மத்தியஅரசின் 2009 2010 பட்ஜெட்டில் அரசியல்கட்சிக்கு கொடுக்கும் அன்பளிப்புக்கு வருமானவரி விலக்கு அளித்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,அரசியல்வாதிகளுக்கு நன்கொடை கொடுக்கவேண்டும் என்றுசொல்லாமல் சொல்வதுபோல் உள்ளது என்பது மக்களின் கருத்து. அரசியல்வாதி வாங்கினால் அன்பளிப்பு, அரசு ஊழியன் வாங்கினால் லஞ்சமா? இதுநேற்று நான் சந்தித்தஅரசு ஊழியரின் கேள்வி.
நிலம் வாங்கி கிரயம் செய்வதில் தொடங்கி,நிறுவனம் தொடங்கும்வரை பதிவுதுறை,
உள்ளாட்சிதுறை,வருவாய்துறை,மின்சாரதுறை,தொழில்துறை,என எல்லாதுறைகளிலும் அவர்களுக்கு அனுமதி வழங்க சில வேலைகளையும் அவர்களுக்கு செய்து கொடுப்பதற்கு நாங்கள் ஏதாவது வாங்கினால் லஞ்சம் வாங்குவதாக கூப்பாடுபோடுகிறார்கள்,ஆனால் எந்த வேலையும் செய்யாமல்கரைவேட்டிகள் ரசீதுபுக் துக்கிகொண்டு வந்துவிட்டால் அன்பளிப்பு என்றுகொடுக்கிறார்கள்,இதற்கு இப்போது அரசங்கஅனுமதியும்கொடுத்துவிட்டார்கள் என நமதுஅரசங்க ஊழியர் நண்பர் புலம்பி அவர் கேட்ட கேள்விதான் பதிவின் தலைப்பு.
"அன்பளிப்பு வேண்டுவோர் சங்க மூலம் அனுகவும்" என்கிற அறிவிப்பு பலகைகளை எங்க ஊரில் நீங்க பார்க்கலாம் அந்த அளவுக்கு நொந்தபோன நிறுவனங்கள் இங்குஅதிகம்,கட்சி பாகுபாடுயின்றிஅனைத்துவிசயத்திற்கும்,நிதி திரட்டுவதில் பலே கில்லாடிகள்.இருசக்கரவாகன நிதி வசூல்புக் அடித்து பத்துசக்கர வாகனம் வாங்குஅளவிற்கு வசூல் செய்யும் சூரர்கள் நிறைந்த ஊரில்,இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நிதி கொடுக்கமறுத்தால் அதை மனதில் வைத்துகொண்டு லெட்டர்பேடுகட்சிகள்கூட நடத்தும் பந்த்சமயங்களில்தாக்குதற்கு பயந்து பந்த என்றாலே விடுமுறை என்று தொழிலாளர்கள் சுற்றுலாகிளப்பும் அளவிற்கு அன்பளிப்பு ஆட்டிபடைக்கிறது இங்கு,இனி வரி விலக்கு இருக்கிறது என்று சொல்லி தைரியமாக ரசீதுபுக் துக்கிகொண்டுவந்துவிடுவார்கள் என்ற கவலை இப்போதே பலருக்கு வந்துவிட்டது.
கட்அவுட் நிதியில் தொடங்கி கட்சிமாநாடு வரை நிதி கொடுக்கும் பெரும் தொழில்நிறுவனங்களுக்கு அந்த பணத்தை கணக்குகாட்டலாம் என்பது சிறியஆறுதல்,ஆனால் சிறு,குறு நிறுவனங்களுக்குதிண்டாட்டம்தான். ஆளும்கட்சி முதல் லெட்டர்பேடு கட்சிவரை இனி ரசீதுபுக்கை தூக்கிகொண்டு
வசூல் வேட்டையில் இறங்கிவிடுவார்கள்.இப்படி வசூல் செய்து சேர்த்த பணத்தைதான் தேர்தல் நேரங்களில் செலவு செய்கிறார்கள்,ஆனால் ஏதோஇவர்கள் கையில் இருந்துகொடுப்பதுபோல் ஓட்டுக்கு அவ்வளவு கொடுத்தோம்இவ்வளவு கொடுத்தோம் என அளப்பார்கள்.இந்த அறிவிப்பை பார்த்தால் அரசியல்கட்சிக்கு தொழில்நிறுவனங்கள் நன்கொடை கொடுக்கவேண்டும் என்றுமறைமுக சட்டம் போட்டமாதிரிதான் தெரிகிறது.
கோவில்திருவிழா நிதிவசூல் செய்தால் திருவிழா முடிந்தபின் ஒருரூபாய் கொடுத்துயிருக்கிறேன் கணக்குகேட்க எனக்கு உரிமையுள்ளது என்று ரவுசுவுடும் மக்கள்,இந்த அரசியல்வாதிகளிடம் கணக்குகேட்ட சரித்திரம் உண்டா?இதனால்தான் ரசீதுபுக் அடித்து பொழப்புநடத்தும் ஊருக்கு நாலுபேர் இனிதெருவுக்கு நாலுபேரகாக மாறுவார்கள்.
நன்கொடை கொடுப்பவர்கள் நன்கொடைவாங்குபவரிடம் கணக்கு கேட்கும் உரிமை உண்டு என சட்டத்தில் இடமுள்ளது என்றுகூறுகிறார்கள்,அப்படியானல் அரசியல்கட்சி வசூலிக்கும் நன்கொடைக்கு கணக்கு கேட்க சட்டத்தில் இடமுள்ளதா?இது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அரசியல் கட்சிக்குவிளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவர்களா?இப்படி வழக்கு தொடருவார்கள் என்ற பயம் வந்தால்தான் அவர்களும் கொஞ்சமாவது திருந்துவார்கள் இல்லையெனில் இன்று நிறுவனங்களில் வசூல் வேட்டைநடத்துபவர்கள் நாளைவீட்டிற்கு வீடு நடத்து காலம் வெகு தொலைவில் இல்லை
25 comments:
இப்டி முழுங்குறது போறாதுன்னு மத்த விஷயத்திலயும் இல்ல கை வரிசைய காட்டிடுறானுங்க. சுனாமி நிதி முடிஞ்சு இப்போ இலங்கை மக்களுக்கு நிதின்னு ஆரம்பிச்சிருக்கானுங்க. ஆனா அந்த ஜனங்களோட வயித்தெரிச்சல் சும்மா விடாது.
அய்.. சுசி நீதாண்டி பஸ்டு... ஸ்வீட் எடு கொண்டாட...
ஏதாவது காரணம் அவர்களுக்கும் கிடைத்து விடுகிறது,கருத்துக்கு நன்றிங்க சுசி.
அப்படியே நமக்கும் கொஞ்சம் ஸ்விட் அனுப்பிவிடுங்கள் அதாவது அசலாக இருக்குமா?
அதேல்லாம் இந்தியன் தாத்தா வந்தாலே இந்த அரசியல் வியாதிகள் அன்பளிப்பும் அரசு ஊழியர்கள் லஞ்சமும் கேட்பாங்கப்பா..!
ஏப்பா நைனா, எதுவும் எலெக்சன் வருதாப்பா...?
"சொல் ராசா" பதிவெழுதிருக்காரு..!
அட, ஆமா இளையான்குடி இடைத்தேர்தலு..!
:)
நைனா... டேக்கிங் சார்ஜ்....
ஸ்டார்ட் மீசிக்...
நைனா என்ட்ரி....
ஆமா. டக்கு.... எலீக்சன் கம்மிங்....
சோ
"வோர்டுகிங்" என்ட்ரி.
டக்ளஸ்....... said...
//ஏப்பா நைனா, எதுவும் எலெக்சன் வருதாப்பா...?
"சொல் ராசா" பதிவெழுதிருக்காரு..!
அட, ஆமா இளையான்குடி இடைத்தேர்தலு..!//
அதான் போன பதிவிலே சொல்லிட்டேன் இடைதேர்தல் வருதுன்னு.
நையாண்டி நைனா said...
//ஆமா. டக்கு.... எலீக்சன் கம்மிங்....
சோ
"வோர்டுகிங்" என்ட்ரி.//
நைனா தமிழில் சொல்வேண்டியதானே.மகாராஷ்டிரா மாரத்தியருக்கு கோஷத்தால் உங்களுக்கு பயம் வந்துருச்சா?,கவலைபடதீங்கோ தமிழகத்துக்கு வந்தால் நாங்க இருக்கிறோம் நைய ச்சே நல்ல கவனிக்க.
ஆமா நண்பரே.. இது ரொம்ப அநியாயம். இதை எதிர்த்து யாராவது பொது நல வழக்கு தொடரனும். ஐயா ட்ராபிக் ராமசாமி எங்க இருக்கீங்க? சீக்கிரம் ஒரு வழக்கு போடுங்க.
பெரிய நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு தொகையை அள்ளிக் கொடுக்கும். அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்கு தேவையான விசயங்களை (கணக்குப் போட்டு) முடித்துக் கொள்வார்கள்.
சொல்லரசன்,
சொல்லடியாக எழுதியிருக்கிறீர்கள்.
//கோவில்திருவிழா நிதிவசூல் செய்தால் திருவிழா முடிந்தபின் ஒருரூபாய் கொடுத்துயிருக்கிறேன் கணக்குகேட்க எனக்கு உரிமையுள்ளது என்று ரவுசுவுடும் மக்கள்,இந்த அரசியல்வாதிகளிடம் கணக்குகேட்ட சரித்திரம் உண்டா?//
அதானே... ஏன் கேட்பதில்லை.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
" உழவன் " " Uzhavan " said..
//ஆமா நண்பரே.. இது ரொம்ப அநியாயம். இதை எதிர்த்து யாராவது பொது நல வழக்கு தொடரனும். ஐயா ட்ராபிக் ராமசாமி எங்க இருக்கீங்க? சீக்கிரம் ஒரு வழக்கு போடுங்க.//
இப்படி அனைவரும் அடுத்தவர்கள் பார்த்துகொள்வார்கள் என இருப்பதுதான் (என்னை உட்பட)அவர்களுக்கு கொண்டாட்டம்
குடந்தை அன்புமணி said...
பெரிய நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு தொகையை அள்ளிக் கொடுக்கும். அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்கு தேவையான விசயங்களை (கணக்குப் போட்டு) முடித்துக் கொள்வார்கள்.
இந்த முடித்துகொடுப்பவர்கள் அரசு ஊழியர்களாம் அதனால்தான் அந்த புலம்பல்
"அகநாழிகை" said...
//சொல்லரசன்,
சொல்லடியாக எழுதியிருக்கிறீர்கள்.//
நீண்ட இடைவெளிக்கு பின் நம்ம பக்கம் வந்துயிருக்கிங்க,கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
சாதி, லஞ்சம் , அடுத்தது என்ன ? ஜென்டில் மென் ,இந்தியன் அடுத்து அந்நியனா ??
சுந்தர் said...
ஜென்டில் மென் ,இந்தியன் அடுத்து அந்நியனா ??
இவங்க எல்லாம் யாருங்கோ?
நியாயமான கேள்விகள்.. ஆனால் பதில் கிடைக்குமா என்பதுதான் வேதனை..
ல்ஞ்சமே தொழிலா உள்ள துறைகள் நிறைய உள்ளது!!
கருத்துக்கு நன்றிங்க கா.பா
கருத்துக்கு நன்றிங்க டாக்டர் சார்,எல்லா துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பது கடினமான் காரியம் ஆனால் கட்டுபடுத்த ஏதாவது செய்யவேண்டும்
என் பக்கத்தில உங்களுக்கு ஒரு விருது காத்திட்ருக்கு. அடுத்த தேர்தலுக்கு வரும்போது மறக்காம வாங்கீட்டுப் போங்கப்பு. இப்போ நீங்கதான் எனக்கு ஸ்வீட் அனுப்பணுமாக்கும்.
நன்றிங்க சுசி,சுவிட் விரைவில் அனுப்புகிறேன்.
//இந்த அறிவிப்பை பார்த்தால் அரசியல்கட்சிக்கு தொழில்நிறுவனங்கள் நன்கொடை கொடுக்கவேண்டும் என்றுமறைமுக சட்டம் போட்டமாதிரிதான் தெரிகிறது.//
இல்லாட்டியும் சும்மாவா இருப்பார்கள்..
அம்பாணி வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றில் படித்தது. அவர் சொல்கின்றார், "நான் இந்திய அரசாங்கத்தை புரிந்துக்கொண்டேன் என்னால் வெற்றியடைய முடிந்தது"
நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள் என்னதான் நடக்குதுன்னு....
நல்ல பதிவு.சாரி, லேட்டானாலும் லேட்டஸ்ட் தான்.
Post a Comment