சிலபல மாதங்களுக்கு முன்பு தொடர்பதிவு எழுதஎன்னை சிலகவிதைகள் உமா அழைத்திருந்தார்.சிலமாதங்களாக இந்த பதிவுலகம் பக்கம் வரமுடியாத காரணத்தாலும் சிலபல வேலைபளு காரணமாகவும் எழுதமுடியாமல் இருந்தது.சனிக்கிழமை அன்று திருப்பூர் மாநகருக்கு வருகை புரிந்த மதுரை மாநகர வலைபதிவர்கள் ஒருங்கினைப்பாளர் கார்த்திகைபாண்டியன் அவர்கள் என்னிடம் பேசிகொண்டுஇருக்கும்போது,உமா கவிதைகள் மட்டும்தான் எழுதுவார்,அவரே அதிசயமா தொடர்பதிவு எழுதி உங்களை அழைத்துயிருக்கார் அதை அலட்சியபடுத்தமால் சீக்கிரமா பதிவு போடுப்பா என்று திட்டியபின்தான்எனக்கு
புரிந்தது. அவரது அழைப்பை ஏற்று எழுதமால் இருப்பது அவரை அலட்சியபடுத்தியது போல்
ஆகிவிடும் என்பதால் காலம்தாழ்த்திய இந்ததொடர்பதிவு.
அழகு
பாவங்கள் எங்கு இல்லையோ,அங்கு அழகும் இளமையும் நிரந்தரமாக இருக்கும்.அழகில்லா மனிதனும் இல்லை,அழகில்லா பொருளும் இல்லை,குழந்தைக்கு மழலைமொழி அழகு, பெண்க்குபுன்னகை அழகு,ஆணுக்கு சொல் அழகு,கவிஞர்க்கு கற்பனைஅழகு கலைஞனுக்கு கலை அழகு இப்படி உலகில் பிறந்த அனைவருக்கு ஏதோவொன்று அழகுதான்.
பளபளக்கும் உடையோ,மினுமினுக்கும் முகசாயமோ,சிவப்புதோல்தான் அழகு என்பதைவிட மனிதனின் அக அழகைஆராதிப்பதே சிறந்தது.
பணம்
வாழ்க்கைக்கு தேவையான பணம் போதும் என்பது போய், பணமே வாழ்க்கை என்னும் நிலை உருவாகிவிட்டது.நமது தேவைகள்அளவீடு இல்லாமல் போய்கொண்டு இருப்பதால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் நாம்வாழ்க்கையில்நிம்மதியை, பாசத்தை,பந்தத்தை இழந்து,பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதுதான் இன்றைய உண்மை. பணம்பத்தும் செய்யும் என்பார்கள் உண்மைதான்,ஆனால் எந்த பத்து என்பதுதான் கேள்வி?பொய்,பித்தாலாட்டம், சூது,பொறமை, கலப்படம்,ஊழல், திருட்டு, நம்பிக்கைதுரோகம், ஏமாற்றுதல்,ஏளனம்,இந்த பத்தில் ஏதாவது ஒன்று இல்லாமல் பணம் சம்பாதித்தவரை உங்களால் உலகத்தில் அடையாளம் கானமுடிகிறதா?
காதல்
கற்கால காதல் மனிதனுக்கு நாகரீகத்தை கற்று கொடுத்தது,அவனில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாகியது,தலைவனுக்கும் தலைவிக்கு ஏற்பட்ட சங்க கால காதலால் கலைகள் உருவானது,அவர்கள் பிரிவும்,ஏக்கமும் காவியங்கள் பல உருவாககாரணமாகியது,அதன்பின் வந்த காதலில் அன்பும் பன்பும் இருந்தது,ஆனால் தற்போதயை காதலில்??????????
ஒரு கல்யானமாக ஆனும்,பெண்னும் காதல்தூதுவிட்டு,பொது இடத்தில் கட்டியனைத்து,காமம் செய்வதுதான் காதல்என்று புது அனர்த்தம் ஆகிவருகிறது.கணவன் மனைவியிடைய உள்ள அன்பில் பாசத்தில் காதல் இல்லையா?,அம்மா பிள்ளையிடம் இருக்கு பாசத்திலும்,ஏக்கத்திலும் காதல் இருக்கிறது.ஆகவே காதலிக்ககற்று கொள்ளவும் காதலின் உண்மையான அர்த்தத்தை கற்றுகொண்டு.
கடவுள்
தூணிலும் இருப்பார் துருப்பிலும் இருப்பார் உண்மைதான்.பசியோடு இருக்கும் ஒருவனுக்கு ரொட்டிதுண்டு கிடைத்தால் அதுதான் அவனுக்குகடவுள்,இது காந்தி சொன்னது.விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிகொண்டுஇருப்பவரை மருத்துவமனையில் சேர்க்க உதவிசெய்பவர் அடிபட்டவனுக்கு கடவுள்.தனக்கு கிடைக்காது,தன்னால் முடியாது என்று நினைப்பவர்களுக்கு உனக்கு கிடைக்கும் உனக்கு முடியம் என ஒரு நம்பிக்கையை தோற்றுவிக்கும் நம்பிக்கைதான் கடவுள்.
இந்த நம்பிக்கைஇந்துவுக்கு கிருஷ்ணன் ஆகவும்,கிருஸ்துவர்களுக்கு இயேசு ஆகவும்,முஸ்ஸிம்களுக்கு அல்லா ஆகவும் இருக்கிறார்கள்.ஆக நம்பிக்கையே கடவுள்.
இந்த தொடர்பதிவு முடிந்து பலதொடர்பதிவு பதிவுலகத்தில் வலம்வந்துவிட்டது,
மேலும் இந்ததொடர்பதிவை அனைவரும் எழுதியிருப்பார்கள் என்பதாலும் தொடர் அழைப்பை இத்துடன் முடிந்துகொள்கிறேன்
25 comments:
வாங்க சொல்லரசன்,... வணக்கம்
//அவரது அழைப்பை ஏற்று எழுதமால் இருப்பது அவரை அலட்சியபடுத்தியது போல்
ஆகிவிடும் என்பதால் காலம்தாழ்த்திய இந்ததொடர்பதிவு.//
மகிழ்ச்சி
தமிழ்மணத்திற்கு அனுப்பியாச்சு....
லேட்டா எழுதினாலும் உருப்புடியா எழுதி இருக்கீங்க நண்பா.. தொடருங்கள்
வாழ்த்துக்கள் சொல்லரசன். மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்திருக்கிறேன். அதனால் அலட்சியப்படுத்துவதாய் நினைப்பதில் அர்த்தமே இல்லை. நினைக்க மாட்டேன். இருந்தாலும் பல வேலைகளுக்கிடையில் நினைவாக எழுதியது மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. நன்றி. கார்த்திகைப்பாண்டியன் அவர்களுக்கும் என் நன்றி.
அன்புடன் உமா.
சூப்பரா எழுதி இருக்கீங்க சொல்லரசன்.
அழுவாதீங்க... நானும் உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்... அவ்வ்வ்வ்.....
http://yaavatumnalam.blogspot.com/2009/11/blog-post_22.html
நம்பிக்கையே கடவுள்ன்றது மிகச்சரி.
அன்பின் சொல்லரசன்
மதுரை மாநகர வலைப்பதிவர்கள் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைப் பாண்டியன் - பரவா இல்லையே
ம்ம்ம் தொடர் பதிவு நன்று
அழகு - முக அழகை விட அக அழகை ரசிக்க வேண்டும் - உண்மை
பணம் - கருத்து சரிதான் - இருப்பினும் உலகில் இன்னும் ந்லல பணக்காரர்கள் இருக்கிறார்கள்
காதல் - நல்லதொரு விளக்கம் - பொதுவாக காதல் என்பது காதலர்களின் இடையே ஏற்படும் நட்பு அன்பு இவற்றைக் குறிப்பிடும் சொல் தான் - கடவுள் மீது காதல் கொண்டவர்களும் உண்டு
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வணக்கம் நண்பா. உங்களை இப்பதிவின் மூலம் காண்பதில் மகிழ்ச்சி.
அழகான தொடர்பதிவு.
நம்பிக்கை தான் கடவுள்..ரொம்ப பிடிச்சிருக்கு..
ஆனா நம் மக்கள் என்னமோ..திருவண்ணாமலை போய் தீபம் ஏற்றினால் மட்டுமே கடவுளை காணலாம் என்கிறார்கள்..
தலைவரே! நல்லா இருக்கு. பணம் பற்றிய உங்க பத்தி உண்மை. காதலும் அப்படியே....
கடவுள்,ஒரு கட்டுப்பாடு. காதலைப் போல கட்டட்டு திரிந்த கற்காலத்தில் ஒரு கட்டுப்பாட்டுக்கென உருவாக்கப்பட்டவர் கடவுள்.
ஆ.ஞானசேகரன் said...
//வாங்க சொல்லரசன்,... வணக்கம்//
நன்றிங்க
//தமிழ்மணத்திற்கு அனுப்பியாச்சு....//
அங்கே நமக்கென்னவேலை
கார்த்திகைப் பாண்டியன் said...
//லேட்டா எழுதினாலும் உருப்புடியா எழுதி இருக்கீங்க நண்பா.. தொடருங்கள்//
இதுவரைக்கு உருப்படியா எழுதவில்லையின்னு சொல்லுங்க
உமா said...
//வாழ்த்துக்கள் சொல்லரசன். மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்திருக்கிறேன். அதனால் அலட்சியப்படுத்துவதாய் நினைப்பதில் அர்த்தமே இல்லை. நினைக்க மாட்டேன். இருந்தாலும் பல வேலைகளுக்கிடையில் நினைவாக எழுதியது மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. நன்றி. கார்த்திகைப்பாண்டியன் அவர்களுக்கும் என் நன்றி.
அன்புடன் உமா.//
உங்களுக்கும் என் நன்றிங்க உமா
சுசி said...
சூப்பரா எழுதி இருக்கீங்க சொல்லரசன்.
நன்றி
அழுவாதீங்க... நானும் உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்... அவ்வ்வ்வ்.....
http://yaavatumnalam.blogspot.com/2009/11/blog-post_22.html
மறுபடியும்தொடர்பதிவா
வெயிலான் said...
//நம்பிக்கையே கடவுள்ன்றது மிகச்சரி.//
நன்றி தலைவரே
cheena (சீனா) said...
அன்பின் சொல்லரசன்
மதுரை மாநகர வலைப்பதிவர்கள் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைப் பாண்டியன் - பரவா இல்லையே
நீங்கதானே சொன்னீங்க
ம்ம்ம் தொடர் பதிவு நன்று
அழகு - முக அழகை விட அக அழகை ரசிக்க வேண்டும் - உண்மை
பணம் - கருத்து சரிதான் - இருப்பினும் உலகில் இன்னும் ந்லல பணக்காரர்கள் இருக்கிறார்கள்
காதல் - நல்லதொரு விளக்கம் - பொதுவாக காதல் என்பது காதலர்களின் இடையே ஏற்படும் நட்பு அன்பு இவற்றைக் குறிப்பிடும் சொல் தான் - கடவுள் மீது காதல் கொண்டவர்களும் உண்டு
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
" உழவன் " " Uzhavan " said...
//வணக்கம் நண்பா. உங்களை இப்பதிவின் மூலம் காண்பதில் மகிழ்ச்சி.
அழகான தொடர்பதிவு.//
நன்றிங்க உழவன்
Anbu said...
நம்பிக்கை தான் கடவுள்..ரொம்ப பிடிச்சிருக்கு..
ஆனா நம் மக்கள் என்னமோ..திருவண்ணாமலை போய் தீபம் ஏற்றினால் மட்டுமே கடவுளை காணலாம் என்கிறார்கள்..
//அது அவர்களின் நம்பிக்கை//
முரளிகுமார் பத்மநாபன் said...
தலைவரே! நல்லா இருக்கு. பணம் பற்றிய உங்க பத்தி உண்மை. காதலும் அப்படியே....
கடவுள்,ஒரு கட்டுப்பாடு. காதலைப் போல கட்டட்டு திரிந்த கற்காலத்தில் ஒரு கட்டுப்பாட்டுக்கென உருவாக்கப்பட்டவர் கடவுள்.
//கருத்துக்கு நன்றிங்க//
மிக நன்று.
puthu padivu podunga sir
வணக்கம் சொல்லரசன். சில நாட்களாய் பதிவுகளைக் காணலையே?
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
✔️Open the web browser and visit McAfee.com/activate. ✔️Sign in to your McAfee Account. ✔️Enter 25 Digit Mcafee Product key to Activate it.
mcafee.com/activate
Post a Comment