனுக்கும் கேட்கக்கூடிய தகுதி இல்லை என்பதைத் தெரிந்து கொண்டுதான் அவர்கள் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் பணமும் அங்கே இருக்கிறது.

ஆனால், சமீப காலங்களில்தான் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தைப் பற்றிய பேச்சுக்கள் இடம்பெறுகிறது.இதுவே ஒருவகையில் நல்ல ஆரம்பம்தான். இதுபோன்ற கேள்விகள் மக்களிடமிருந்து அலையாய் அரசியல் கட்சிகளை நோக்கி அடிக்க ஆரம்பித்து விட்டாலே, கருப்புப் பணமுதலைகளுக்கு சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் போட தயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒருவேளை சுவிஸ் நாட்டு வங்கிகளுக்கான சட்டங்கள் மாற்றப்பட்டு, அந்நாடு தானாகவே அனைத்து நாட்டின் வாடிக்கையாளர் விபரத்தையும், பணத்தையும் அறிவிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.(கொஞ்சம் அதிகப்படியான ஆசைதான்) அப்படி அறிவிக்கும்போது, நம்மவர்கள் இது என் பணமே இல்லை என்று சொல்லக்கூட தயங்கமாட்டார்கள்.

கருப்புப் பணம் வெளியே வந்தால், இந்தியாவில் ஏழைகளே இல்லை. கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு... ம்ம்..ம்ம்.. பார்க்கலாம் :-)

Unknown said...

please Take Action Immediately .
This is Develope for day by day) Every Poor and Middle class Peoples are don't have a Swiss Bank Account But Every Swiss Bank Account Holder is High and Rich Peoples (Like Politician,Businessman,Cricket Players) "Vande Mataram"