Wednesday, April 15, 2009

"விரோதி"க்கு வந்த சோதனை

நேற்றுவந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கு பதில் வாழ்த்து சொல்லாமா, வேண்டாமா, என்று எனக்கு ஒரே குழப்பமாகயுள்ளது.

ஏற்கெனவே தைமுதல் நாள்தான் தமிழ்புத்தாண்டு என்றுவாழ்த்துகூறிய திராவிட நண்பர்களிடைய சித்திரையில்தானே தமிழ்புத்தாண்டு என சொல்ல,அவர்கள் எங்கதலைவ்ர் உலகதமிழறிஞர்களைகலந்து தை திங்கள்தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட‌வேண்டும் என்று சட்டம் போட்டது தெரியதா? உலகமே ஏற்றுகொண்டு உள்ளது, உனக்கு என்னடா அப்படின் கேட்க,எதுக்குடா வம்பு நாமும் வாழ்த்து சொல்லிவிட வேண்டியதுதானுன். எல்லோருக்கு வாழ்த்து சொல்லிகொண்டாடிய முன்று மாதத்திற்குள்.

மறுபடியும் நேற்று பதிவுலக நண்பர்களின் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளின் குறுஅஞ்சலை பார்த்தவுடன் ஒரேவருடத்தில் இரண்டுதமிழ்புத்தாண்டா? கொஞ்சம் குழப்பமாகதான் உள்ளது.இது பற்றி இன்று வாழ்த்து அனுப்பிய நண்பரும் ஆண்மிகத்திலும் சாஸ்திரத்திலும் அதீத நம்பிக்கை உள்ள வங்கியில் பனியாற்றுபவரிடம்,இதைதான் தைமாதத்தில் கொண்டாட சொல்லி சட்டம் போட்டு,நண்பர்கள் சொல்ல நானும் கொண்டாடிவிட்டேனே என்று சொல்ல, அவருக்கு என்மேல் எத்தனை வருட கோபமோ தெரியவில்லை மனுசன் ஒரு காய்ச்சி காயத்து விட்டார்.நீ எப்ப அந்தகூட்டத்திலிருந்து வெளியேவருவீயோ,அப்பதான்டா உருப்படுவே அப்படின்னு சாபமே கொடுத்துட்டார்.பிரச்சனை வந்தா முன்னாடி நிக்கற பிறப்புகளையும், தோழர்களை விட்டு எப்படிங்க வெளியவரமுடியும்.நீங்க இதற்கு விளக்கம் சொல்லுங்கோனுன் கேட்க.

பத்து பேர்சேர்ந்து கூட்டம் போட்டு சட்டம் கொண்டுவந்தால் சரித்திரம் மாறிவிடுமோ!
அப்படின்னா ஒரு சட்டம் போட்டு ஈழத்து பிரச்சனையை ஏன் தீர்க்க‌முடியல,தமிழகத்தில் உள்ள லஞ்சத்தையும்,வறுமையும் சட்டம் போட்டு ஒழிக்கவேண்டியதுதானே.............

நான் குறுக்கிட்டு அய்யா சாமி புத்தாண்டு எப்பகொண்டாடலாம் அதை சொல்லு முதல்ல........

அததான்டா சொல்லவருகிறேன் என்று வானசாஸ்திரத்தையும், கிரஹகநிலையும், ஆதிமனிதனின் பருவகால கணக்குகளையும், அப்போதைய குமரிநிலப்பரப்பு அதன் பின் தமிழர் இருப்பிடம்பற்றி மிக மிக.....நீண்ட விளக்கம்கொடுத்து.சித்திரை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டுனுன் சொல்லிமுடிக்க நம்ம அலைபேசி பேட்டரியில்சார்ஜ் போகவும்சரியா இருந்ததுங்கோ. அவர்சொன்னவிளக்கத்தைஎழுதும் அளவிற்கு எனக்கு நேரமின்மையின் பொருட்டும்.நாலுவரியில் எழுதி நானும் இங்கே இருக்கிறேன் என்று காட்டிகொள்ள வேண்டியதால்.சுருக்கமாக சொல்லிவிடறனுங்க.

ஆதி மனிதன் விவசாயம் செய்ய நாட்களை சூரியனைகொண்டும், பருவநிலையை சந்திரனைகொண்டு ஆறுபருவமாக பிரித்து காலத்தை அறிந்துவைத்துள்ளான்.இதில் சூரியன் தெற்கே இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வான் உச்சிக்கு வருவது ஆண்டின் தொடக்கநாளாக கொண்டாடபடுவது பழங்காலத்துகுமரி நிலப்பரப்பின் தமிழர்களின் மரபு அந்த நாள் மார்ச் 21, அதன்பின் குமரிகண்டத்தை பெருங்கடல் ஆட்கொண்டபின் இடம் பெயர்ந்து வந்தபின் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை 1, தற்போதயை தமிழகத்திற்கு வந்தபின் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை பத்து,என்வே தமிழனின் மரபுபடி சூரியன்வான் உச்சிக்கு வரும் சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாட‌வேண்டும் என்பது நம் நண்பரின் வாதம்.

இது நம்ம நண்பர் சொல்ல கேட்டு எழுதிய செவிவழி செய்தி. இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று என‌க்கு தெரியவில்லை.இருந்தாலும் தமிழ் வருடத்தின் இருபத்திமூன்றாவ‌து விரோதிவருட புத்தாண்டு போகட்டும் அடுத்து வருகிற விக்ருதி வருடபுத்தாண்டு எப்போது கொண்டாடுவது என்று தெரிந்தால் நமக்கும்,அடுத்து ஆண்டு காலண்டரில் போட சிவகாசி மக்களுக்கும் வசதியாக இருக்கும்.

என‌வே அடுத்த தமிழ் புத்தாண்டு எப்போது தைமாதத்திலா?சித்திரையிலா?

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று மக்களிடம் ஒட்டுகேட்டு ஜஸ்கிரிமும் டிப்ஸ்ம் தர நமக்குவசதி இல்லைங்க.

சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கும் அளவிற்கு வயது வந்தவங்க பதிவு இல்லை நம்முடையது.

வழக்கமா பின்னுட்டம் போடும் பாசகார நண்பர்களே நம் குழப்பத்தை தீர்க்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

நீங்களும் வழக்கமா பின்னுட்டம் போடுவது போல,
இதிலும் அரசியலா?ஜஸ்கிரிமுக்கு டிப்ஸ்க்கும் விளக்கம் வேண்டும்? மறைந்து இருந்து அம்பு விடுறீங்க,கண்டன பேரணி நடத்துவோம்,ஏன் இப்படி? அப்படின் போடமா

உருப்படியான யோசனை சொல்லுங்க பாசமுள்ள நண்பர்களே

25 comments:

ஆ.ஞானசேகரன் said...

நண்பா பேசாம இரண்டையும் கொண்டாடிவிட்டு போங்களேன்.. ஆமாம் திடீர்னு வினாயகர் சதுர்த்தியை வட இந்தியர் பாணியில் கொண்டாடிகிட்டு வருகின்றார்களே தமிழர்கள்.. அதுக்கு ஏதாவது ஞாயம் சொல்லுராங்களா?

ச.பிரேம்குமார் said...

//சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கும் அளவிற்கு வயது வந்தவங்க பதிவு இல்லை நம்முடையது.//

அடேங்கப்பா, என்ன உள்குத்து ;-)

ச.பிரேம்குமார் said...

எந்த புத்தாண்ட கொண்டாடுகிறோங்கிறது முக்கியமில்லை... இந்த ஆண்டு ஏதாவது உருப்படியா செய்வோமாங்குறது தான் முக்கியம்

அதை பத்தி யோசிக்கலாமே :)

ஆதவா said...

பிரேம்குமார் சொல்வது கூட ஓரளவுக்கு சரிதான்..

நேற்று நம் நகரம் முழுக்க கோலாகலக் கொண்டாட்டம் தான்..... யாராவது (சட்டம் போட்ட கட்சிக்காரர்களே கூட) இது புத்தாண்டில்லை என்று விழாவை கொண்டாடாமல் இருந்தார்களா??? இல்லையே!!

சித்திரை ஒன்றுதான் எல்லா தென்மாநிலங்களுக்கும் ஏன்,. சிங்களவருக்கும் புத்தாண்டு... இதை யாராலும் மாற்றி வைக்க முடியாது!! நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன். தை ஒன்று, புத்தாண்டு என்பதையே மறந்துவிடுவார்கள் இன்னும் சிறிது காலத்தில்!!!!

((புத்தாண்டு மாற்றிவிட்டீர்கள்... பொங்கலையும் கொஞ்சம் மாத்தித்தான் பாருங்களேன் ))

சொல்லரசன் said...

இதுவும் நல்லதான் இருக்குது.
அப்ப ஒரே விஷயத்திற்கு இரண்டு விருந்து கொடுக்க வேண்டுமா?

சொல்லரசன் said...

பிரேம்குமார் said...
//அடேங்கப்பா, என்ன உள்குத்து ;-)//

அதை விட பெரிய உள்குத்து வைத்துள்ளேன் தெரியவில்லையா?

சொல்லரசன் said...

//எந்த புத்தாண்ட கொண்டாடுகிறோங்கிறது முக்கியமில்லை... இந்த ஆண்டு ஏதாவது உருப்படியா செய்வோமாங்குறது தான் முக்கியம்

அதை பத்தி யோசிக்கலாமே :)//

நன்றிங்க பிரேம்.
நல்ல யோசித்து இது மாதிரி சட்டங்களை தவிர்த்துவிடவேண்டும் என்று முடிவுசெய்து விட்டேன்

சொல்லரசன் said...

//நேற்று நம் நகரம் முழுக்க கோலாகலக் கொண்டாட்டம் தான்..... யாராவது (சட்டம் போட்ட கட்சிக்காரர்களே கூட) இது புத்தாண்டில்லை என்று விழாவை கொண்டாடாமல் இருந்தார்களா??? இல்லையே!!//

அதுதான் ஆதவா நமக்கும் கடுப்பு,தை முதல்நாளை கொண்டாட சொன்ன உடன்பிறப்பு நண்பனே உங்க ஏரியாவில் உள்ள பாபாவில் இருந்து வாழ்த்து சொல்கிறான்.

கோவி.கண்ணன் said...

//சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை 1, தற்போதயை தமிழகத்திற்கு வந்தபின் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை பத்து,//

தமிழகத்தில் சூரியன் உச்சிக்கு வந்து ஆட்சிக்கு வந்ததால் தான் புத்தாண்டு மாறுது. :)

தங்கமீன் said...

எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்னிக்குத்தான் புத்தாண்டு.

Anbu said...

எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்னிக்குத்தான் புத்தாண்டு.

repeat

பொன்.பாரதிராஜா said...

//வழக்கமா பின்னுட்டம் போடும் பாசகார நண்பர்களே நம் குழப்பத்தை தீர்க்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

அது வந்து நான் என்ன சொல்ல வரேன்னா..நீங்க தமிழ் புத்தாண்ட எப்போ வேண்டுமானாலும் கொண்டாடலாம்.புடிக்கலேன்னா விட்டுடலாம்.நீங்க எனக்கு எப்போ வாழ்த்து சொன்னாலும் நானும் உங்களுக்கு திருப்பி வாழ்த்து சொல்லுவேன்.நான் சொன்னாலும் நீங்க திருப்பி வாழ்த்து சொல்லணும்.அதனால தமிழ் புத்தாண்ட...ஐயோ யாராவது சொல்லுகிட்ட இருந்து என்ன காப்பாத்துங்களேன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

என்னைக் கேட்டா ரெண்டையுமே கொண்டாடலாம்னு சொல்லுவேன்..

//சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கும் அளவிற்கு வயது வந்தவங்க பதிவு இல்லை நம்முடையது.//

why this kolaveri?

சொல்லரசன் said...

//தமிழகத்தில் சூரியன் உச்சிக்கு வந்து ஆட்சிக்கு வந்ததால் தான் புத்தாண்டு மாறுது. :)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கோவியார்.
அப்ப இலை வந்தால் மாறுமா?

சொல்லரசன் said...

நகைக்கடை நைனா said...

//எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்னிக்குத்தான் புத்தாண்டு.//
முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
அப்ப தினமும் புத்தாண்டா!
பார்த்துங்கோ நகைகடையை நையான்டி நைனா அபேஸ் செய்துவிடபோகிறார்.

சொல்லரசன் said...

Anbu said...
/எனக்கு என்னிக்கு காசு கிடைக்குதோ அன்னிக்குத்தான் புத்தாண்டு.//
அப்ப உங்களுக்கும் தினமும் புத்தாண்டா!

சொல்லரசன் said...

பொன்.பாரதிராஜா said...
//அதனால தமிழ் புத்தாண்ட...ஐயோ யாராவது சொல்லுகிட்ட இருந்து என்ன காப்பாத்துங்களேன்....//

கொடுமை கொடுமையின் கோவிலுக்கு போன அங்க......
உங்கிட்ட போய் யோசனை கேட்ட என்னை......

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன்
//என்னைக் கேட்டா ரெண்டையுமே கொண்டாடலாம்னு சொல்லுவேன்..//

இரண்டு நாள் விடுமுறை கிடைக்கும் என்ற சந்தோசமா?

"உழவன்" "Uzhavan" said...

விரோதிக்கு மட்டும் வந்த சோதனையா இது? சிவகாசி மக்களுக்கும் வந்த சோதனைதான் இது.
நம்ம எதாவது யோசனை சொல்ல, ஆளுங்கட்சிக்காரங்க ஆட்டோல வீட்டுக்கு வர... எதுக்கு நமக்கு வம்பு :-) சித்திரை 1 தமிழ் புத்தாண்டு இல்லேனா, அந்த நாளுக்கு வேறென்ன சிறப்பு? கலைஞர் டிவி எப்படி சிறப்பு நிகழ்ச்சிகள் போடலாம்?
எது எப்படியும் போகுது. சித்திரை 1 விடுமுறையை மட்டும் நீக்கிடாதீங்க.
ஆனா ஒன்னுங்க.. தமிழ் நாட்டு தமிழனத் தவிர மற்ற எல்லா தமிழனும் சித்திரை 1 தான் புத்தாண்டா கொண்டாடுனாங்க

சொல்லரசன் said...

உழவன் சொல்லை கடைபிடிப்போம்.

ராம்.CM said...

நமக்கு இல்லா நாளும் புத்தாண்டுதான்.

சொல்லரசன் said...

வாழ்த்துகள் ராம்.

Suresh said...

//மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று மக்களிடம் ஒட்டுகேட்டு ஜஸ்கிரிமும் டிப்ஸ்ம் தர நமக்குவசதி இல்லைங்க.//

ஹா ஹ :-) நல்லா இருக்கு ;)

//சரி பதிவுலகத்தில் ஒட்டுகேட்க, 2000 ஹிட்ஸ் வாங்கும் அளவிற்கு வயது வந்தவங்க பதிவு இல்லை நம்முடையது.//

சீக்கிரம் உங்கள் பதிவும் வாங்கும் தலைவா.. உங்க பதிவு மக்களை கவர்ந்தால் போதும்.. நகைச்சுவை தேவை ஏனா அவன் அவன் வாழ்கையில் சோகமா இருக்கான் இதுல பதிவுல வேறயானு கேட்பாங்க..
உங்களிட்ம நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு... வாழ்த்துகள்

//வழக்கமா பின்னுட்டம் போடும் பாசகார நண்பர்களே நம் குழப்பத்தை தீர்க்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.//

இனி நானும் உங்க பாசகார நண்பன்:-)



//உருப்படியான யோசனை சொல்லுங்க பாசமுள்ள நண்பர்களே//

நம்க்கு யோசனை சொல்லு அளவுக்கு :-) அறிவு இல்லை ஹீ ஹீ மீ த எஸ்கேப்

சொல்லரசன் said...

Suresh said...


//இனி நானும் உங்க பாசகார நண்பன்:-)//

உங்கள் இனிப்புக்கு நன்றிங்க சக்கரை.

Anonymous said...

நண்பர்கள் சொல்வது போல இரண்டையும் கொண்டாடிட்டு போகவேண்டியதுதான்..